Saturday, April 11, 2015

பறவைள் சகுனம்

செல்லும் இடங்களிலெல்லாம் பெயர் தெரியாத பல பறவைகளும் கறுப்பு நிற வால் குருவி, ஆந்தை, குயில், வல்லூறு, காகம் போன்றவை இரவு பகலாக பின்தொடர்கின்றன. என்ன செய்வது?

பறவைகளின் சப்தங்கள் நமக்கு சகுனம் அளிக்க முடியும் என வேத மந்திரம் (‘உத்காதேவ சகுனே’) கூறுகிறது. சூரியன், துளசி, பசு மூன்றையும் வணங்கி, பிரயாணப்பட்டால் தீய சகுனங்கள் சக்தியை இழந்து விடும். மேலும் ஆஞ்சநேயரை துதி செய்து புறப்படுவது காரிய ஜெயத்தை கொடுக்கும். சுசீந்திரம், சோளிங்கர், ஸ்ரீமுஷ்ணம், மோகனூர், பெரிய காஞ்சிபுரம் போன்ற தலங்களில் உள்ள ஆஞ்சநேயரை சமயம் கிடைத்த போதெல்லாம் தரிசித்துவிட்டு வாருங்கள். கீழேயுள்ள மந்திரத்தை சிவாலயத்தில் அமர்ந்து 1008 முறை சொல்லி வணங்குங்கள். 

ஆபத்துத்தரணாய வடுக பைரவாய
சங்கவர்ணாய சந்திரசேகராய நமோநம:

கஷ்டம் தாங்க முடியாதபோது கெட்ட வார்த்தைகளை சொல்லாமல் இருக்க வேண்டும். ஜகதீசா... ஜகதீசா... என்று சொல்லுங்கள்

திருக்குளத்தில் மீன்கள் சாப்பிடும்படி 10 கிலோ எள் வாங்கி வடமொழி தெரிந்த அர்ச்சகரைக் கொண்டு கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்ல செய்து எள் முழுவதையும் 108 முறையாக  குளத்தில் போடுங்கள்.

யமராஜ தர்மராஜௌ நிச்சலார்த்த
    வ்யவஸ்திதௌ
தர்பயாம் திலம் ப்ரதாஸ்யாமி பித்ரூணாம்
    முக்திஹேதவே

 
கஷ்டம் தாங்க முடியாதபோது கெட்ட வார்த்தைகளை சொல்லாமல் இருக்க வேண்டும். ஜகதீசா... ஜகதீசா... என்று சொல்லுங்கள் - See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=392#sthash.rHcoObaq.dpuf
http://m.dinakaran.com/aDetail.asp?Nid=392

No comments:

Post a Comment