Saturday, April 11, 2015

குழந்தை வயதுக்கேற்ப பேசஆரம்பிப்பாள்

என் மூன்று வயது மகள் மிகவும் தாமதமாகத்தான் பேசத் தொடங்கினாள். தற்போதும் பேச்சு சரியாக வரவில்லை. நாங்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். ஆனாலும், மற்ற குழந்தைகள்போல என் மகளும் சரளமாக பேசிப் பழகவும் அறிவுத்திறனுடன் இருக்கவும் என்ன செய்ய வேண்டும்? பார்ப்பவர்களெல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுகிறார்கள். மருத்துவர்களின் முயற்சிகளும் தோல்விகளைத்தான் சந்திக்கின்றன. என் வேதனை தீர நான் என்ன செய்ய வேண்டும்?

இந்து மதக் கோட்பாடுகளில் முந்திய பிறவிகளின் நல்லவை, தீயவை எல்லாம் நம்மைத் தொடர்கின்றன என கூறப்பட்டுள்ளது. அதன்படி பிறக்கும்போது சில குறைகளுடன் பிறப்பு இருந்தாலும், நாம் செய்யும் புண்ணியங்களுக்கும் இறைவழிபாட்டிற்கும் பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதனால், இந்த விஷயத்தை உங்கள் பார்வையிலிருந்து பார்த்தாலும் மூன்று வயதுக்கு தாமதமாகத்தான் பேசியிருக்கிறாள். தாமதத்திற்காக கவலைப்படாதீர்கள். மகள் வெகு சீக்கிரம் நன்றாக பேசப்போகிறாள் என்று முழுமையாக நம்புங்கள்.

கலைவாணியின் அருள் உள்ளோருக்கு நல்ல குரல் வளம் அமையும். ஒருமுறை மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கூத்தனூர் சரஸ்வதியை தரிசித்து விட்டு வாருங்கள்.

வீட்டிலேயே காய்ச்சின பால், தேன், சுத்தமான நெய் மூன்றையும் ஒவ்வொரு டீஸ்பூன் என கலந்து கலைவாணி படத்திற்கு முன் வையுங்கள். கீழ்க்காணும் ஸ்லோகத்தை 54 தடவை படியுங்கள்.

இப்போதைக்கு இது ஒன்றுதான் முக்கியப்பணி என்பதாக அமர்ந்து விடுங்கள். தொடர்ந்து 12 நாட்களுக்கு சரஸ்வதிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அந்த பிரசாதத்தை குழந்தைக்கு கொடுங்கள். விரைவில் குழந்தை அவள் வயதுக்கேற்ப பேசஆரம்பிப்பாள்.

ச்வேதாக்ஷ ஸூத்ர மாலாச
ச்வேத புஷ்போப சோபிதா
சவேத பத்மாஸனா வாணீ
ச்வேதாலங்கார பூஷிதா
ஸ்ம்ருதி சக்தி: புத்தி சக்தி:
வாக்சக்தி ஸ்வரூபிணி
ஸாபாரதீ ப்ரஸன்னா
ஸ்யாத் ரமதாம் வதனாம்புஜே                                                 http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=28


http://sasthraa.com/gallery.html

No comments:

Post a Comment