Wednesday, March 21, 2018

flower waste at temples are reused by https://www.helpusgreen.com/collections/all

Sunday, March 4, 2018

பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார்

🐘 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் Suchindram Kanyakumari Dist, தாணுமாலயன் கோவிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரை காணலாம். 


🐘 பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி என பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.

🐘 இக்கோவில் நாகர்கோவில்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

🐘 தாணுமாலயன் என்ற இக்கோவிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.

🐘 17ஆம் நு}ற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலானது கேரளத்தை சேர்ந்த நம்பு+திரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பு+திரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர்.

🐘 இந்த கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.

🐘 பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தெய்வமாக காட்சி தருகிறாள் கணேஷினி.

🐘 தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன. அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரம்மிப்பின் உச்சம். 

🐘 மேலும் இக்கோவிலில் தான் 22அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நவகிரகத்திற்கு செய்யக்கூடிய எளிய பரிகாரங்கள் !!


🌟 ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சு+ரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு விஷ்ணுவும், குருவுக்கு தட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகருமாகும். இப்பொழுது நவகிரகத்திற்கான எளிய பரிகாரங்கள் பற்றியும், ஹோமம் பற்றியும் பார்ப்போம்.

🌟 பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும், கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

🌟 அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

🌟 சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபு+ரணியின் கடாட்சம் கிட்டும்.

🌟 இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

🌟 வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுகூலம் கிடைக்கும்.

ஹோமம் மூலம் செய்யக்கூடிய பரிகாரங்கள் :

🌟 அனைத்து கிரக தோஷத்திற்கும் நவகிரக ஹோமம் நல்லது. பாலாரிஷ்ட தோஷம், அற்ப ஆயுள் தோஷம் போன்றவற்றுக்கு ஆயுள் ஹோமம் சிறந்தது.

🌟 விபத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள், கண்டக தோஷம் போன்றவற்றை நிவர்த்தி செய்ய மிருத்யுஞ்சய ஹோமம் சிறந்தது.

🌟 எதிரிகளின் தொல்லைகள், செய்வினை தொல்லைகள் உள்ளவர்கள் சுதர்சன ஹோமம் அல்லது மிருத்யுஞ்சய ஹோமம் செய்தல் நல்லது. இதே ஹோமங்களை மாரக தசா புத்திகள் நடக்கும்போதும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

🌟 ஏழரைச் சனி நடக்கும்போது நவகிரக ஹோமமும், கணபதி ஹோமமும் நடத்தினால் ஏழரைச் சனியினால் ஏற்படும் தடைகள் மட்டுப்படும்.

🌟 திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யலாம்.

🌟 வெள்ளிக்கிழமைகளில் கோ புஜை செய்வது மகாலட்சுமியின் கடாட்சம் பெருக வழி செய்யும். 

சாப்பிட்டவுடன் தூங்கினால் என்ன ஆகும்?


சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத விஷயங்கள்!!

👉 சாப்பிட்டவுடன் செய்யும் சில செயல்கள் நம் உடல்நலத்தைப் பாதிக்கும். இப்போது எந்த விஷயங்களை சாப்பிட்டவுடன் செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.

👉 சாப்பிட்ட உடனேயே தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனென்றால் சாப்பிட்டவுடன் வயிறு, செரிமானத்துக்கு உடலை தயார்படுத்தி கொண்டிருக்கும். அந்த நேரத்தில் தூங்கினால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

👉 சாப்பிட உடனே பகல் மற்றும் இரவில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

👉 சாப்பிட்ட இரண்டு மணி நேரம் வரை, உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது செரிமானத்துக்கு இடையு+றாக அமைந்து உணவு செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

👉 சாப்பிட்டவுடன் குளிப்பதும் தவறு. ஏனெனில் குளிக்கும்போது உடலில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும். அதற்கேற்ப கை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் வேகமும் கூடும். இதன் காரணமாக செரிமானமாவதற்கு வயிற்றுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவு மிகவும் குறையும். எனவே அது வயிற்றிலுள்ள செரிமான உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, செரிமானத்தையும் தாமதப்படுத்துகிறது.

👉 சாப்பிட்டவுடன் தேநீர் குடிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேநீர் உடலில் உள்ள இரும்புச்சத்து மற்றும் தாதுச்சத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

👉 சாப்பிட்டவுடன் 20 நிமிடங்களுக்கு பிறகே தண்ணீர் குடிப்பது சிறந்ததாகும். அவசியமாக இருந்தால் சிறிது தண்ணீர் பருகலாம்.

👉 சாப்பிட்டவுடன் சிகரெட் பிடிப்பதும் தவறான பழக்கமாகும். ஏனெனில் செரிமானம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் அதனுடன் கலந்து உடல்நலப் பாதிப்புகளை உருவாக்கும்.

👉 சாப்பிட்டவுடன் பழங்களை உண்பதால் வயிற்றில் உப்புசம் ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்தோ பழங்களை உண்ண வேண்டும்.

வீட்டில் பூஜை செய்யும் முறைகள் !!


நம் வீட்டு புஜை அறைகளில் சாமி படங்களை வைத்து வணங்குகிறோம். ஆனால், புஜை அறைகளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

🌟 நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

🌟 யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

🌟 புஜையின்போது விபுதியை நீரில் குழைத்து புசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபுதியை நீரில் குழைத்து புசலாம்.

🌟 புஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

🌟 விரத தினத்தில் தாம்பு+லம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

🌟 ஈர உடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துண்டு போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

🌟 சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

🌟 பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

🌟 கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அனுகிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

🌟 தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

🌟 விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

🌟 விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுவதோ கூடாது.

🌟 எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

திருஷ்டி கழிக்கும் முறைகள்


கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதைத்தான் திருஷ்டி என்கிறார்கள். திருஷ்டியினை கழிக்கும் வழிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

கற்புரம் ஏற்றுதல்: 🌟 தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்புரத்தை வாசலில் போட்டுவிடவும். கற்புரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.

மிளகாய் சுற்றி போடுதல் :🌟 சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும்.

உப்பு சுற்றி போடுதல் :🌟 கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்பொழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.

கருப்பு வளையல் :🌟 பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடுவதால் குழந்தைகளின் மேல் விழும் திருஷ்டி காணாமல் போகும்.

மண் :🌟 சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும்.

எலுமிச்சை குங்குமம் :🌟 சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம், வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிந்தால் திருஷ்டி கழிந்து விடும்.

புசணிக்காய் உடைத்தல் 🌟 புசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பு+ரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.

தேங்காய் உடைத்தல் 🌟 ஒரு தேங்காயின்மேல் கற்பு+ரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.