Friday, April 3, 2015

முகப்பருவிற்கான சித்த சிகிச்சை

மருத்துவர் அபிராமி: முகப்பருவிற்கான சித்த சிகிச்சையை, உணவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்களை, உணவில் தாரளமாக சேர்க்க வேண்டும்.உடலிலிருந்து கழிவுகள், வியர்வை, சிறு நீர் போன்றவற்றின் மூலம், வெளியேறிக் கொண்டு இருந்தாலும், அதையும் மீறி சில கழிவுகள், உடலுக்குள் தங்கி விடும். இதை வெளியேற்ற, மாதம் ஒரு முறை அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம் அல்லது அகத்திக் கீரை ஜூஸ், அரை டம்ளர் குடிக்கலாம்.

வாரம் ஒரு முறை தலைக்கும், முகத்திற்கும் நல்லெண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பின், கடலை மாவு தேய்த்துக் குளித்தால், முகம் உட்பட சருமம் ஜொலிக்கும். முகப்பரு பிரச்னை இருந்தால், உடம்பிற்குக் கூட, சோப்பைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில், கடலை மாவு அல்லது பயத்தம் மாவு பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் விற்கும், பாரம்பரிய குளியல் பொடியைத் தேய்த்துக் குளிக்கலாம்.கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, ரோஜா இதழ்கள், வெட்டிவேர், சந்தனச் சக்கை, இவை அனைத்தையும், சம அளவில் வாங்கி, மாவாக அரைத்துப் பயன்படுத்தலாம். இந்தப் பொடி உடலுக்கு மட்டுமே; தலைக்கு இல்லை.

முல்தானிமட்டி என்ற மாவை, வாரம் ஒரு முறை முகத்தில் தடவி ஊறிய பின், முகம் கழுவலாம். முகத்தில், முகப்பரு வர ஆரம்பித்ததுமே, ஜாதிக்காயை இழைத்து, இரவில் பருவின் மேல் பொட்டாக வைத்து விட்டால், மறு நாள் அந்தப் பரு வடு மறைந்துவிடும். இது எளிய சிகிச்சை முறை."டிவி' யில் வெளியாகும் விளம்பரங்களைப் பார்த்து, அனைத்து அழகு சாதனைப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதில், வாரம் ஒரு முறை, இயற்கையான ரோஸ் வாட்டர், வெள்ளரிக்காய் ஜூஸ், கற்றாழை ஜெல் இவற்றைத் தடவி, முகம் கழுவலாம். முகத்திற்குப் போட்ட மேக் அப்பை முற்றிலுமாக அகற்றி விட்டுத் தான், படுக்கைக்குப் போக வேண்டும். முகம் கழுவும் போது, முகத்தைத் துண்டால் அழுத்தித் துடைக்காமல், மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும்.                http://www.dinamalar.com/news_detail.asp?id=580183&Print=1

No comments:

Post a Comment