Thursday, October 30, 2014

உடனடி பலன் தரும் பதிகங்கள்

முதல் பாவம்
1 ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : காந்தாரப்பஞ்சமம் (3--22) ராகம் : கேதாரகௌளை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: சீர்காழி

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே
மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே
நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;

கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே
கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;

பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே
வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;

தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே

புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே
நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே
திருச்சிற்றம்பலம்

இரண்டாம் பாவம்
2 பொருளாதாரநிலை சீர்பெறுதவற்கும், வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : காந்தாரப்பஞ்சமம் (3--4) ராகம் : கேதாரகௌளை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவாவடுதுறை
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வாழ்வினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்;
தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
நனவினும் கனவினும் நம்பா, உன்னை
மனவினும் வழிபடல் மறவேன், அம்மான்
புனல்வரி நறுங் கொன்றைப் போது அணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடிஅலால், அரற்றாது என் நா;
கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
கையது வீழினும் கழிவு உறினும்
செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மைஅணி மிடறு உடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வெம்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்
எந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்தவெண் பொடிஅணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்புடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்
சீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன்,
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட, வரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடிலால் உரையாது, என் நா;
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன்அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேல்படை எம் இறையை
நலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன
விலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார்
வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர் வியன் உலகம் நிலையாக முன்ஏறுவர்; நிலைமிசை நிலைஇலரே
திருச்சிற்றம்பலம்
3 உணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : கொல்லி (7-34)  ராகம் : நவரோசு
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருப்புகலூர்
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே;
எந்தை புகலூர் பாடுமின்; புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்,
ஏத்தலாம்இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
மிடுக்கு இலாதானை வீமனே,
விறல் விசயனே, வில்லுக்கு இவன் என்று
கொடுக்கிலாதானைப் பாரியே
என்று கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக்கொள் மேனி, எம் புண்ணியன்,
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
காணியேல் பெரிது உடையனே,
கற்று நல்லனே, சுற்றம் நல்கிளை
பேணியே, விருந்து ஓம்புமே
என்று பேசினும் கொடுப்பார் இலை
பூணி பூண்டு உழப்புள் சிலம்பும்,
தண்புகலூர் பாடுமின், புலவீர்காள்,
ஆணியாய் அமருலகம் ஆள்வதற்கு,
யாதும் ஐயுறவு இல்லையே
நரைகள் போந்து மெய் தளர்ந்து,
மூத்து, உடல்நடுங்கி நிற்கும் இக்கிழவனை
வரைகள் போல், திரள் தோளனே
என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரைவேள் ஏறு உடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனைப்
பாவியை, வழக்கு  இல்லøயைப்
பஞ்ச துட்டனை, சாதுவே
என்று பாடினும் கொடுப்பார் இலை;
பொன்செய் செஞ்சடைப் புண்ணியன்,
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
நெஞ்சில் நோய் அறுத்து,
உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
நலம் இலாதானை, நல்லனே என்று,
நரைத்த மாந்தரை, இளையனே
குலம் இலாதானைக் குலவனே என்று
கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அலமராது அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
நோயனைத், தடந்தோளனே என்று,
நொய்ய மாந்தரை, விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று
சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே,
எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்;
ஆயம் இன்றிப் போய், அண்டம்
ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ளலே, எங்கள் மைந்தனே
என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள் எலாம் சென்று சேரும் பூம்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
அல்லல் பட்டு அழுந்தாது போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
கற்றிலாதானைக், கற்று நல்லனே
காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை, முற்றனே  என்று
மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
தையலாருக்கு ஓர் காமனே என்றும்,
சால நல் வழக்குடையனே
கைஉலாவிய வேலனே என்று,
கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை ஆவியில் மேதியாய்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு,
யாதும் ஐயுறவு இல்லையே
செறுவினில் செழும் கமலம் ஓங்கு
தென்புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன், வனப்பகை
அப்பன், சடையன் தன்
சிறுவன், வன் தொண்டன், ஊரன், பாடிய
பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு,
யாதும் ஐயுறவு இல்லையே
திருச்சிற்றம்பலம்
4 கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய இரு பதிகங்கள்
இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு :
பண் : தக்கேசி (7--61)   ராகம் : காம்போதி
பாடியவர்: சுந்தரர்        தலம்: திருக்கச்சி ஏகம்பரம்
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை,
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச்
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈர்உரி போர்த்து உகந்தானைக்
காமனைக் கனலா விழித்திõனை
வரிகொள் வெள்வளையான் உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
குண்டலம் திகழ் காது உடையானை
கூற்று உதைத்த கொடுந் தொழிலானை
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை
வாள்அரா மதிசேர் சடையானை
கெண்டை அம் தடங்கண் உடை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை,
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள் செய்ய வல்லானை,
அருமறை அவை அங்கம் வல்லானை,
எல்லை இல் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
திங்கள் தங்கிய சடை உடையானை,
தேவ தேவனை, செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை,
சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை,
வேதம்தான் விரித்து ஓத வல்லானை,
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்தன்னை,
நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
எண்இல் தொல் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள்
சிந்தையில் திகழும் சிவன் தன்னை
பந்தித்த வினைப் பற்று அறுப்பானை
பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை
அந்தம் இல் புகழாள் உமைநங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
வரங்கள் பெற்று உழல், வாள் அரக்கர் தம்
வாலிய புரம் மூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன்தன் பெரு வேள்வி
நிரந்தரம் செய்த நிட்கண்டனைப்
பரந்த தொல் புகழாள் உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி, உகந்து உமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை
பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றது என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானைக்
குளிர் பொழில், திரு நாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈர்ஐந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர்தாமே
திருச்சிற்றம்பலம்
5 வலக்கண் கோளாறு நீங்குவதற்கு :
பண் : செந்துருத்தி (7--95) ராகம் : மத்தியமாவதி
பாடியவர்: சுந்தரர்            தலம்: திருவாரூர்
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்,
பிறரை வேண்டாதே
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று,
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர்? திருவாரூரீர்
வாழ்ந்து போதீரே
விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்;
விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை;
கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண்
கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால்,
வாழ்ந்து போதீரே
அன்றில் முட்டாது அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே,
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி அவைபோல,
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தம்கண் காணாது,
குன்றில் முட்டிக் குழியல் விழுந்தால்,
வாழ்ந்து போதீரே
துருத்தி உறைவீர்; பழனம் பதியாச்
சோற்றுத்துறை ஆள்வீர்,
இருக்கை திருஆரூரே உடையீர்;
மனமேஎன வேண்டா;
அருத்தி உடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து, மறுமை பணித்தால்,
வாழ்ந்து போதீரே
செந்தண் பவளம் திகழும் சோலை
இதுவோ திருஆரூர்?
எந்தம் அடிகேள், இதுவே ஆமாறு,
உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார்
தம் கண் காணாது
வந்து, எம்பெருமான் முறையோ?
என்றால், வாழ்ந்து போதீரே
தினைத்தாள் அன்ன செங்கால்
நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல்
மாலைப் புரிபுன் சடையீரே,
தனத்தால் இன்றித் தாம்தாம்
மெலிந்து, தம்கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார்
இருந்தால், வாழ்ந்த போதீரே
ஆயம் பேடை அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே,
ஏய எம்பெருமான், இதுவே ஆமாறு,
உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டிப் பிறவி காட்டி,
மறவா மனம்காட்டிக்
காய் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே
கழியாய், கடலாய், கலனாய்,
நிலனாய், கலந்து சொல்ஆகி,
இழியாக் குலத்தில் பிறந்தோம்;
உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர்,
அடிகேள் பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து
இருந்தால் வாழ்ந்து போதீரே
பேயோடேனும் பிறவிஒன்று இன்னாது
என்பர் பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ,
கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும்,
உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திருஆரூரீர்,
வாழ்ந்து போதீரே
செருந்தி செம்பொன் மலரும் சோலை
இதுவோ, திருஆரூர்?
பொருந்தித் திருமூ லட்டா னம்மே
இடமாகக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை
இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று
உரைத்தால், வாழ்ந்து போதீரே
காரூர் கண்டத்து எண்தோள் முக்கண்
கலைகள் பலஆகி,
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
அடிப்பேர் ஆரூரன்;
பாரூர் அறிய, என்கண் கொண்டீர்,
நீரே பழிப்பட்டீர்,
வாரூர் முலையாள் பாகம் கொண்டீர்,
வாழ்ந்து போதீரே
திருச்சிற்றம்பலம்
6 சொல் சோர்வு நீங்குவதற்கும், திக்குவாய் மாறிச் சீர்பெறுவதற்கும், சிறந்த பேச்சாளர் ஆவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
ராகம்: மோகனம்                  பாடியவர்: மாணிக்கவாசகர்
திருவாசகம் திருச்சாழல்       தலம்: தில்லை சிதம்பரம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்குஅரவம்,
பேசுவதும் திருவாயால் மறைபோலும்?காணேடி!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை?
ஈசன் அவன், எவ்வுயிர்க்கும் இயல்புஆனான்; சாழலோ
என்அப்பன், எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது, என்னேடீ?
மன்னுகலை, துன்னுபொருள், மறைநான்கே, வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினான்; காண்; சாழலோ
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்ஆடை;
தாயும்இலி, தந்தை இலி; தான்தனியன்; காணேடி!
தாயும்இலி, தந்தை இலி தான்தனியன் ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும், கல்பொடி, காண், சாழலோ
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான்; காணேடி!
நயனங்கள் மூன்றுஉடைய நாயகனே தண்டித்தால்
சயம்அன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய்? சாழலோ
தக்கனையும் எச்சனையும் தலைஅறுத்த, தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி, அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற்று அருளினன்காண், சாழலோ
அலரவனும் மால்அவனும் அறியாமே, அழல்உருஆய்,
நிலமமுதல், கீழ்அண்டம்உற நின்றது தான், என்னேடீ?
நிலம்முதல் கீழ்அண்டம் உற நின்றிலனேல், இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயும் அது, என்னேடீ?
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல், தரணிஎல்லசாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து, பெருங்கேடாம்; சாழலோ
கோலாலம் ஆகிக் குரைகடல்வாய்; அன்று எழுந்த
 ஆலாலம் உண்டான்; அவன் சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல், அன்றுஅயன் மால் உள்ளிட்ட
மேல்ஆய தேவர்எல்லாம் வீடுவர்காண்; சாழலோ
தென்பால் உகந்து ஆடும் தில்லைச்சிற் றம்பலவன்,
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ!
பொண்பால் உகந்திலனேல் பேதாய், இருநிலத்தோர்
விண்பால் யோகுஎய்தி வீடுவர்காண்; சாழலோ
தான்அந்தம் இல்லான் தனைஅடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான்; காணேடீ!
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்,
வான்உந்து தேவர்கட்கு ஓர் வான்பொருள்; காண்; சாழலோ
நங்காய், இது என்னதவம்? நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான்; காணேடீ?
கங்காளம் ஆமாகேள் கால அந்தரத்து இருவர்,
தம்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ
கான் ஆர் புலித்தோல் உடை; தலை ஊண்; காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆரேடீ!
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்,
வான் நாடார் கோவும், வழி அடியார் சாழலோ
மலை அரையன் பொற்பாவை, வாள்நுதலாள், பெண்திருவை,
உலகுஅறியத் தீ வேட்டான் என்னும், அது என்னேடீ!
உலகுஅறியத் தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்
கலைநவின்ற பொருள்கள் எல்லாம், கலங்கிடும், காண், சாழலோ
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ!
தான்புக்கு நட்டம்  பயின்றிலனேல், தரணிஎல்லாம்
ஊன்புக்க வேல் காளிக்கு ஊட்டுஆம்; காண்; சாழலோ
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடீ!
தடமதில்கள் அவைமூன்றும், தழல்எரித்த அந்நாளில்,
இடபம் அதுவாய்த் தாங்கினான், திருமால்காண், சாழலோ
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம்உரைத்தான்; காணேடீ!
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண், புரம்மூன்றும் கூட்டோடே; சாழலோ
அம்பலத்தே கூத்துஆடி, அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவன் என்று, நண்ணும் அது என்னேடீ!
நம்பனையும் ஆமாகேள்; நான்மறைகள் தாம் அறியா
என்பெருமான், ஈசாஎன்று ஏத்தின காண்; சாழலோ
சலம் உடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று அருளியவாறு என்னேடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம்இடந்து அரன் அடிக்கீழ்
அலர்ஆக இட, ஆழி அருளினன்; காண்; சாழலோ
அம்பரம்ஆம், புள்ளித்தோல்; ஆலாலம் ஆர்அமுதம்;
எம்பெருமான் உண்டசதுர் எனக்கு அறிய இயம்பேடீ!
எம்பெருமான் ஏதுஉடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்
தம்பெருமை தான் அறியாத் தன்மையன்; காண்; சாழலோ
அரும்தவர்க்கு ஆலின் கீழ் அறம்முதலா நான்கினையும்
இருந்து, அவர்க்கு அருளும்  அது எனக்கு அறிய இயம்பேடீ!
அரும்தவர்க்கு, அறம்முதல் நான்கு அன்றுஅருளிச் செய்திலனேல்
திருந்த, அவருக்கு உலகுஇயற்கை தெரியா; காண்; சாழலோ
திருச்சிற்றம்பலம்
7 குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்வதற்கும், குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் அமைதியுடன் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : கொல்லி (3--24)               ராகம் : நவரோசு
பாடியவர்: திருஞானசம்பந்தர்   தலம்: சீர்காழி
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில், நல்லகதிக்கு யாதும் ஓர்குறைவு இலை;
கண்ணில், நல்லஃதுஉறும்; கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
போதையார் பொன்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உறத் தான் எனை ஆண்டவன்
காதையார் குழையினன்; கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே
தொண்டு அணை செய் தொழில், துயர் அறுத்து உய்யலாம்;
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண்துணை நெற்றியான்; கழுமல வளநகர்ப்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெய, பெருந்தகை இருந்ததே
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழிநெஞ்சமே
விடைஅமர் கொடியினான்: விண்ணவர் தொழுதுஎழும்
கடைஉயர்மாடம் ஆர் கழுமல வளநகர்ப்
பெடைநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே; மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள்உடைப் பெருந்தகை இருந்ததே
குறை வளைவது மொழி குறைவு ஒழி, நெஞ்சமே
நிறை வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
களை வளர் பொழில்அணி கழுமல வள நகர்ப்
பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே
அரக்கனார், அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்; நீடுயாழ் பாடவே
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வளநகர்ப்
பெருக்கும் நீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடிகமழ் பொழில் அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
தார்உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆர்உறு சொல் களைந்து அடிஇணை அடைந்து உயம்மின்
கார்உறு பொழில் வளர் கழுமல வளநகர்ப்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே
கருந்தடம் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்த எம்பிரான்தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன் செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய், விண்ணுலகு ஆள்வரே
திருச்சிற்றம்பலம்
8 கல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : இந்தளம் (2--31)                ராகம் : நாதநாமக்கிரியை
பாடியவர்: திருஞான சம்பந்தர்    தலம்: தலைஞாயிறு
சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள் மேலே
கொண்டு அணைசெய் கோலம்அது கோள்அரவினோடும்
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறிய லூரே
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆக
போதினோடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதன்என நள்இருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறிய லூரே
மடம்படு மலைக்கு இறைவன் மங்கைஒரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே
ஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய
நிருத்தன் அவன் நீதிஅவன் நித்தன் நெறிஆய
விருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதம்
கருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே
விண்ணவர்கள், வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும்
கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே
ஆதிஅடியைப் பணிய அப்போடு மலர்ச்சேர்
சோதிஒளி நல்புகை வளர்க்கு வடுபுக்குத்
தீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறிய லூரே
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே
பரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்துஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தர நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே
அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்று என இருப்பது கருப்பறிய லூரே
நலம்தரு புனல்கலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்களைப்
பலம்தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று
வலம் தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே
திருச்சிற்றம்பலம்
மூன்றாவது பாவம்
9 எடுத்தகாரியம் யாவினும் வெற்றி பெறுவதற்கும், விஷசுரம், விஷக்கடி முதலியன நீங்குவதற்கும் தொண்டையில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கி குரல் வளம் பெறுவதற்கும், செய்வினை, பில்லி, சூனியம் பாதிக்காமல் இருக்கும் பொருட்டும், துணிவுடன் செயலாற்றுவதற்கும், இளைய சகோதரன் நலம் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : வியாழக்குறிஞ்சி (1--116)  ராகம் : சௌராஷ்ட்டிரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருச்செங்கோடு
அவ்வினைக்கு இவ்வினைதுஆம் என்று
சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும்
உம்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான்
கழல் போற்றுதும்; நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
காவினை இட்டும் குளம்பல
தொட்டும், கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து, மலர்அடி
போற்றுதும், நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்
மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு
எமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும்
மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
விண்உலகு ஆள்கின்ற
விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும்
தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர்!
உம்கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
மற்று இணை இல்லா மலை திரண்டு
அன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது
ஒழிவதும் தன்மை கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து,
உம்திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
மறக்கும் மனத்தினை மாற்றி, எம்
ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான், திருந்து
அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர்கொடு வந்து, உமை
ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை
கடிந்து, உம்கழல் அடிக்கே,
கருகி மலர்கொடு வந்து உமை
ஏத்ததும்; நாம் அடியோம்;
செருவில் அரக்கனைச் சீரில்
அடர்த்து அருள்செய்தவரே,
திருஇலித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
நாற்றமலர் மிசை நான்முகன்
நாரணன் வாது செய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும்
தொடர்வு அரியீர்;
தோற்றினும் தோற்றும்; தொழுது
வணங்குதும்; நாம் அடியோம்
சீற்றம் அது ஆம் வினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
சாக்கியப் பட்டும் சமண்உரு
ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப்
போகமும் பற்றும் விட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்
அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
பிறந்த பிறவியில் பேணி எம்
செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில்
இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ்
பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்
கோனொடும் கூடுவரே
திருச்சிற்றம்பலம்
நான்காம் பாவம்
10 தாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கும், பிரசவம் சுகமாக அமைவதற்கும், உறவினர், நண்பர்களின் தொடர்பு நன்கு அமையப் பெறுதற்கும், வீடு, மனை முதலிய செம்மையுறக் கட்டி முடிப்பதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : குறிஞ்சி (1-98) ராகம் : அரிகாம்போதி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருச்சி
நன்று உடையானை, தீயது இலானை, நரைவெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒருபாகம் உடையானை
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர்உரி போத்த விகிர்தா, நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே
மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடைஊரும்
எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே
துறை மல்கு சாரல், சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள்ளம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரை ஆகச் செற்றன ரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும், வெள்ளை நிறம் ஆமே!
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஓர் பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர் இவர் செய்கை அறிவாரே
வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்,
பேய் உயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே
மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன்தன்
தலை கலன் ஆகப் பலிதிரிந்து உண்பர்; பழி ஓரார்;
சொல வல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலஅல போலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே
அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டலரேனும், கல் சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள் காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானைத், திரைசூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்,
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்,
வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே
திருச்சிற்றம்பலம்
ஐந்தாம் பாவம்
11 மக்கட் செல்வம் வாய்க்கப் பெறுவதற்கும், பட்டிமன்றம், கருத்தரங்கம் முதலியவற்றில் வாதத் திறமை பெறுவதற்கும், எழுத்தாற்றல் பெறுவதற்கும், தத்துவ ஞானத் தெளிவினைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : சீகாமரம் (2--48)  ராகம் : நாதநாமக்கிரியை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவெண்காடு
கண் காட்டும் நுதலானும், கனல்
காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும்,
பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர்
காட்டும் புயலானும்
வெண் காட்டில் உறைவானும், விடை
காட்டும் கொடியானே
பேய் அடையா, பிரிவு எய்தும்;
பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற
வேண்டா ஒன்றும்;
வேயனதோள் உமை பங்கன் வெண்காட்டு
முக்குள நீர்,
தோய்வினையார் அவர் தம்மைத்
தோயாவாம், தீவினையே
மண்ணொடு நீர், அனல், காலோடு
ஆகாயம், மதி, இரவி,
 எண்ணில் வரும் இயமானன், இக
பரமும், எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையோடு
சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபட, வெண்காடு
இடமா விரும்பினனே
விடம் உண்டா மிடற்று அண்ணல்
வெண்காட்டின் தண்புறவில்
மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலைக்
குருகு என்று
தடம் மண்டு துறைக்கெண்டை,
தாமரையின் பூமறையக்
கடல் விண்ட கதிர் முத்தம் நகை
காட்டும் காட்சியதே
வேலை மலி தண்கானல் வெண்
காட்டான் திருவடிக்கீழ்
மாலை வலி வண்சாந்தால் வழிபடு
நல் மறையவன்தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட
பினை, நமன் தூதர்,
ஆலமிட்டற்றான் அடியார் என்று,
அடர அஞ்சுவரே
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான்,
சடையின் உடன்,
ஒண்மதிய நுதல் உமை ஓர்
கூறுஉகந்தான்; உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பல
ஓதப், பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல்
வீற்றிருக்கும் வெண்காடே
சக்கரம் மாற்கு ஈந்தானும்,
சலந்தரனைப் பிளந்தானும்,
அக்கு அரைமேல் அசைத்தானும்
அடைந்து அயிரா வதம்பணிய
மிக்க அதனுக்கு அருள் சுரக்கும்
வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும்,
முக்கண்உடை இறையவனே
பண்மொய்த்த இன்மொழியாள்,
பயம்எய்த மலைஎடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று
அருள்செய்தான் உறைகோயில்,
கண்மொய்த்த கரு மஞ்ஞை
நடம்ஆட, கடல் முழுங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு
இசைமுரலும் வெண்காடே
கள்ஆர்செங் கமலத்தான்
கடல்கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து
ஆழ்ந்தும், உணர்வு அரியான்;
வெள்ஆனை தவம் செய்யும் மேதகு வெண்
காட்டான் என்று
உள்ஆடி உருகாதார்
உணர்வு உடைமை, உணரோமே
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு
மொழிபொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிரிமின்;
அறிவுடையீர், இதுகேள்மின்;
வேதியர்கள் விரும்பியசீர்
வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர்
என்று உணருமினே
தண் பொழில் சூழ் சண்பையர் கோன்,
தமிழ்ஞான சம்பந்தன்,
விண் பொழி வெள் பிறைச் சென்னி
விகிர்தன்உறை வெண்காட்டைப்,
பலர் பொலி செந் தமிழ் மாலை
பாடியபத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய்
வான்பொலியப் புகுவாரே
திருச்சிற்றம்பலம்
ஆறாம் பாவம்
12 வெப்பம் மிகுதியால் ஏற்படும் சுரநோய், பித்தசுரம் முதலிய நோய்கள் நீங்குவதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : காந்தாரம் (2--66)  ராகம் : நவரோசு
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப் படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர் வாய் உமை பங்கன், திரு ஆலவாயான் திருநீறே
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந்தவத் தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம்அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப் படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தும் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண் பொடிநீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும்; இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று, எம் ஆலவாயான் திருநீறே
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப் பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தம் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித், தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயினதீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
திருச்சிற்றம்பலம்
13 பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குவதற்கும், சிறை வாசத்தைத் தடுப்பதற்கும், சிறையிலிருந்து விரைவில் விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : கௌசிகம் (3--51)  ராகம் : பயிரவி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை
செய்யனே, திரு ஆலவாய் மேவிய
ஐயனே, அஞ்சல் என்று அருள்செய்; எனைப்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்,
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே
சித்தனே, திரு ஆலவாய் மேவிய
அத்தனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எத்தராம் அமணர் கொளுவும் சுடர்
பத்திமன், தென்னன், பாண்டியற்கு ஆகவே
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எக்காரம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே
சிட்டனே, திரு ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்தியனே, அஞ்சல் என்று அருள்செய்;
துட்டராம் அமணர் கொளுவும் சுடர்
பட்டிமன், தென்னன், பாண்டியற்கு ஆகவே
நண்ணலார் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எண்ணிலா அமணர் கொளுவும் சுடர்
பண்இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும்
அஞ்சல் என்று அருள், ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன் தென்னன், பாண்டியற்கு ஆகவே
செங்கண் வெள்விடையாய், திரு ஆலவாய்
அங்கணா, அஞ்சல் என்று அருள்செய்; எனை
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன், பாண்டியற்கு ஆகவே
தூர்த்தனன் வீரன் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
ஏத்திலா அமணர் கொளுவும் சுடர்,
பார்த்திவன் தென்னன், பாண்டியற்கு ஆகவே
தாவினான் அயன் தான் அறியா வகை
மேவினாய் திரு ஆலவாய், அருள்;
தூவிலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான் தென்னன், பாண்டியற்கு ஆகவே
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
குண்டராம் அமணர் கொளுவும் சுடர்,
பண்டிமன் தென்னன், பாண்டியற்கு ஆகவே
அப்பன், ஆலவாய் ஆதி, அருளினால்
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரை பத்தும்
செப்ப வல்லவர், தீது இலாச் செல்வரே
திருச்சிற்றம்பலம்
14 கடன் தொல்லைகள் நீங்கி, மன நிம்மதியுடன் வாழ்வதற்கும், பிறரிடமிருந்து கடன் பெறாமலே போதிய பொருளாதாரத்துடன் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : பழம்பஞ்சுரம் (3--108)  ராகம் : சங்கராபரணம்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே?
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாது செயத் திருவுள்ளமே?
கைதிகழ் தரு மாமணி கண்டனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மறை வழக்கம் இலாத மாபாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திருவுள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே?
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாது செயத் திருவுள்ளமே?
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல, வாது செயத் திருவுள்ளமே?
தழல் இலங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாது செயத் திருவுள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்
கோலம் மேனியது ஆகிய குன்றமே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப்
பாடல் வல்லவர், பாக்கிய வாளரே
திருச்சிற்றம்பலம்
15 இரத்த அழுத்த நோய், இனிப்பிலி நோய் (நீரிழவு) முதலிய நோய்கள் நீங்குவதற்கும், மூர்ச்சை நோயிலிருந்து எழுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் இக்காலத்தில் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி மீள இயலாமல் இருப்பவர்களை மீட்பதற்கும் இந்த பதிகத்தை ஓதிப் பயன் பெற்றுள்ளனர்
பண் : தக்கராகம் (1--44)           ராகம் : காம்போதி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருப்பாச்சிலாச்சிரமம்
துணிவளர் திங்கள் துளங்கி விளங்க
சுடர்ச்சுடை சுற்றி முடித்து,
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ,
ஆரிடமும் பலி தேர்வர்;
அணிவளர் கோலம் எலாம் செய்து,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ, மங்கையை வாட
மயல் செய்வதோ, இவர்மாண்பே?
கலைபுனை மானஉரி  தோல்உடை ஆடை,
கனல் சுடரால் இவர்கண்கள்,
தலைஅணி சென்னியர், தார்அணி மார்பர்,
தம்அடிகள் இவர் என்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்து அமர்
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ, ஏழையை வாட,
இடர்செய்வதோ, இவர் ஈடே?
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சுஇருள்;
மாலை வேண்டுவர், பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு
இடமாக நண்ணுவர், நம்மை நயந்து
மஞ்ச அடைமாளிகை, சூழ்தரு
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி
வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?
கன மலர்க் கொன்றை அலங்கல்
இலங்க கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்து, அழகு
ஆய புனிதர் கொல்ஆம், இவர் என்ன,
அனம் மலி வண்பொழில் சூழ்தரு
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ மங்கையை
வாட மயல் செய்வதோ, இவர் மாண்பே?
மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து
ஆடி வளர் சடைமேல் புனல்வைத்து
மோந்தை, முழா, குழல், தாளம் ஓர்
வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி,
ஆந்தை விழிச் சிறு பூதத்தர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச்
சதுர் செய்வதோ, இவர் சார்வே?
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ,
நெற்றிக் கண்ணால் உற்றுநோக்கி
ஆறு அது சூடி, ஆடு அரவு ஆட்டி,
ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர், பூதத்தர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
ஏறுஅது ஏறியர், ஏழையை வாட,
இடர் செய்வதோ இவர்ஈடே?
பொங்கு இள நாகம், ஏர் ஏகவடத்தோடு
ஆமை வெண்நூல், புனைகொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய,
குழகர் கொல் ஆம், இவர் என்ன
அங்கு இள மங்கை ஓர் பங்கினர்;
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
சங்குஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச்
சதிர் செய்வதோ இவர்சார்வே?
ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து,
இராவணன் தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய், நடு ஆய
மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் தொழில்
பாச்சலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச்
சிதை செய்வதோ, இவர் சேர்வே?
மேலது நான்முகன் எய்தியது இல்லை;
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை;
என இவர் நின்றதும் அல்லால்
ஆல்அது மாமதி தோய்பொழில்
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
பால்அது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வதோ, இவர் பண்பே?
நாணொடு கூடிய சாயினரோனும் நகுவர்,
அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள்
அவை கொள வேண்டா;
ஆணோடு பெண்வடிவு ஆயினர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ, பூங்கொடி வாடப்
புனை செய்வதோ, இவர் பொற்பே?
அகம்மலி அன்போடு தொண்டர் வணங்க,
ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்த, அழகு ஆய
புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகைமலி தண் பொழில் சூழ்தரு
காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவை
ஏத்த, சாரகிலா வினைதானே
திருச்சிற்றம்பலம்
16 தீராத வயிற்றுவலி நீங்குவதற்கும், குடல் தொடர்பான அனைத்துத் தொல்லைகளைப் போக்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம் மஞ்சள் காமாலை நோயைப் போக்குவதற்கும் இந்தப் பதிகத்தைப் படனம் செய்யவும்
பண் : குறிஞ்சி (4--1)            ராகம் : நவரோசு
பாடியவர்: திருநாவுக்கரசர்   தலம்: திருவதிகை வீரட்டானம்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்;
கொடுமை பலசெய்தன நான் அறியேன்;
ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்;
அஞ்சேலும் என்னீர்: அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்;
படுவெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்;
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்
சுடுகின்றது சூலை; தவிர்த்து அருளீர்;
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்;
பெற்றம் ஏற்று உகந்தீர்; சுற்றும் வெண்தலை கொண்டு
அணிந்தீர்; அடிகேள், அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து
என்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடுகின்றது சூலை; தவிர்த்து அருளீர்;
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ
தலை ஆயவர் தம்கடன் ஆவதுதான்?
அன்னம் நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
கரத்து ஆள்வர் காவல் இகழ்ந்தமையால்
கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்து ஆய கயம் புக நூக்கியிட, நிலைக்கொள்ளும்
வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்,
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார், புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்;
நலம்தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன்நாமம் என்நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலிகொண்டு உழல்வாய்;
உடலுள் உறுசூலை தவிர்த்து அருளாய்;
அலந்தேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல்உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்;
பயந்தே என்வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
வலித்தேன் மனைவாழ்க்கை, மகிழ்ந்து, அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண் குழைக் காதுஉடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
பொன்போல மிளிர்வது ஓர் மேனியினிர்;
புரிபுன் சடையீர்; மெலியும் பிறையீர்;
துன்பே, கவலை, பிணி என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்;
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்,
அன்பே அமையும், அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
போர்த்தாய், அங்குஓர் ஆனையின் ஈர்உரிதோல்,
புறங்காடு அரங்கா, நடம்ஆட வல்லாய்;
ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்தஅது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என்வேதனை ஆன விலக்கியிடாய்;
ஆர்த்துஆர் புனல்சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
திருச்சிற்றம்பலம்
17 எலும்பு முறிவு குணம் அடைவதற்கும், இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் தீர்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : சாதாரி (3--72)  ராகம் : பந்துவராளி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருமாகறல்
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல் அரவம்,
மங்குலொடு நீள கொடிகள் மாடம்மலி
நீடுபொழில் மாகறல் உளான்
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர்
திங்கள் அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள்
தீவினைகள் தீரும் உடனே
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி
ஆடல் கவின் எய்தி அழகு ஆர்
மலையின் நிகர் மாடம் உயர் நீள்கொடிகள்
வீசும் மலி மாகறல் உளான்;
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன்
ஏந்தி எரி புன்சடையினுள்
அலைகொள் புனல் ஏந்து பெருமான், அடியை
ஏத்த வினை அகலும் மிகவே
காலையொடு துந்துபிகள் சங்கு, குழல்,
யாழ், முழவு காமருவு சீர்
மாலை வழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணி அதன் மேல் ஓர்சுடர்
நாகம் அசையா அழகிதாப்
பாலை அன நீறுபுனை வான், அடியை
ஏத்த வினை பறையும் உடனே
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்தி எழில் மெய்யுள் உடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுனல்
ஆடி மகிழ் மாகறல் உளான்
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி
செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக ஏத்தி வழி
பாடு நுகரா எழுமினே
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி
தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சுமலி பூம்பொழிலில் மயில்கள் நடம்
ஆடல் மலி மாகறல் உளான்;
வஞ்சமத யானைஉரி போர்த்து மகிழ்
வான் ஓர் மழுவாளன் வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடி
யாரை நலியா வினைகளே
மன்னும் மறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடி உடனாய்
இன்ன வகை யால்இனிது இறைஞ்சி, இமையோரில்
எழு மாகறல் உளான்
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள்
கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர் தொல் வினைகள் ஒல்க உயர்
வான்உலகம் ஏறல் எளிதே
வெய்யவினை நெறிகள் செல வந்து அணையும்
மேல் வினைகள் வீட்டல் உறுவீர்,
மைகொள் விரி கானல் மது வார்கழனி
மாகறல் உளான் எழில் அது ஆர்
கையகரி கால் வரையில் மேலது உரிதோல்
உடையமேனி அழகு ஆர்
ஐயன்அடி சேர்பவரை அஞ்சி அடையா
வினைகள் அகலும் மிகவே
தூசு துகில் நீள்கொடிகள் மேமொடு
தோய்வன பொன் மாடமிசையே
மாசுபடு செய்கை மிக மாதவர்கள்
ஓதிமலி மாகறல் உளான்
பாசுபத இச்சை வரி நச்சு அரவு
கச்சை உடை பேணி அழகுஆர்
பூசுபொடி ஈசன் என ஏத்தவினை
நிற்றல் இல, போகும் உடனே
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர்
குவளை தோன்ற மது உண்
பாய வரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறல் உளான்
சாய விரல் ஊன்றிய இராவணன்
தன்மை கெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை
ஆயினவும் அகல்வது எளிதே
காலின் நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரி
ஆகி உயர் மாகறல் உளான்
நாலும் எரி தோலும் உரி மா மணிய
நாகமொடு கூடி உடனாய்
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள்
அடியாரை அடையா வினைகளே
கடைகொள் நெடு மாடம் மிக ஓங்குகமழ்
வீதி மலி காழியவர் கோன்,
அடையும் வகை யால், பரவி அரனை அடி
கூடு சம்பந்தன் உரையால்,
மடைகொள் புனலோடு வயல் கூடு பொழில்
மாகறல் உளான் அடியையே
உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள்
தொல்வினைகள் ஒல்கும் உடனே
திருச்சிற்றம்பலம்
ஏழாம் பாவம்
18 சர்ப்பதோஷத்தால் திருமணம் தள்ளிப் போவதைத் தவிர்ப்பதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : இந்தளம் (2--18)  ராகம் : நாதநாமக்கிரியை
பாடியவர்: திருஞானசம்பந்தர்  தலம்: திருமருகல்
சடையாய் எனுமால்; சரண்நீ எனுமால்;
விடையாய் எனுமால்; வெருவா விழுமால்;
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ, இவன் உள் மெலிவே
சிந்தாய் எனுமால்; சிவனே எனுமால்;
முந்தாய் எனுமால்; முதல்வா எனுமால்;
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே
அறையார் கழலும் அழல்வாய் அரவும்
பிறையார் சடையும் உடையாய்; பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளை கொண்டு எழில் வல்வினையே
ஒலி நீர் சடையில் கரந்தாய், உலகம்
பலி நீர் திரிவாய், பழி இல் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய், இவளை
மெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையார் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடைபோந்து
அலரும் படுமோ அடியாள் இவளே
வழுவாள் பெருமான் கழல்வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே
எரிஆர் சடையும் மடியும் இருவர்
தெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே
அறிவுஇல் சமணும் அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறிஏந்து கையாய்; மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே
திருச்சிற்றம்பலம்
19 தடைபடும் திருமணம் சடுதியில் கூடிவருவதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : சாதாரி (3--78)  ராகம் : பந்துவராளி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி
நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு
என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல்
ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகம்மலி வாழை விரை
நாறஇணை வாளை மடுவில்
வேறுபிரியாது விளையாட வளம்
ஆறும் வயல் வேதிகுடியே
சொற்பிரிவு இலாதமறை பாடி நடம்
ஆடுவர் தொல் ஆனை உரிவை
மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்
நாளும்வளர் வானவர் தொழத்
துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர்
இயன்ற தொகுசீர்
வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர்
என்பர்திரு வேதிகுடியே
போழும்மதி பூண்அரவு கொன்றை மலர்
துன்றுசடை வென்றி புகமேல்
வாழும்நதி தாழும் அருளாளர் இருள்
ஆர்மிடறர் மாதர் இமையோர்
சூழும்இரவாளர் திருமார்பில் விரிநூலர்
வரிதோலர் உடைமேல்
வேழஉரி போர்வையினர் மேவுபதி
என்பர்திரு வேதிகுடியே
காடர்கரி காலர்கனல் கையர் அனல்
மெய்யர்உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர்சரி கோவணவர்
ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள்
மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆனபொடி பூசிஇசை
மேவுதிரு வேதிகுடியே
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற
முனிந்து தொழும் மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்
இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல்
பற்றி வரி வண்டு இசை குலாம்
மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர்
போக நல்கு வேதிகுடியே
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி அணிந்து
கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மடமங்கை யொடு
அகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ்
மிக்க இழிவு இலாதவகையார்
வெய்ய மொழி தண்புலவருக்கு உரை
செயாத அவர் வேதிகுடியே
உன்னி இரு போதும் அடி பேணும் அடியார்
தம் இடர் ஒல்க அருளி
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல்
இருந்த துணை வன்தன் இடமாம்
கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம்
விரும்பி அரு மங்கலம் மிக
மின்இயலும் நுண்இடை நல் மங்கையர்
இயற்று பதி வேதிகுடியே
உரக்கரம் நெருப்பு எழ நெருக்கி வரை
பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது
நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும்
ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்இசை
உலாவுதிரு வேதிகுடியே
பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி
அங்கையனும் நேட எரிஆய்
தேவும்இவர் அல்லர் இனி யாவர்என
நின்று திகழ் கின்றவர்இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது
அறாத கொடையாளர் பயில்வாம்
மேவுஅரிய செல்வம்நெடு மாடம்வளர்
வீதி நிகழ் வேதிகுடியே
வஞ்சஅமணர் தேரர் மதிகேடர் தம்மனத்து
அறிவிலாதவர் மொழி
தஞ்சம்என என்றும் உணராத அடியார்
கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்று அறுவகைப் பொருள்
தெரிந்துஎழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி
நிகழ்கின்ற திருவேதிகுடியே
கந்தமல்லி தண்பொழில் நல்மாடம் மிடை
காழி வளர் ஞானம் உணர்சம்
பந்தன்மலிசெந்தமிழின் மாலைகொடு
வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள்
என்ன நிகழ்வு எய்தி இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளும் அதுவே
சரதம் ஆணை நமதே
வினைநீங்கு பதிகம்

சேலம் கி. சுப்பராயப்பிள்ளை என்ற ஒரு சிவபக்தர் தனது 84வது வயதில் கீழே விழுந்ததில், அவரது முழங்கால் எலும்பும், இடுப்பெலும்பும் முறிந்த நிலையில் பெரிய மருத்துவர்கள் எல்லாம், குணப்படுத்த இயலாது என்று கைவிட்டு விட்டனர். அவர் திருமுறையில் நூல் சாத்திப் பார்த்ததில், வினைநீங்கு பதிகம் ஓதச் சொல்லி வழிகாட்டல் கிடைத்தது. அதன்படியே அவரும் கீழ்க்கண்ட வினைநீங்கு பதிகத்தை ஓதி வழிபட்டதில், ஓராண்டுக்குள்ளேயே எலும்புகள் கூடி மீண்டும் நடக்கத் தொடங்கினாராம். இதுபற்றிய விவரம், தென்னிந்திய சைவ சித்தாந்த சங்க 1960ம் ஆண்டு வெளியீடு ஒன்றில் காணப்படுகிறது.

1. விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணீ செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும்உடனே.

2. கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல் நுனைய சூலம்வலன் ஏந்திஎரி புன்சடையினுள்
அலைகொள்புனல் ஏந்துபெரு மானடியை ஏத்தவினை அகலும்மிகவே.

3. காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை ஏத்தவினை மறையும்உடனே.

4. இங்குகதிர் முத்தினொடு பெண்மணிகள் உந்திஎழின் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுனல் ஆடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராஎழுமினே.

5. துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடமலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதன் அடி யாரைநலி யாவினைகளே.

6. மன்னுமறை யோர்களோடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சிஇமை யோரில்எழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கஉயர் வானுலகம் ஏறல்எளிதே.

7. வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டல்உறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனிஅழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.

8. தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுண்ட பேணியழகார்
பூசுபொடி ஈசனென ஏத்தவினை நிற்றலில் போகும்உடனே.

9. தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவிரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிரல் ஊன்றியஇ ராவணன் தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுகழ் ஏத்தும்அடி யார்களைவினை ஆயினவும் அகல்வதெளிதே.

10. காலினல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலும்மல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலும்எரி தோலும்உரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை அடிகள்அடி யாரைஅடை யாவினைகளே.

11. கடை கொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்தும்உணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்கும்உடனே.
திருச்சிற்றம்பலம்

கண் ஓளி வீச slogam for curing eye ailments

திருச்சிற்றம்பலம்

இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு: -

உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


வலக்கண் கோளாறு நீங்குவதற்கு: -

விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்;
விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை;
கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண்
கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால்,
வாழ்ந்து போதீரே
 


திருச்சிற்றம்பலம்

16times for 48days 
 for full slogam http://temple.dinamalar.com/Slogandetails.php?id=467

 கண் குறைபாடுகளை சரிசெய்யும் மந்திரம்
 ‘ஓம் பாஸ்கராய நம’ 

– என்ற மந்திரமோ நமது கண் பார்வையில் உள்ள குறைபாடுகளைக் களையக்கூடிய தன்மை பெற்றதாகும். நமது பார்வையை அகமுகமாக அமைத்து வைக்கக் கூடிய மகத்துவம் வாய்ந்ததாகும்.

இரண்டு பட்சங்களிலும் வரக்கூடிய பிரதமை மற்றும் தசமி திதிகளில், இந்த மந்திரத்தை 48 அல்லது 108 முறை சூரிய உதயத்தின்போது உச்சாடனம் செய்துவந்தால் பார்வைக் கோளாறுகள் நீங்குவதற்கு அது மிகவும் உறுதுணையாக அமையும். அல்லது அந்தந்த திதிகளில் வரும் சூரிய ஹோரைகளில் ஜபம் செய்வதும் விசேஷமே

http://www.maalaimalar.com/2014/04/07091135/eye-defects-Adjusting-mantra.html

http://www.tamilkadal.com/home/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

शर्यातिञ्च सुकन्याञ्च च्यवनम् शक्रमश्विनौ
भुक्तमात्रे स्मरेत यस्तु चक्षुस्तस्य न हीयते
சர்யாதிஞ்ச ஸுகன்யாஞ்ச ச்யவனம் சக்ரமஷ்விநௌ
புக்தமாத்ரே ஸ்மரேத் யஸ்து சக்ஷுஸ்தஸ்ய ந ஹீயதே
(சர்யாதி மஹர்ஷி, பதிவ்ரதையான சுகன்யா தேவி, ஆயுர்வேதத்தை எழுதிய சியவன மகரிஷி, தேவேந்த்ரன், அஷ்வினீ தேவர்கள் முதலானவர்களை, யார் உணவு சாப்பிட்டவுடன் நினைத்துக் கொள்கின்றார்களோ, அவர்களின் கண்களுக்கும், கண்பார்வைக்கும் ஒருபோதும் குறைவு ஏற்படாது)
என்னும் இந்த ச்லோகத்தை சொல்லி, தினசரி உணவு சாப்பிட்ட பிறகு, ஜலத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டால் கண்களின் ஒளி ஒரு போதும் குறையாது, நீண்ட நாட்கள் கண்கள் ஆரோக்யமாக இருக்கும்.
https://groups.google.com/forum/#!topic/sies-1969/3widiGIv__w

Wednesday, October 29, 2014

வளம் தரும் வாஸ்து

பெங்சூயி என்ற மேலைநாட்டு வாஸ்து விஞ்ஞானத்தின் சில துளிகளை தெரிந்து கொண்ட நாம், அவ்வப்போது வாஸ்துவின் பெருமைகளையும் நடைமுறைகளையும் தெரிந்து கொண்டால்தான் நம்ம ஊர் கலாசாரத்தை ஒட்டிய கலையுடன் இணைந்து செயலாற்ற முடியும்.

மதிற்சுவர்

ஒரு மனையின் முழு சக்தியும் நமக்குக் கிடைக்க மதிற்சுவர் உதவி புரிகிறது. வீட்டின் பிரதான வாயிற்கதவின் மேல்பகுதி தெரியும் உயரத்தில் மதிற்சுவர்  அமைய வேண்டும். வாசற்கதவு தெரியாமல் மறைத்தபடி மதிற்சுவர் உயரமாக இருக்கக்கூடாது. இதனால் ‘ச்சீ’ என்னும் நல்ல வாஸ்து சக்தி உள்ளே வருவதும்,  சூரியக்கிரணங்கள் வீட்டில் படுவதும் குறைந்து தீய பலன்களை நுகரும் நிலை ஏற்படும். சிறையில் வாழும் நிலையை ஒத்த சூழ்நிலையை அனுபவிக்க நேரிடும்.மதில் சுவர்களில் சதுர வடிவிலோ, வட்ட வடிவிலோ, எண் கோண வடிவிலோ துளைகள் இருக்கலாம்.

எக்காரணம் கொண்டும் மதிற்சுவர் மீது இரும்புக்கம்பிகளைக் கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தக் கூடாது. இது விஞ்ஞான முறையிலும் இடியை உள்வாங்கி  கட்டிடத்தை சேதப்படுத்துவதோடு, அந்த கட்டிடத்தில் வாழ்வோர் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும். மதிற்சுவர் மூலைகளை வில்போல வளைவாகக் கட்டலாகாது.  சக்தி அந்த வளைவில் வழுக்கிச்சென்று நற்பலனுக்கு பங்கம் ஏற்படும். இதனால் ‘ஷா’  எனப்படும் தீமைச்சக்தி உள்ளே பரவ ஆரம்பிக்கும். சாலைக்கு வெகு  அருகில் வீடு அமைந்துவிட்டால் அதுவும் வடக்கு/கிழக்கு எனில் தரைமட்டத்திற்கு கீழே தொட்டி கட்டி அதிலிருந்து நீரூற்று பீறிடுவதுபோல அமைக்கலாம்.

தெற்கு/மேற்கு எனில் தரையை விட உயரமாக பீடம் உருவாக்கி அதன் மேலிருந்து நீரூற்று பீறிடுமாறு அமைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் சிறப்பான  பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். வீட்டிற்கு அருகில் சாலை வந்து விட்டால், வீட்டிற்குள் செல்லும் பாதையை வளைவாக அமைக்கும்போது நீண்ட தூரம்  இருப்பது போன்ற பிரமையை உருவாக்கி, அதனாலும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். வாகனம் செல்வதற்கான வழி வட்டப் பாதையாக இருக்கும்போது அது  எளிமையாகவும், வசதியாகவும் இருக்கும்.

இதற்கு மத்தியில் சிறு பூக்களை புஷ்பிக்கும் செடிகளையும், புல் தரையையும் பசுமையாக வளர்ப்பது மேலும் சிறப்பான பலனை தரும். அது செயற்கை  புல்வெளியானாலும், நன்மைகளுக்குக் குறைவிருக்காது. பாதைக்கு அருகிலும், பிரதான கதவிற்கு அருகில் ஏதேனும் தடை இருந்தால், அதை உடனே  நீக்கிவிடவும். இவை நன்மை செய்யும் ஓட்டங்களை தடை செய்யக்கூடியவை. குறுகலான, தடையுள்ள பாதை, குடும்பத்தினரின் வளர்ச்சியை வெகுவாக  பாதிக்கும். சமநிலையை ஊசலாட வைக்கும்.

இப்படிப்பட்ட இடங்களில் வெளிச்சம் அதிகம் தரும் விளக்கைப் பொருத்தி, அது கூரையில் எதிரொலிக்கும்படி செய்தால் ‘ச்சீ’ பெருகி குறை நிவர்த்தி  செய்யப்படும். பிரதான கதவிற்கு அருகில் நடைபாதை குறுகலாகவும், போகப்போக அகலமாயும் அமையுமானால் குடும்பத்தினரை அது மேலோங்கச் செய்து  நற்பலன்களை வாரி வழங்கும். அரண்மனை, நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் குடியிருக்கும் வளாகங்களைப் பார்த்தால் இந்த அமைப்புகள் பின்பற்றப்பட்டிருப்பது  தெளிவாகத் தெரியும். நடைபாதையின் அகலம் கதவின் அகலத்தை விட குறைவாக இருக்கக் கூடாது.

இதனால் குறைவான ‘ச்சீ’ வீட்டினுள் நுழைய ஏதுவாகும். எனவே பாதையை அகலப்படுத்துவது நல்லது. அல்லது வண்ணங்களால் ஆன ‘சிம்ஸ்’ ஒன்றைக்  கதவில் கட்டி தொங்கவிட்டு அவ்வப்போது வெளியாகும் நல் ஓசை மூலம் சரிசெய்யலாம். நுழைவாயில் குறுகலாக இருக்கக் கூடாது. இப்படி இருந்தால், அருகில்  கண்ணாடிகளை பொருத்தி நுழைவாயிலை பெரிதாக்கிக் காட்டலாம். ஆனாலும் வெயில்பட்டு எதிரொளிக்காத வண்ணம் கண்ணாடியை நிலை நிறுத்தவேண்டியது  அவசியம். வாசற்படி ஆழ்ந்த வண்ணத்திலும், அருகிலுள்ள மதில் சுவர்கள் இளம் வண்ணத்திலும் வேறுபாட்டுடன் காணப்பட வேண்டும். ஒரே வண்ணத்தில்  இருப்பது ‘ச்சீ’யை அதிகப்படுத்த வழி இன்றி முடங்கும் நிலை உருவாகும்.

துளசி மாடம்

கிழக்கில் துளசியை தரைமட்டத்தில் வைத்தால் பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து அங்கே துளசி மாடத்தை  வைத்தாலும் நற்பலனே. ஆனால், துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது. வருடம் முழுவதுமே பசுமையாக இருக்கும் மரங்களை  வைத்தால் வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவுதான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய  மரங்களை நடாமல் இருப்பதே மேலான பலனைத் தரும். கூர்மையான ஊசியிலை கொண்ட காட்டு மரங்களை வளர்க்கக்கூடாது.

வட்ட வடிவ இலை கொண்ட மரங்கள் சிறப்பானவை. செயற்கை முறையில் வளர்ச்சி குன்றிய குற்று மரங்கள் அதாவது, போன்சாய் போன்ற அலங்கார மரம்  வளர்ப்பது நல்லதல்ல. இதை தவிர்க்க வேண்டும். நறுமணம் கொண்ட செடி, மரங்கள் பவளமல்லி, மந்தாரை போன்றவற்றை பராமரிப்பது விருட்ச வேதை  எனப்படும் நற்பலன்களை அளிக்க வல்லவை. வாசற்படிக்கு நேர் முன்னால் உள்ள மரத்தால் நம் சந்ததியினர் பாதிக்கப்படக்கூடும். ஆகவே அந்த இடத்தில் மரக்  கன்று நடுவதோ, ஏற்கெனவே இருக்கும் மரத்தை வளர்ப்பதோ கூடாது; அதனை அப்புறப்படுத்துவது நல்லது.

முள் உள்ள செடி, மரங்களை வளர்த்தால் எதிரிகளால் தொல்லையும் அதனால் நஷ்டமும் ஏற்படும், மனதில் பயம் உருவாகும், தோல்விகளை சந்திக்க  வேண்டியிருக்கும். முக்கியமாக அயலார் பார்வையில் படும்படி இவை வீட்டின் முன்பகுதியில் இருக்கலாகாது. புளிய மரம், வில்வம், எலுமிச்சை, இலந்தை  மரங்கள் புகழைக் குறைப்பதுடன் மாளாத கஷ்டத்தை வரவழைக்கும். கழுகு எனப்படும் பாக்கு மரமும் வீட்டுள் நல்லதல்ல.

வாஸ்து பாஸ்கர்

ஐஸ்வர்யம் அள்ளித்தரும் வாயு மைந்தன்

திருவாசுதேவப்பெருமாள் திருக்கோயிலில்தான் அனுமன் நித்ய சிரஞ்சீவியாய் வாழும் வரம் பெற்றார் என அறிகிறோம்.  ராமபிரானிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்தவர் ஆஞ்சநேய மகாமூர்த்தி. மற்றவர்கள் எல்லாம் ராமபிரான் மூலம் ஸ்ரீமந்நாராயணனிடம் வைகுந்தம் வேண்டி, பிரார்த்தித் தனர். அனுமன் மட்டும் வைகுந்தம் செல்ல மறுத்துவிட்டார். காரணம் பூலோகத்தில் ராம நாம ஜெபம் செய்ய வழி உண்டு. ஸ்ரீவைகுண்டம் சென்றால் நாராயண கோஷம்தானே கேட்கும் என்ற ஒரே கார ணத்துக்காக! என்றும் அழியாத சிரஞ்சீவியாய், ராம நாம கீர்த்தனை சதாகாலமும் செய்து, எங்கெல்லாம் ராம நாம ஜெபம் நடக்கின்றதோ அங்கெல்லாம் தான் எழுந்தருளியிருக்க ராமபிரானிடம் வரம் பெற்றார். அவ்வாறு அவர்

‘சிரஞ்சீவி’ வரம் பெற்றது இத்திருக்கோயிலில்தான்.
-  என்றார் ராமதேவர் எனுஞ் சித்தர். அனுமனின் வீரம், மனோபலம், புத்தி கூர்மையை புலத்திய சித்தர் அற்புதமாய் வர்ணிக்கின்றார்:
ராமபிரானுக்கு இணையான வீரமும், வஜ்ஜிர தேகமும், நவவியாகரண பண்டிதனாயும் விநாயகருக்கு இணையான ஞானமும் ஹயக்ரீவ மூர்த்திக்கு சமமான பேரறிவும் கொண்ட நித்ய  சிரஞ்சீவி என்று அனுமனின் பராக்கிரமத்தை விவரிக்கிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயர், இத்திருக்கோயிலில், பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதிக்கின்றார். கை கட்டி, வாய் பொத்தி, பவ்யமாய் கோலங் கொண்டு, சேவை சாதித்து பக்தர் தம் குறையை நீக்கி அவர் மேன்மை கொள்ள உற்ற துணையாய் விளங்குகின்றார் என்றார் உரோமமுனியெனுஞ் சித்தர்:

பவ்ய ஆஞ்சநேயரை வியாழன், சனிக்கிழமைகளில் ஆராதனை செய்தால் மெத்த பலன் கிட்டும் என்று சித்தர் பாடல் மூலம் அறிய லாம். திருமஞ்சனம் செய்தும், பதினொரு முறை பிரதட்சிணம் செய்தும் தொழுதால் எதைக் கேட்டாலும் இல்லை என்னாது தருவார். அழுகிணி சித்தர் பாடல் மூலம் எதிரிகளின் கொட்டத்தை அடக்குபவன் அனுமன் என அறிகிறோம். வாழ்வதற்கு பணம் வேண்டும். நல்ல நட்பு, சுற்றம், ஆரோக்கியம், ஆயுள், வேலை வேண்டும். நல்ல அறிவும் வேண்டும். இவை அனைத்தையும் ஒரு சேர காலதாமதம் இன்றி உடனடியாகத் தருபவனே இந்த பவ்ய ஆஞ்சநேயர் என்பதாம்.

சட்டைமுனி சித்தர். அமாவாசை திதியில் திருமஞ்சனம் ஆரம்பித்து பதினெட்டு அமாவாசை தொடர்ந்து செய்ய குலத்து நீண்ட கால சாபம் விலகும். எந்த முன்னேற்றமும் இல்லையே என்ற ஏக்கம் கொண்டு வாழ்வோ ருக்கு கண்டிப்பாக விமோசனம் சேரும் என்கிறது சித்தர் பாடல். வியாபாரத்தில் சரிவா? நஷ்டமா? குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த குழந்தை குறையோடு உள்ளதா? ஞானம், பக்தி, பலம், வீரம், கீர்த்தி, சேவை, அடக்கம் இத்துணையும் தந்து விமோ சனம் அளிப்பவரே பூமிதேவி-ஸ்ரீதேவி சமேதரான ஸ்ரீவாசுதேவப் பெருமான். மூல நட்சத்திரத்தில் அனுமனை வழிபட்ட பின் இப்பெருமானை வழிபட்டு வர, சித்திக்கும் மேற்சொன்ன மேன்மை யாவுமே.

ஆனி மாதத்தில் திருமஞ்சனம் செய்தல் மெத்தவே சிறப்பு என்கிறது முன்னை பதஞ்சலியார் பாடல். மூல நட்சத்திரத்தில் யாகம் செய்து தொழுவதும் மேன்மை தரும். முடி உதிர்தல், பொடுகு,  முடி நீண்டு வளராமை, அடர்த்தி குறைவு போன்ற கேச பீடைகளிலிருந்து விடுபட ஏதுவாகும். மாசி மாதம் கோடி அர்ச்சனை, லட்சார்ச்சனை செய்வதால், எந்த நோயும் அண்டாது பாதுகாப்பதுடன், கோடி கோடியாய் செல்வத்தைக் குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

பாம்பாட்டியார். புனர்பூசம் நட்சத்திர நால் முதல் மூல நட்சத்திர நாள் முடிய கோடி அர்ச்சனை பெருமானுக்குச் செய்ய, அதுவும் மாசிமாதம் ஆயின் தேடாத திரவியம் சேரும். பெரும் புதையல் கிடைக்கும். சொந்த வீடும் அமைந்து இன்பம் பற்பல வழிகளில் வந்தடையும் என்கின்றார் பாம்பாட்டிச் சித்தர்.

அகப்பேய் சித்தர். வாசுதேவப்பெருமாளை நம்பிக்கையோடு தொழுவார் தம் மன சஞ்சலம் அகலும். எப்படிப்பட்ட ரோகம் ஆன போதும் அந்த வியாதி அகலும். திருமணத் தடை உடைந்து போகும். வாழுங்காலம் நீளும். தீர்க்காயுசும் சேரும் என்ற உண்மையை உணரலாம். பிரம்மன், ருத்திரன், இந்திரன், விபீடணன், இலக்குவன், பரதன், ஆதி கருடன் ஆகியோர் வந்திருந்து தொழுதேத்திய புண்ணிய பூமி.

எப்படிப்பட்ட கொடிய தோஷங்கள் ஆனாலும் விலக்கும் திவ்ய மூர்த்தி இவ்வாசுதேவப் பெருமான். ஆஞ்சநேயர் ராமனைத் தொழுத தலம்.  ராமனே வாசுதேவப் பெருமாள். மண்ணில் மகி மையுடனும், ஒரு பரிபூரண வாழ்வை வாழ்ந்தோம் என்ற மகிழ்ச்சியுடன் கண்டிப்பாய் சொர்க்கம் செல்ல பிறவாமை பெற நாம் அனைவரும் தொழ வேண்டிய ஒரு புண்ணிய க்ஷேத்திரம் இந்த கடகம்பாடியுறை வாசுதேவப் பெருமாள் என்கின்றார் அகத்தியர் தமது ஜீவ நாடியுள்.

கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி வழியாக பூந்தோட்டம் செல்லும் பேருந்து பாதையில் 25 கி.மீ. தொலைவில் கடகம் பாடி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து செல்பவர்கள் பூந்தோட்டத்திலிருந்து 7 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். கோயில் தொடர்புக்கு: 04366-273600.

நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்

பொரிமாவும், பெருமாளும்...

2013-12-11 இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான சூழ்நிலையில், நடுநாயகமாக அமைந்துள்ள சிறிய குன்றின் மீது பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி பெரும £ளுக்கு அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. அருகேயே கல்யாண லட்சுமி நாராயணப் பெருமாளும் அருள்பாலிக்கிறார். தென் திருப்பதி என்று  சொல்லும் அளவிற்கு இக்கோயில் பக்தர்களிடையே பிரபலமாகி வருகிறது. சுமார் 250 ஆண்டுகள் பழமை மிக்கதாகக் கருதப்படும் இந்த  ஆயத்திலும் திருப்பதி போன்றே வேங்கடவன் நின்ற கோலத்தில், சகலவித அலங்காரங்களுடன் காட்சி தருகிறார்.
இந்த சிறிய குன்றின்மீது சுமார் 200 மீட்டர் நடந்து சென்றால் பன்னிரண்டு அடி உயரமுள்ள விஸ்வரூப வீர அஞ்சலி ஹஸ்த ஆஞ்சநேயரை  தரிசிக்கலாம்.   சகல தோஷங்களையும் நீக்கும் சக்தி இந்த அனுமனுக்கு இருப்பதால் இங்கு  நிறைய பக்தர்கள் அனுதினமும் வருகிறார்கள். இந்த அனுமனுக்கு வடைமாலை சார்த்தி வழிபட ராகுகேது தோஷங்கள் விலகி ஓடும் என்பது  நம்பிக்கை.
ஆஞ்சநேயருக்கு எதிரே கம்பீரமாகக் காணப்படும் ஆலயத்தில் கல்யாண லட்சுமி நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கி  தரிசனம் அளிக்கிறார். இம்மலைக்கு வரும் பக்தர்களை நோக்கி வணங்கி வரவேற்கும் தோரணையோடு பக்தியையும் வெங்கடேசப் பெருமாளின்  அருளையும் பரஸ்பரம் பரிமாறி வைக்கும் அரும் சேவையை ஆற்றி வருகிறார்.

காரமடையில் பெருமாள் லிங்கவடிவில் சுயம்புவாக வெளிப்பட்டது போல, இத்தலத்திலும் இறைவன் சுயம்புவாகத் தானே தோன்றி, தனது  வலதுபுறத்தில் தாயார் சேவை சாதிக்க, திருமண் கல்யாண லட்சுமி நாராயணராக அருட்காட்சி தருகின்றார். திருமண்ணால் (திருமண் என்றால் ந £மக்கட்டி) இங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன், இறைவியைத் தினசரி அலங்கரித்து விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. முதல்நாளில் சுவ £மியை அலங்கரித்த திருமண்ணையே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள். அக்காலத்தே யானைகள் இம்மலைப் பகுதிகளிலும் காட்டுப்  பகுதிகளிலும் இருந்து வந்ததன் பொருட்டு ஆனைக்கரட்டுப் பெருமாள் என்றும் இவ்விறைவன் அழைக்கப்படுகிறார். ஒரு சில சமயங்களில், பிரதோஷ காலத்தில் இவ்வாலய இறைவன் உக்கிரமாகி, நரசிம்மராக மாறுவதாகச் சொல்லப்படுகிறது. திருமண்ணால் அலங்கரிக்கப்பட்ட திரும £லின் முகத்தில் சீரிய வெடிப்புகள் ஏற்படும். அப்போது அவர் உக்கிர நரசிம்ம மூர்த்தியாக மாறுகிறார் என்கிறார்கள்.

 தனது வலது புறத்தில் அன்னை பத்மாவதி தாயாரோடு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தருவதால், இங்கே திருமணம் ஆகாதவர்கள்  வந்து தங்களது ஜாதக நகலை பெருமாளிடம் வைத்து பிரார்தித்துச் செல்கிறார்கள். அப்படி ஜாதகத்தை வைத்து வேண்டிக் கொண்டவர்களில்  நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடைகள் அகன்று அவர்களது திருமணம் இனிதே நடந்தேறி இருப்பதற்கு இங்கே கருவறை அருகே குவிந்து  கிடக்கும் கல்யாணப் பத்திரிகைகளே சான்று.

இவ்வாலயத்தின் பலி பீடம் அற்புதமான சக்திகளை கொண்டது என்று பக்தர்கள் சொல்கிறார்கள். பேய், பிசாசு, பில்லி சூன்யம் இவற்றை அகற்றும்  அற்புத சக்தியை இப்பலிபீடம் கொண்டுள்ளதாம். நோய்வாய்ப்பட்டு துன்புறுபவர்கள் இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்து தங்களது  இன்னல்களை தீர்த்துக் கொள்கின்றனர்.

பெருமாளின் கருணையைப் பெறுவதற்காக சுத்தமான கம்பு, அரிசியினை விரதம் இருந்து அரைத்து பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து,  சிறிது ஏலப்பொடியும் கலந்து, வெள்ளைத் துணியில் முடிந்து இவ்வாலயத்தில் வேண்டுதலாக கொடுக்கிறார்கள். இந்த வழக்கம் நூறாண்டு காலமாக  தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் பெருமாளுக்குப் பிடித்தமான நைவேத்தியம் இதுவே. இம்மலை அருகே கிடைத்த ஒரு பழங்காலக்  கல்வெட்டில், ‘பொரிமாவும் பெருமாளும்.....’ என்ற வாசகம் காணப்படுகிறது.

இம்மலைக்கு வரும் பக்தர்களுக்கு அர்ச்சகர் கொடுக்கும் குங்குமம், துளசித் தீர்த்தம் தவிர, இம்மலையின் மண்ணையே பிரசாதமாகவும் கொ டுப்பதும் உண்டு. இந்தப் பிரசாத மண் பலவிதமான நோய்களையும் நீக்குவதாகக் கூறப்படுகிறது. கால்நடைகளின் நோய் தீர்க்கவும் இந்தமண்  பிரசாதத்தை வாங்கிப் போகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் செய்வதாக வேண்டிக் கொண்டவர்களால் திருப்பதி செல்ல முடியவில்லையெனில் அதற்குப் பதிலாக  இங்கு வந்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இத்தல பெருமாளை ஆதிசேஷன் பூஜித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்  பாம்பு உருவில் வந்து தேவர்கள் இவரை தரிசித்ததாக வரலாறு உள்ளது. ஆலயத்தில் வடமேற்குப் பகுதியில் மிகப் பெரிய பாம்புப் புற்று ஒன்று  இன்றும் காணப்படுகிறது. கருடசேவை முக்கியத் திருவிழாவாக இங்கே கொண்டாடப்படுகிறது. உற்சவமூர்த்தி கருட வாகனத்தில் தேவியரோடு  உலா வரும் காட்சி அற்புதமானது. புரட்டாசி மாதத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது. அம்மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று சமாராதனை  என அழைக்கப்படும் அன்னதானம் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

இந்த ஆலயம் ஈரோட்டிலிருந்து 35 கி.மீ. தொலைவில், பவானிக்கு அருகே பருவாச்சி செல்லும் வழியில், ஒட்டபாளையம் என்ற இடத்தில் அமை ந்துள்ளது. பேருந்து, மினி பஸ் வசதிகள் உண்டு.

Lord Arthanareeswarar Temple, Tiruchengode/திருச்செங்கோடு


Tiruchengode taluk is located in Namakkal district, south of Salem district and east of Erode district. Temple is on the hill which is red in color. One can take on 1206 steps to reach the top of the hill to worship the Lord Shiva-Ardhanareeswarar. Cars and taxis are available to reach the temple. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஈரோட்டிலிருந்து 18 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது.

Shiva shared half of his body with Parvathi. The left side of idol is Parvathi, and right side is Shiva. There are different beliefs on the formation of this idol. One such belief is that the idol is made by Siddhars out of Ven pashanam , which is a mixer of veriety of herbals in a particular ratio. And another is that the idol is formed naturally (known as 'Suyambu ') and not made by anybody. The Lord Arthanareeswara is facing western direction here, which is not common amongst Shiva temples. 

It is auspicious to garland the lord with Vellerukku, Vilvam, Lotus, Champa, Mandarai, Padiri, Sengkaluneer, Ponnarali apart from usual Sandal, KumKum and Viboodi. There is a spring under the feet of Lord Arthanareeswara, which never dries. Devotees believe that the water from this spring is special holy divine water (known as Deva theertham). It is also believed that, this holy water can cure any disease if consumed for one mandala (48 days continously). The priest who is doing pooja serves this holy water to the devotees as Prasadham.
Daily Poojas
Kala Santi : 8:00 am
Uchi Kalam : 12:00 noon
Sayarachai : 5:00 pm

Abisakams conducted only on uchikalam
Beliefs
There is small shrine for Pandeeswarar on the hill. People offer cradles and they believe that they can have children.On the way to temple, the sixtieth step is considered as step of Honesty and truth-that is sathiyappadi. When people had problems and litigations among them, one who was ready to tell the truth from this place was believed to be the true and honest person; his evidence played vital role in delivering justice in those days.Pasuvan Swami attracts many farmers and villagers. They offer milk, butter and curd to Lord in a deep belief that this would be returned abundantly and richly.Many people who have Nagadosham offer abishegams to Adiseshan with turmeric and kumkum. It is generally believed that they are blessed with marriage soon.

Tuesday, October 28, 2014

health care support to poor

Ekam Foundation, an NGO, as part of the celebrations, has begun its massive cleaning operation of nearly 2,100 government hospitals across the state. Focussing on maternity and child health, the foundation is engaged in providing timely and quality healthcare for  infants of poor and vulnerable communities in government hospitals of Tamil Nadu.
 The foundation also creates awareness among people about government health insurance schemes. “Any parent who can’t afford their child for treatment can call our helpline (94459 22333) and we find funding to support them," said Dr Sailakshmi.
thanks to  http://archives.deccanchronicle.com/131009/news-current-affairs/article/government-hospitals-cleaned-part-%E2%80%98joy-giving%E2%80%99

http://chaintherapy.org/resources.php?pno=1
Persons with meagre income having no backing of formal organizations/institutions often find great difficulty in funding treatment for serious medical ailments. ChainTherapy was initiated to support such persons by using the power of online community.
At ChainTherapy we believe that everybody wants to help someone who is genuinely in need to the extent they can. The crux of the problem is thus the credibility of the cause. Credibility often goes hand-in-hand with transparency. We believe, this could be achieved by making information (about the patient-in-need) available in a manner that could be easily verifiable by anyone should they choose to do so.
Yes. Putting together relevant information is definitely a time consuming activity should it be the responsibility of an individual. However, if this were taken up by different members of the online community, we believe it would be so much easier. That is why ChainTherapy has been developed
It is a facilitating platform that has been designed to help you collaborate with many like-minded individuals in raising funds for credible patients
Many persons have come together in making ChainTherapy happen. It is amazing how everyone came forward to provide their services free of cost. Individuals/organizations that have not just resposed faith in the cause but have actively supported it are

Foods You Should Refrigerate & food you should not refregirate

1. Potatoes: When too cold, starches found in potatoes turn to sugar, yielding an off flavor. Keep potatoes stored in a paper bag in a cool, dark cupboard or drawer. Same goes for sweet potatoes.
2. Honey: Your luscious honey will turn to crystallized gunk if it is stored in the fridge. Store it at room temperature and out of direct sunlight for happy honey.
3. Tomatoes: Tomatoes actually start losing their flavor and become quite mushy if left in the fridge. Leave on the counter and use when they have a slight give to the outside skin.
4. Apples: Apples, just like tomatoes, start to loose flavor and texture after spending time in the fridge. Leave them on the counter, and toss them in the fridge for 30 minutes prior to eating if you want a crisp bite.
5. Onions: The best place for onions is in a paper bag in a cool, dark cabinet or drawer. If stored in the fridge, they soften and impart an oniony scent on nearby foods.
6. Peanut butter: Peanut butter does just fine stored in a cool, dark cupboard.
7. Bread: You might be tempted to store bread in the fridge, but it actually dries out faster. Instead, store it in a cool cupboard or bread box for a fresh slice.
8. Bananas: Leave those bananas on the counter, and if they turn brown before you get to them, toss them in the freezer to make banana bread at a later date.
9. Most oils: Pretty much all oils are safe to store at room temperature. If the oil has a lower saturated-fat content, such as safflower or sunflower, it will benefit from being kept cool, so store it in a dark cabinet or the fridge door.
10. Avocados: Store avocados on the counter and any leftovers in the fridge. But they’ll lose flavor, so it’s a good idea to use a whole one when making the cut.
11. Peppers: Red, green, yellow, and even chili peppers are just fine stored in a paper bag in a cool cupboard or drawer.
12. Winter squash: Acorn, spaghetti, and butternut do best when stored at room temperature.
13. Citrus: Store oranges, lemons, and limes at room temperature on your kitchen counter. Just be careful not to bunch them too closely, or they will tend to mold.
14. Berries: Fresh berries already have a short shelf life, so leave them out of the fridge and eat them within a day or two of purchasing.
15. Melons: Most melons do best outside the fridge. Once refrigerated, they tend to break down and become mealy. After cutting, if any are remaining, store them in the fridge.
16. Ketchup: Yup, your ketchup is just fine in your pantry — even after it has been opened. Because of the amount of vinegar and preservatives, it will do just fine (think ketchup packets at your favorite fast-food restaurant).
17. Jam: Due to the high amount of preservatives in jams and jellies, they are also OK to store in the pantry after opening.
18. Stone fruits: Stone fruits aren’t friends of the fridge, so leave them on the counter until they’re ripe, and then eat.
19. Pickles: Another item high in preservatives, mainly vinegar, pickles will stay crisp in the pantry. But, if you’re a fan of cold ones, store them in the refrigerator door, which leaves the coldest spots of the fridge for items that really need the space.
20. Garlic: Store garlic in a paper bag in a cool, dark spot, and it holds its wonderful flavor for weeks.
21. Hot sauce: Make more room in your fridge, and store hot sauce in your pantry — even after it has been opened. All the preservatives and spices keep it safe for topping your eats.
22. Spices: Ground spices do not need to be refrigerated. Ever.
23. Coffee: Many think coffee deserves a special place in the fridge or freezer, but it actually is best at room temperature so its natural oils can really flavor your favorite cup of joe. Buy in small batches for really fragrant, and rich, morning coffee.
24. Soy sauce: Yes, there is more than enough natural preservatives (salt) in soy sauce for it to remain safe if stored at room temperature.
25. Some salad dressings: Just like other condiments, most salad dressing, especially ones that are vinegar- or oil-based, are just fine stored outside the fridge. Cream-, yogurt-, or mayo-based dressings should be stored in the fridge.
26. Nuts: Nuts are just fine stored in a cool, dark spot.
27. Dried fruits: No need to refrigerate. Nope.
28. Cereal: Cereal is wonderfully happy in the pantry.
29. Vacuum-packed tuna: You might not be sure, but that tuna has been sealed, just like in a can, so it’s more than fine stored at room temperature.
30. Herbs: If you pick up fresh herbs from the grocery store, instead of stuffing them back in the suffocating plastic bag, place them in a water-filled glass jar on your kitchen counter, creating an herb bouquet to use while cooking.
31. Real maple syrup: As with honey, that maple syrup will crystallize and get goopy if stored in the fridge.

thanks to :  http://dailysavings.allyou.com/2014/07/22/non-refrigerated-food/

Foods You Should Be Refrigerating

You know milk, meat and eggs belong in the fridge. But what about less obvious foods? Keep these ten foods cold and they’ll stay safe – and tasting great – longer.

1. Tortillas
Some tortillas are prone to molding. That’s why the fine print on many tortilla packages recommends refrigerating after opening. Chill them and they’ll stay in tiptop shape until the expiration date on the package.

2. Salami
Cured meats like salami are less likely to harbor bacteria than cooked meats, but that doesn’t mean they’re always 100 percent safe. A 2006 study of 1,020 dry Italian salamis found that 23 percent of them contained the bacteria Listeria monocytogenes. Cured meats can also contain other harmful bacteria such as E. coli. Store your salami in the refrigerator for up to 12 days to slow potential bacterial growth.

3. Ripe Bananas
It’s fine to ripen bananas on the kitchen counter. Trouble is, they keep ripening, and ripening and ripening. Once they’re ready to eat, pop them in the fridge. If their skins turn brown, don’t worry, they’re still fine.

4. Nuts
Nuts’ fragile unsaturated fats go rancid quickly. While that won’t hurt your health, it’s definitely bad news for flavor. Keep your nuts tasting their best by stowing them in a moisture-tight plastic or glass container in your refrigerator for up to a year.

5. Maple Syrup
Maple syrup has a surprisingly short shelf life. So if yours is sitting in your pantry it’s time to relocate it to the fridge. Stored in glass or a tin, Maple syrup can usually stay fresh for up to a year. However, if you notice any mold growth, be sure to toss it immediately.

6. Dried Fruit
Dried fruit has less moisture than fresh fruit, so it doesn’t spoil as quickly, but it still needs refrigeration for maximum freshness. Keep it in the main compartment of your refrigerator for up to 6 months.

7. Ketchup
Restaurants may leave their ketchup on the table, but that doesn’t mean you should. While its high acid content will keep most bacteria at bay, cool temperatures help maintain flavor and freshness.

8. Corn on the Cob
After just six hours at room temperature the sugar content of corn decreases by a whopping 40 percent. Unless you’re going to cook it right away, keep corn in the fridge – husks and all – for up to two days.

9. Chocolate Syrup
Chocolate syrup is an easy way to make a glass of milk taste even better. But not if it has developed funny flavors. Chill yours after opening and you can enjoy it for six months.

10. Pecan and Pumpkin Pies
Made with eggs, these treats are magnets for bacteria. Fresh from the oven, they’re okay to eat at room temperature for up to two hours. After that, they should go straight to the fridge for a maximum of three days.

Karen Ansel, MS, RDN, is a nutrition consultant, journalist and author based in Long Island, NY.

இம்மையிலும் நன்மை தருவார்

இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை திறந்திருக்கும். அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி, மதுரை-625 001. phone 91- 452- 6522 950, +91- 94434 55311,+91-93451 55311,+91- 92446 55311 பைரவருக்கு மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள். செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கவும், தலைமைப் பொறுப்புள்ள பதவி, கவுரவமான வேலை கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். அதிசய சிவலிங்கம்: எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு.

மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு
 மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.
பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்: பொதுவாக சிவன் கோயில்களில் அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத் தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்னைகளிலிருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்னை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள்.

லோக கைலாயம்' என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.
சிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அதற்கு முன் இங்கு லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில்,  தலைமைப்பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.

குரு தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

அருள்மிகு திருநெடுங்களநாதர் திருக்கோயில்

கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வரஹி for marriage by offering turmeric திருச்சி தஞ்சை ரோட்டில் 18 கி.மீ. தூரத்தில் துவாக்குடி என்ற ஊரில் இறங்கி 3 கி.மீ. சென்றால் திருநெடுங்களத்தை அடையலாம். திருச்சியிலிருந்து இந்த ஊருக்கு செல்லும் டவுன்பஸ்களும் உண்டு.

அம்மன் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன்

வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள் அம்பிகை. உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது கோயில் கட்டி வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், ‘‘தென்னாட்டுப் போரில் வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம்’’ என்று வேண்டிக்கொண்டு, அந்த மாரியின் அருளால் போரில் வெற்றியும் பெற்றார். உடனே, அம்மனை கோயிலுக்குள் கொலுவிருத்தி அழகு பார்த்தார். பரிவார தெய்வங்களாக விநாயகரும் கருப்பண்ணசாமியும் அமைந்தனர். சமயபுரம், தமிழகத்தின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோயிலில் எப்போதும் பக்தர் மயம்தான். மாவிளக்கு ஏற்றுதல், மொட்டை போடுதல், உடல் உறுப்புகள் உரு காணிக்கை செலுத்துதல் என்று பலவித பிரார்த்தனைகளையும் இங்கு நிறைவேற்றுகிறார்கள். சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள். கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை ஈனும் வரப்பிரசாதி. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

வீரபாண்டி கௌமாரியம்மன்

தேனி மாவட்டத்தில் முல்லையாறு பாய்ந்தோடும் பகுதியான வீரபாண்டியில் வீற்றிருக்கிறாள், கௌமாரியம்மன். இந்த அன்னை, இந்த மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். மதுரையை ஆண்ட மன்னன் வீரபாண்டியனுக்கு இரு கண்களும் பாதிப்படைந்தன. அரசன் பார்வை பெறவேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தான். ஈசனும் ‘‘புள்ளைநல்லூரில் கண்ணுடைய தேவி தவமிருக்கிறாள். அவளுக்காக கோயில் எழுப்பு’’ என்று அருளாணையிட்டார். மன்னனும் அதை ஏற்று கோயில் கட்டினான்; கண் பார்வை பெற்றான். வீரபாண்டி கௌமாரி என்று அன்று முதல் அம்மன் வழிபடப்பட்டு வருகிறாள். இன்றும் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தை நோக்கி வந்து நலம் பெறுகிறார்கள். தேனி-கம்பம் வழியில் தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் வடபத்ரகாளி

தஞ்சை, பூமால் ராவுத்தர் கோயில் தெருவில், வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலயம் அமைந்துள்ளது. சும்பன், நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே நிசும்ப சூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் இந்த காளியை வணங்கிச் சென்றனர். தீய சக்தியால் பாதிக்கப் பட்டவர்கள் இத்தல மண்ணை மிதித்தாலே போதும் தெளிவு பெறுவது நிச்சயம். 

நத்தம் மாரியம்மன்

மதுரை சிற்றரசர்களில் ஒருவரான சொக்கலிங்க நாயக்கரின் அரச பீடத்தை அலங்கரித்த தெய்வமே நத்தம் மாரியம்மன். அரண்மனைக்கு பால் அளக்கும் ஒருவன், பக்கத்து சிற்றூரிலிருந்து குடத்தில் பால் கொணர்வான். பாலைக் கறந்து குறிப்பிட்ட  இடத்தில் இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்க பால் குடம் தானாக காலியாகி இருந்தது. அரசனுக்கு இந்த விஷயம் சென்றது. அடுத்தடுத்து சோதித்துப் பார்த்தபோதும் அப்படியே நடந்தது. மன்னன் அந்த இடத்தை தோண்டச் சொன்னார். ரத்தம் பீறிட்டது. அம்மனின் சிலை தெரிந்தது. அங்கேயே அரசன் அம்மனுக்கு கோயிலைக் கட்டினான். இத்தலம் திண்டுக்கல்லுக்கு அருகேயே உள்ளது. நோய் தீர்க்கும் தேவியாக நத்தம் அம்மன் விளங்குகிறாள்.

இருக்கன்குடி மாரியம்மன்

சதுரகிரியில் வாழ்ந்த சிவயோகி ஞானசித்தர் என்பவர் பராசக்தியை நோக்கி தவமிருந்தார். தான் யோக நிஷ்டையாகும் இடத்தில் மாரியம்மனாக அருள்பாலிக்க வேண்டுமென வரம் கோரினார். அன்னையும் அவ்வாறே அருளினாள். வெள்ளப் பெருக்கால் அழிந்து விட்ட கிராமத்திலுள்ள மாரியம்மன் சிலையொன்று சித்தர் ஐக்கியமான பூமிக்குள் வந்து புதைந்தது. பூசாரிப் பெண் ஒருத்தி, தரையில் வைத்த சாணக் கூடையை எடுக்க முயன்றபோது தூக்க முடியவில்லை. அப்போது அங்கு பூசாரிப் பெண்ணுக்கு அருள்வந்து, தான் மாரியம்மனாக இங்கிருப்பதாக வாக்களித்தாள். பக்தர்கள் இன்றுவரை அவளின் அருட்சாரலில் நனைந்து சுகமாக வாழ்கின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில்.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி

பிரம்மனின் கர்வத்தை அடக்குவதற்காக அவனுடைய ஐந்தாவது தலையைக் கொய்து எறிந்தார் ஈசன். பிரம்மனின் தலையைக் கொய்த பாவமும் சரஸ்வதியின் சாபமும் ஈசனைத் துரத்தின. திருவோடு ஏந்தி பசியோடு ஈசன் அலைந்தார். இத்தலத்தில்தான் புற்றுருவாக பார்வதி எழுந்தருளி பிரம்ம கபாலத்தை ஈசனிடமிருந்து பறித்து சாப நிவர்த்தி பெற்றுத் தந்தாள். எளிமையான மக்களிடையே, அவர்களுக்குள் ஒருவளாக அங்காளம்மன் புற்றுக்கு பின்னால் எழுந்தருளியிருக்கிறாள். ஒவ்வொரு அமாவாசையன்றும் பல லட்சம் பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள். திண்டிவனம்-செஞ்சி சாலையின் நடுவே பிரியும் பாதையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சகல தோஷங்களையும் சிதறடிக்கும் சீரியவள் இவள்.

கோவை -சௌடாம்பிகை

ஈசனின் ஆணைப்படி தேவலன் எனும் முனிவர் திருமாலை நோக்கி தவமிருந்தார். ஆனால், அசுரர்களோ அவரைத் தொந்தரவு செய்த வண்ணமே இருந்தார்கள். அவர்களின் தொல்லையை திருமாலின் சக்ராயுதம் தடுத்தது. அதையும் தாண்டி ஒரு அம்பு தேவலனை துளைத்தது. அப்போதுதான் அம்பாள் சௌடாம்பிகை எனும் திருநாமத்தோடு எழுந்தருளி முனிவரைக் காத்தாள். மனவேதனை போக்குவதில் இவள் மகாதேவி. கோவை நகரின் மையத்தில், ராஜவீதியில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள், சௌடாம்பிகை.

புட்லூர் பிள்ளைத்தாய்ச்சி அம்மன்

பார்க்கும்போதே உடலும் உள்ளமும் சிலிர்க்கும். கர்ப்பிணிப் பெண் வடிவில் உலகையே சுமந்து கருணையோடு கால்நீட்டிப் படுத்திருக்கும் இந்த அம்மனை வேறெந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கருவைச் சுமக்கும் பெண்ணின் தாய்மையை, இங்கு உலகைச் சுமந்து வெளிப்படுத்துகிறாள். குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவோர்கள் விரைவில் மழலையோடு நன்றிக் கண்ணீர் பெருக நிற்கிறார்கள். சென்னை, ஆவடி-திருவள்ளூர் வழியில் காக்களூர் நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது, ராமாபுரம் என்ற புட்லூர். அம்மையை தரிசியுங்கள்; ஆனந்தம் பெற்றிடுங்கள்.

சிதம்பரம் - தில்லை காளி  

சிதம்பரத்தில் ஈசனோடு போட்டியிட்டு நடனம் புரிந்து தோற்றவள், தில்லையின் எல்லையில் கருணையோடு வீற்றிருக்கிறாள். அலகிலா விளையாட்டுடையவனின் பெருமையை உணர்ந்து தானும் அந்த ஆதிசக்தியில் பாதி என்பதை உணர்ந்து, நான்கு முகமான பிரம்ம சாமுண்டியாக கருவறையிலும் உக்கிரகமான காளியாக வெளியே தனி சந்நதியிலும் அமர்ந்திருக்கிறாள். உக்கிரம் குறையக் கூடாது என்பதற்காகவே அபிஷேகம் எதுவும் இவளுக்கு செய்யப்படுவதில்லை. தீவினைகளோ, தீய சக்திகளின் பாதிப்புகளோ இருந்தால் தில்லை காளியின் தரிசனத்தில் எல்லாம் தகர்ந்து போகும். இந்த ஆலயம் சிதம்பரத்தில் உள்ளது.

மயிலாப்பூர் - முண்டகக் கண்ணி

மயிலையின் பேசும் தெய்வம். எப்போது வந்தமர்ந்தாள் என்ற வரலாறு தெளிவாக இல்லை. ஆனால், எப்போதுமே பக்தர்களை காக்க இங்குதான் நான் இருக்கப்போகிறேன் என்பதுபோல வீற்றிருக்கிறாள். மூலவருக்கான கருவறை விமானம் இல்லை. ‘கட்ட அன்னை உத்தரவு தரவில்லை’ என்கிறார்கள். அதனாலேயே கீற்றுக் கொட்டைக்குள் கருணை மணம் கமழ வாசம் செய்கிறாள். முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். தாமரை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். ஞான சூரியனை கண்ட தாமரை மலர்வதுபோல உங்களுக்குள்ளிருக்கும் ஞான தாமரையை இவள் மலர வைப்பாள். உயிரை காப்பாற்றுதலும், உயர்ந்த பதவியில்  அமர்த்துதலையும் இவள் இங்கு எளிதாக செய்கிறாள். சென்னை- மயிலாப்பூர் நகரத்தின் மையத்திலேயே இவள் கோயில் கொண்டிருக்கிறாள்.

மங்கலம்பேட்டை - மங்களநாயகி

செவ்வகக் கல் மூர்த்தத்தில் சற்று உக்கிரமாக அருளும் வனதுர்க்கை இவள். கண்ணகிக்கு கோயில் கட்ட சேரன் செங்குட்டுவன் இமய மலையிலிருந்து இரு கற்களை கொண்டு வந்தபோது தனக்கு மிகப் பெரிய உதவிகளை செய்த பரூர் பாளையத்தை சேர்ந்த குறுநில மன்னனுக்கு தான் கொண்டு வந்த இரு புனிதக் கற்களில் ஒன்றை அவனுக்கு ஈந்தான். அதில்தான் உக்கிர நாயகியான இந்த மங்களநாயகியை எழுந்தருளச் செய்தான், பரூர் மன்னன். நம் பகைகளை விலக்கி, நம் மனதிலும் தீய எண்ணங்கள் புகாதபடி காப்பாள் இந்த வனதுர்க்கை. கடலூர் மாவட்டம், உளுந்தூர் பேட்டையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில், மங்கலம்பேட்டையில், இக்கோயில்  அமைந்துள்ளது.

சிறுவாச்சூர் - மதுரகாளியம்மன்

காளியின் அருளால் மதுரையை எரித்தாள் கண்ணகி. அங்கிருந்து சிறுவாச்சூர் செல்லியம்மன் ஆலயத்திற்கு வந்தாள். செல்லியம்மனோ, ‘‘நீ இங்கு இருக்க வேண்டாம். என்னிடமிருந்து வரம் பெற்ற அரக்கன் ஒருவன் என்னையே அடிமைப்படுத்தி வைத்துள்ளான். கொடுத்த வரத்தை கொடுஞ்செயலுக்கு உபயோகப்படுத்துகிறான். எனவே, நீ இங்கிருந்து சென்று விடு, தாயே!’’ என்றாள். கண்ணகி கண்களை மூடி காளியை துதித்து அரக்கனை அழிக்குமாறு வேண்டினாள். அதன்படியே அந்த அசுரனை வதம் செய்து செல்லியம்மனுக்கு ஆறுதல் அளித்தாள். காளிக்கு நன்றி கூறி கண்ணகி விடைபெற, செல்லியம்மன் மலைமீது குடி கொண்டாள். காளியும் மதுரகாளியம்மன் என்று திருப்பெயரோடு கீழே குடிகொண்டாள். திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும். மாவிளக்கு ஏற்றினால் எண்ணமெல்லாம் ஈடேறும். ஆலய வளாகத்திலேயே உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கொண்டு வந்து ஊற வைத்து அங்கேயே இடித்து மாவாக்கி விளக்கேற்றுகின்றனர். குழந்தைப் பேறு தடை, கணவன்-மனைவி பிரச்னை எல்லாம் வெருண்டோடும் இந்த அம்மன் அருளால். திருச்சி-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் உள்ளது, சிறுவாச்சூர்.

அறச்சலூர் அறச்சாலை அம்மன்

அறம் வளர்த்த ஊர் என்பதால் அறச்சலூர் அம்மன் என்று பெயர் வந்தது. கம்பீரமான குதிரைகளுக்கு மத்தியில் எண்கரங்களோடு சூரனை வதம் செய்த கையோடு வீற்றிருக்கிறாள் அன்னை. ஜாதகப் பொருத்தமே இல்லை என்றாலும் கூட இந்த அம்மனின் உத்தரவு இருந்தால் போதும், திருமணம் கைகூடும்; திருமண வாழ்க்கையும் வளம் பெறும் என்கிறார்கள். பூ போட்டு வாக்கு கேட்கிறார்கள். வெள்ளை நிற பூக்கள் மூன்றும் சிகப்பு நிற பூக்கள் மூன்றும் பயன்படுத்துவர். சிகப்பு பூ வந்தால் சுப விசேஷங்கள் நிறைவேறும் என்றும், வெள்ளை நிற பூக்கள் வந்தால் வீடு, மனை, நிலம் வாங்கலாம் என்றும் அம்மன் உத்தரவிடுகிறாள் என்பது ஐதீகம். மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மாங்கல்யத்தை வைத்து வழிபட்டு அம்மனுக்கே அதை காணிக்கையாக தருகிறார்கள். ஈரோடு-காங்கேயம் சாலையில் 24வது கிலோ மீட்டரில் இக்கோயில் உள்ளது.

திருவக்கரை - வக்ரகாளி

ஆதித்ய சோழரும் பராந்தகரும் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியாரும் பார்த்துப் பார்த்து உருவாக்கிய கோயில் இது. சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவே வக்ரகாளி அதி உக்கிரமாக தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். வக்ராசுரன் என்பவன் ஈசனை நோக்கி தவம் புரிந்தான். ஈசனின் தரிசனமும் வரங்களும் பெற்றான். தேவலோகத்தை புரட்டிப் போட்டான். கேட்பாரே இல்லாமல் திரிந்தவனை காளி எதிர்கொண்டாள். வக்ராசுரனையும் அவள் தங்கையான துன்முகியையும் விஷ்ணுவும் காளியும் முறையே வதம் செய்தனர். வதம் செய்த உக்கிரத்தோடேயே இத்தலத்தில் அம்பிகை அமர்ந்தாள். இன்றும் அந்த வெம்மை அங்கு பரவியிருப்பதை தரிசிப்போர் நிச்சயம் உணர்வர். ஜாதக ரீதியாகவோ, தீய சக்திகளாலோ பாதிக்கப்பட்டு மனநிலை சரியில்லாதவர்கள் இச்சந்நதியை நெருங்கும்போது தெளிவடைவர் என்பது உறுதி. திண்டிவனம்-விழுப்புரம் பாதையில் மயிலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் வக்ரகாளி அருள்பாலிக்கிறாள்.

திருவேற்காடு - கருமாரியம்மன்

வெள்வேல மரங்கள் அதிகமாக இருந்ததால் வேற்காடு என்றானது. வேதங்களையே மரங்களாக்கி அதனடியில் லிங்க மூர்த்தத்தில் ஈசன் வெளிப்பட்டார். லிங்கத்தோடு அன்னையும் உதயமானாள். கொடிய அசுரனை அழிக்க முருகனுக்கு கருமாரி அன்னை தம் திருக்கரத்தால் வேல் அளித்தாள். அதனாலேயே வேற்கன்னி ஆனாள். வேலன் வேலால் கீறி தீர்த்தம் உண்டாக்கினான். அதுவே வேலாயுத தீர்த்தமாயிற்று. அந்த பராசக்தியே இங்கு மாரியம்மனாக அமர்ந்து எல்லோரையும் காக்கிறாள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே இந்த கருமாரி. வேண்டுதல் இல்லாமலேயே வேண்டியதை தருவதில் பெற்றவளுக்கும் மேலாக விளங்கும் தாய் இவள். இத்தலம், சென்னை-பூவிருந்தவல்லி பாதையில் மதுரவாயலுக்கு அருகே உள்ளது.

மாங்காடு - காமாட்சி

மாங்காட்டின் மையத்தில் அமர்ந்த மகாதேவி. ஆதிசங்கரரால் போற்றித் துதிக்கப்பட்ட ஆதிசக்தி. ஒரு காலத்தில் அக்னிக்கு மத்தியில் உக்கிர தவமிருந்தாள். தவத்தின் வெம்மை, யாரையும் அவளருகே அண்டவிடாமல் விரட்டியது. ஆதிசங்கரர் அம்மையின் உக்கிரமான இருப்பை உணர்ந்து சாந்தமாக்கி எல்லோரையும் அருகே வரச் செய்தார். அர்த்தமேரு மகாயந்திரம் எனும் யந்திரத்தை பரப்பி சக்தியின் மழையில் எல்லோரையும் நனையச் செய்தார். அம்மை தாய்மைப் பரிவோடு உயிர்களை நோக்கினாள். இன்னருளை பொழிந்தாள். திருமணமா, குழந்தைப்பேறா, உத்யோக உயர்வா, ஞானத் தேடலா... எல்லாவற்றையும் கைமேல் கனியாக எளிதாக அருள்கிறாள், இந்த மாங்காட்டு நாயகி. சென்னையில் குன்றத்தூர், பூவிருந்தவல்லி ஆகிய இரு ஊர்களுக்கும் அருகே அமைந்துள்ளது இந்தத் தாயின் கோயில்.

புன்னைநல்லூர் - மாரியம்மன்

திக்குகளையே ஆடையாக அணிந்து ஞானத்தின் உச்சியில் தோய்ந்திருந்த சதாசிவபிரம்மேந்திரரின் திருக்கரங்களால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட மாரியம்மன் இவள். துளஜா மன்னனின் மகளுக்கு அம்மை நோயினால் கண் பார்வை பாதிக்கப்பட்டது. அரச மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அரசரின் கனவில் தோன்றி பாலகியாக சிரித்தாள், அம்பிகை. தனிக்கோயில் எழுப்பும்படி அருளாணையிட்டாள். புற்றுருவாக இருந்தவளை சதாசிவ பிரம்மேந்திரர் உருவமாக்கினார். அங்கேயே சக்ர பிரதிஷ்டையும் செய்தார். மாரியம்மன் உடனேயே பேரருள் புரிந்தாள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தைலக் காப்பில் நனைகிறாள் இவள். அம்மை நோய் கண்டவர்களுக்காக அம்மை நோய் மண்டபம்  இங்கே உள்ளது. இங்கு மாவிளக்கு மாவு பிரார்த்தனை நிறைவேற்றுகிறார்கள். பார்வைக் குறைபாடு உடையவர்கள் இவளை தரிசிக்க விரைவில் நலமடைகிறார்கள். தஞ்சையிலிருது 9 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன்

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த நிலம் முழுக்க உப்பு மண்ணாக இருந்திருக்கிறது. உப்பு மண்னை வெட்டியபடியே இருக்க, ‘ணங்...ணங்’ என்று சத்தம் கேட்டது. ஓசை வந்த இடத்தில் தோண்டிப் பார்த்தால், குருதி பொங்க அன்னையின் சிலை காணப்பட்டது. ஈசனும் அம்மையும் சேர்ந்து அருள்புரியும் மூர்த்தமாக இருந்ததால் ஒருவந்தூர் என்றானது. பக்தர்கள் பிடாரி செல்லாண்டியம்மன் என்று திருப்பெயரிட்டு அழைத்தனர். பார்வதி தேவி பூஜை செய்வது போன்ற அமைப்பில் சிற்பம் ஒன்று இங்கு உள்ளது. தினந்தோறும் கோயிலைச் சேர்ந்த வேலும் பூஜைப் பொருட்களும் மேளதாளத்தோடு எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோயிலை அடைகின்றன. திருமண வரம் வேண்டி பெண்கள் இத்தலத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். விரைவிலேயே தம்பதியராக வந்து கைக்கூப்பி வணங்கவும் செய்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், மோகனூர்-காட்டுப்புத்தூர் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

படவேடு ரேணுகாம்பாள்

ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி அன்னையின் தலையை வெட்டிக் கொணர்ந்தார் பரசுராமர். சொன்னதை செய்த உனக்கு என்ன வேண்டுமென்று தந்தை ஜமதக்னி கேட்க, ‘என்னைப் பெற்றவளையே திருப்பிக் கேட்கிறேன்’ என்று தீர்க்கமாக சொன்னார், பரசுராமர். ‘தலையையும் உடலையும் கொண்டு வா, உயிர்ப்பித்துத் தருகிறேன்’ என்றார், ஜமதக்னி முனிவர். அப்படி அவர் கொண்டுவந்த உடலை நீர் தெளித்து சேர்த்து ஒளியில் பார்க்க, தலைக்குரிய உடல் மாறியிருந்தது. ஆனாலும் அவளே ரேணுகாம்பாள் என்று மகாசக்தியாக மலர்ந்தாள். அவளே படவேடு எனும் தலத்தில் அமர்ந்தாள். துயர் எனும் சொல் இனி உங்கள் வாழ்வில் இல்லை என்று திடமாக பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறாள். படவேட்டிலுள்ள இத்தலத்தைச் சுற்றிலும் நிறைய ஆலயங்கள் உள்ளன. காளி கோயில்களும் நிறைந்திருக்கின்றன. சக்தியின் வீச்சு மிகுந்த இந்தப் பகுதியின் தலையாய தலமாகவும் இது விளக்குகிறது. சம்புவராயர்கள் படவேடை கோயில் நகரமாகவே உருவாக்கினார்கள். ஆரணிக்கும் வேலூருக்கும் இடையில் மலைகளுக்கு நடுவே படவேடு ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன்  

சூரிய, சந்திர கிரகண நேரங்களில் கோயில்கள் பூட்டப்படுவது வழக்கம். ஆனால், கோட்டை மாரியம்மன் ஆலயம் பூட்டப்படாது. சூரிய, சந்திர கிரகண கதிர்களால் வரும் பாதிப்பிலிருந்து அன்னை அனைவரையும் காக்கிறாள் என்கிறார்கள். ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்னி திசை நோக்கி, வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். பெரிய மாரியம்மனின் கண்களும் பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும். பக்தர்கள் வீட்டில் அம்மை வார்த்திருக்கும் நேரத்தில் அம்மையின் வெம்மையை குறைக்க பலி பீடத்தில் வேப்பிலை கலந்த நீரை ஊற்றி அம்மனை குளிர வைப்பார்கள். உப்பு, பருப்பு, மிளகு, வெங்காயம் போன்றவற்றை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். கண் வலி, நெஞ்சுவலி போன்ற உபாதைகள் தீர கண் மலர், மண் உரு, கை, கால், முகம் போன்ற பிரதிமைகளை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.