Thursday, January 29, 2015

Guide for Eyeglass Lens

What is a plastic lens?  CR-39, frequently called plastic lenses, are the most common lenses sold. These lenses have replaced glass lenses because they are lighter in weight and result in a much more comfortable pair of glasses.

What is a polycarbonate lens? Polycarbonate lenses are half the weight of a regular CR-39 lens (plastic). They are harder to break and more shatter-resistant than other lens materials, making them the lens of choice for children's lenses and for sports. While polycarbonate lenses offer several advantages, the visual clarity is not as high as a plastic lens.

What is a glass lens? Glass lenses are still made today but are not sold as often. Glass lenses are twice the weight of a common CR-39 lens, more likely to break or shatter, and have to be cut at a specialty lab resulting in a longer time for manufacturing.

What is scratch coating? This is a coating to help with the everyday wear and tear on lenses. It does help prevent scratches from normal use and cleaning, but does not make lenses scratch proof.

What is anti-reflective coating? This coating provides clearer sharper vision and eliminates unwanted glare. Anti reflective coatings reduce the visual discomfort caused by glare from oncoming traffic at night, indoor overhead lights, and extended computer use. Many of the newer anti-reflective coatings offer the added benefits of resisting smudges or fingerprints and being much easier to clean.

What is UV protection? This clear coating protects your eyes from the harmful ultraviolet rays given off by the sun. If you are exposed to the sun for long periods of time, the UV filter will protect your eyes from irreversible damage.

What is a photochromic or Transitions lens? Transition® lenses (photochromic lenses) are a great option for people that are sensitive to sunlight. These lenses are clear at night or when indoors, and darken when exposed to UV rays from the sun.

What is a polarized lens? Polarized lenses are sunglass lenses that reduce the glare from the sun reflecting off of objects such as water or car windshields. Polarized lenses allow you to see the truest colors while providing the best vision, comfort, and protection from the environment. As a result, these lenses reduce eye strain and increase visibility.

What is tint? Lenses can be dyed with a tint to reduce light transmission or for a fashionable appearance. Tints can be light, dark or gradient and are available in most colors.                         

Anti-Fog Coating At least one eyeglass lens coating company (Opticote) has created a permanent coating designed to eliminate this problem. The factory-applied coating — called Fog Free — eliminates the condensation of moisture on lenses that causes fogging.
Regular plastic eyeglass lenses block most UV light, but adding a UV-blocking dye boosts UV protection to 100 percent for added safety. Other eyeglass lens materials, including polycarbonate and most high-index plastics, have 100 percent UV protection built-in, so an extra lens treatment is not required for these lenses.


These lenses are made of plastic and are extremely light in weight. They have a scratch resistive coat on them so that they do not get easily scratched and also over it they have an Anti reflective coating which prevents the light from getting reflected. The ARC coating also acts as a additional UV filter and also a shield to resist scratches. They are 97% scratch resistant as easy to handle. These lenses are very light compared to glass lenses. They have a normal index which denotes that these lenses are of the basic thickness. These lenses are used for presbyopic patient, age above 40 years. . Progressive spectacle lenses, also called progressive addition lenses (PAL), varifocal or multifocal lenses. Progressive spectacle lenses, also called progressive addition lenses (PAL), varifocal or multifocal lenses. These are used to correct presbyopia. The gradient starts at the wearer's distance prescription, at the top of the lens and reaches a maximum addition power, or the full reading addition, at the bottom of the lens. In wide design progressive intermediate and the reading zone is more compare to standard design progressive lenses and the temple side vison distortion is also less. . these are very comfortable for mostly used for computer users because of wider vision zone.The photochromic nature of these lenses make them turn dark in sunglight and provide the patient with complete uv protection from sunlight. They also give immense cooling to the patients eyes and eliminates glare while driving in sunlight. http://www.lensmakers.in/Products/Lenses-Spectacle-Lenses-Progressives/Lensmakers/EVA-PROGRESSIVE---WIDE-DESIGNNORMAL-INDEXPHOTOCHROMIC-GRAYARC-COATED/pid-837815.aspx  http://www.lenskart.com/

in any case professional guidance is safe 

கால நிலை மாற்றங்களில் வாகனங்களை காப்பது எப்படி?

தமிழகத்தில்தான் அனைத்து பருவ காலங்களும் மாறி மாறி வரும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை தமிழகத்தில் பனிக்காலம். இதைத்தொடர்ந்து கோடை காலம் ஆரம்பித்துவிடும். இந்த காலக்கட்டத்தில் கார்களும் பைக்குகளும் சந்திக்கும் பிரச்சி னைகள் ஏராளம். இவற்றை கொஞ்சம் முன் எச்சரிக்கையோடு இருந்தால் தவிர்த்துவிடலாம்.
காலச்சூழலுக்கு ஏற்ப வாகனங்களை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. இப்போது பின் பனிக் காலம் நடக்கிறது. சென்னை மாதிரியான வெப்பமான பகுதிகளிலேயே மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பனி பொழிகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் கோடைக் காலம் தீவிரமடைந்துவிடும்.
இப்போது பனியால் வாகனங்களுக்கு நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இரவு நல்லபடியாகவே ஓட்டிவந்த காரை, காலையில் அலுவலகம் செல்வதற்கு அவசர அவசரமாக கிளப்பும் போது, ஸ்டார்ட் ஆகாமல் பெரியளவில் தொல்லை கொடுக்கும். இதற்கு முக்கியக் காரணம் பேட்டரி செயலிழந்து போவது தான். கார்களின் பேட்டரிகள் குறைவான வெப்பச்சூழ்நிலையில் இருக்கும் போது பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்துடும்.
இதேபோல், காரின் என்ஜின் உட்பட முக்கிய உதிரிபாகங் களுக்குள் செலுத்தப்படும் ஆயில் மற்றும் இதர திரவங்கள் பனிகாலத்தில் இறுகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். இதனால் உராய்வுத்தன்மை சரியாக இல்லாமல், கார் ஒழுங் காக இயங்காமல் போகும். இது தவிர பனிக்காலத்தில் டயரில் உள்ள காற்று அழுத்தத்துக்கு உள்ளாகும். இதனால் டயர் பாதிப்படைகிற அளவுக்கு கூட பிரச்சினைகள் வரக்கூடும்.
இது குறித்து ராயப் பேட்டையைச் சேர்ந்த கார் மெக்கானிக்கான சுரேஷிடம் காலச்சூழலுக்கு ஏற்ப கார்களை பராமரிப்பது எப்படி என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
வெயில் காலம், பனி காலம், மழை காலம், என மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்ப கார்களையும் பைக்குகளையும் பராமரிக்க வேண்டும். நிறைய பேருக்கு சர்வீஸ் காலத்தில் மட்டும்தான் கார்களை பற்றிய சிந்தனை வரும். ஆனால் அப்படியிருக்கக்கூடாது. சராசரி யைவிட ஒரு நாள் வெயில் அதிகம் அடிக்கிறது என்றால், அன்றைக்கு வெறுமனே புலம்பி விட்டு கடப்பதற்கு பதிலாக அன்றைக்கு வாகனங்களையும் கவனிக்க வேண்டும். இதேபோல் திடீரென்று மழை பெய்தாலும் வாகனங்களை சோதிப்பது அவசியம்.
பனிக்காலமோ வெயில் காலமோ பேட்டரி பாதிக்காமல் இருக்க முதலில் வாகனத்தை கூரைக்கு கீழ் பார்க் செய்வதை பழக்கப்படுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் மிகவும் கனமான துணிகளின் மூலம் கார்களை மூடி வைக்க வேண்டும். ஏனென்றால் ஒரு காரின் பேட்டரி 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேலே போனாலோ அல்லது, மிக அதிகமான குளிரை சந்தித்தாலோ கெட்டு விடும்.
வாகனங்களுக்கு போடப்படும் ஆயில், குறிப்பாக என்ஜின் ஆயில் மிகவும் முக்கிய மானது. குளிர்காலத்தில் ஆயில் திடமாக மாறிவிடும், இதே போல் வெயில் காலங்களில் ஆயில் எளிதில் தீர்ந்துவிடும்.
இதனால் என்ஜின் சீஸ் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உருவாகிவிடும். குளிர்காலத்தில் இரவில் வண்டியை நிறுத்திய பிறகு, பகலில் ஸ்டார்ட் செய்து ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு நியூட்ரலில் வைத்து ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும். இதுவே வெயில் காலம் என்றால் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை என்ஜின் ஆயில் அளவை சோதித்து பார்க்க வேண்டும்.
டயர்களில் உள்ள காற்றழுத் தத்தை கவனிப்பதும் மிகவும் அவசியம். வெப்பம் குறைந்தாலும் கூடினாலும் டயர் வெடிக்கவோ அல்லது எளிதில் சிராய்வுகளை சந்திக் கவோ வாய்ப்புகள் உள்ளது. குளிர்காலத்தில் டயரின் கொள்ளளவுக்கு ஏற்ப சரியான அளவில் காற்றை வைத்திருக்க வேண்டும். மேலும் வெயில் காலமென்றால், முதல் வேலையாக பழைய டயர் மற்றும் ட்யூப்களை மாற்ற வேண்டும். காற்றின் அளவை கொள்ளளவை விட கொஞ்சம் குறைவாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக வெடிக்கவோ அல்லது வேறு அசம்பாவிதங்களை ஏற்படுத் தவோ வாய்ப்புள்ளது.
கார் கண்ணாடிகளில் பனி படர்ந்திருக்கும் போது, உடனடியாக வைப்பரை ஆன் செய்யக்கூடாது. கண்ணாடி யிலுள்ள பனியை சுத்தமாக துனியை கொண்டு துடைத்துவிட்டு அதன் பின்னர் வைப்பரை இயக்க வேண்டும். ஏனென்றால், வைப்பரின் அடிப்பாகத்தில் உள்ள மெல்லி பஞ்சு போன்ற பகுதி ஏற்கெனவே பனியில் ஊறியிருக்கும், அது இயங்க ஆரம்பிக்கும்போது, சிதைந்து கண்ணாடியில் கீறலை உண்டு செய்துவிடும்.
வெயிலிலும், குளிரிலும் ஸ்பார்க் பிளக் சீக்கிரமே பிரச்சினைக்குள்ளதாகி விடும். இதனால் இக்னிஷன் பிரச்சினைகள் உண்டாகி ஸ்டார்டிங் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குளிர் காலத்தின் போது பிளக்குகளில் துரு பிடிப்பதற்கும், வெயில் காலத்தில் அவை விரிவடை வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை தடுப்பதற்கு முக்கிய வழி முறையாக வண்டிகளை உறையிட்டு மூடி வைப்பதும். வாகனங்களை முறையாக சர்வீஸ் செய்வது மட்டுமேயாகும்.
எனவே, மாறி வரும் காலச் சூழலை கணக்கில் கொண்டு முறையாக பராமரித்தால், எந்த நிலையிலும் வாகன பயணம் மகிழ்ச்சி யானதாக அமையும்.
manikandan.m@thehindutamil.co.in

Wednesday, January 28, 2015

ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகம்

செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பொறியியல் பாடப்பிரிவு. இந்தத் திட்டத்தை அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் தொடங்கி வைத்தார்.  முதல் ஆண்டில் வளாகத்தேர்வில் செவித்திறன் குறைந்தவர்களைத் தேர்வு செய்யத் தயங்கிய நிறுவனங்கள் கூட, தேர்வு செய்யப்பட்டவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், திறமையையும் பார்த்துவிட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மாணவர்களை விரும்பித் தேர்வு செய்தார்கள். 2014-ல் நடந்த வளாகத்தேர்வில் மொத்தமுள்ள 60 மாணவர்களில் 55 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது

Sunday, January 25, 2015

the hindu dt. 25-02-2015

old sarees are stitched as suits/churidars

Samriddhi takes order to stitch suits from old saris. It also sells exclusive designer dresses and saris, said a press release. Samriddhi is located at # 21, Vinayaga Nagar, Anand Nagar Main Road, Thoraipakkam. Ph: 044 2456 0657 / 95510 98933 . Email: samriddhi.swati@gmail.com https://www.facebook.com/SamriddhisBoutique.Chennai

http://rudrashaktii.com/

http://www.peekaboopatterns.com/
 

Monday, January 19, 2015

பலன் தரும் பாதரச லிங்கம்!



கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.
பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும்.
பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!
சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!
சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்!
வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!
சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.
ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.
பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது.
அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது.

for positive result pl consult a spiritual/divine personality  

மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பயன்கள்..!



please consult a qualified aurvedic doctor before self medicating 
 
சித்தர்கள் நமக்களித்த மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பெயர்களும், அதன் பயன்களும்..!

*அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி:- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி:- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி:- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி:- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி:- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி:- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி:- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி:- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி:- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி:- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி:- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி:- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி:- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி:- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி:- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி:- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி:- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி:- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி:- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி:- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி:- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி:- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி:- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி:- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி:- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி:- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி:- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி:- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி:- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி:- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி:- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி:- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி:- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி:- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி:- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி:- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி:- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி:- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி:- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி:- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி:- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி:- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி:- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

விரைவில் பதவி உயர்வு கிடைக்க வெளிநாடுகளுக்கு செல்ல



விரைவில் பதவி உயர்வு கிடைக்க வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரமான,

ஓம் வ்ஜர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி
தந்நோ நரசிம்மஹ ப்ரசோதயாத்''

என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் வேலை கிடைக்கும் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும்


 
கற்ற கல்விக்கு வேலை கிடைக்காத அவல நிலை இன்று உள்ளது. எல்லோரும் எல்லாமும் அடைய வேண்டி இந்த உலகில் எத்தனை வாசல்கள் திறந்தாலும் போதவில்லை. இதற்கு 

யாதேவி சர்வ பூதேஷு அபர்ணி
ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமோ நமக'

இம்மந்திரத்தை 54 தடவை கூறி நெய், நல்லஎண்ணை, தேங்காய் எண்ணை சேர்த்து தீபம் இட்டு 41 நாட்கள் கூறிட வேலை கிடைக்கும்

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!




மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
 
ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்
 
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
 
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
 
மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
 
கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
 
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:
 
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:
 
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
 
ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:
 
துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்
 
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:
 
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
 
தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.
 
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
 
ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:
 
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.
 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
 
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
 
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:
 
மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
 
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம: