Thursday, November 6, 2014

farming

மல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் உடுமலைப்பேட்டை விவசாயி

படித்ததோ எட்டாம் வகுப்பு, சம்பாதிப்பதோ மாதம் ரூ.40 ஆயிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி ஒருவர், தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் மல்லிகையை நடவு செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்.
ராமேஸ்வரம் மல்லி
குண்டு குண்டாக இதழ் தடிமனாக, எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மல்லிகைப் பூக்கள், தமிழகத்தில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. உடுமலைப்பேட்டை, திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராமேஸ்வரம் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.
நீர் சிக்கனம்
இத்தகைய சிறப்புகளுக்குரிய மல்லிகை கத்திரி வெய்யிலுக்கு கூட நல்ல விளைச்சல் தருகின்ற மானாவாரி இனம். 6 மாதங்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட தாக்குபிடித்து வளரும். கோடை மழை, பூச்சி தாக்குதல், மொட்டு உதிர்தல் போன்ற சிக்கல்களை மட்டும் சமாளித்து விட்டால் மல்லிகையிலும் சாதிக்க முடியும் என்பதை உடுமலைப்பேட்டை விவசாயி நிரூபித்துள்ளார்.
உடுமலைப்பேட்டையில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலையில் உள்ளது புங்க முத்தூர் கிராமம். அங்கு மானாவாரி பயிராக மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயி த. மலசீலன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
“நான் 15 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். முன்பு தக்காளி, கத்திரி விவசாயம் செய்தேன். அதில் அதிக லாபம் கிடைக்கவில்லை.
அதனால் பிற விவசாயிகளைப் போல் இல்லாமல் மாற்றி யோசித்தேன். மக்களிடம் ராமேஸ்வரம் மல்லிகைக்கு அதிக வரவேற்பு இருப்பதை அறிந்தேன். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து மல்லிகை பதியன்கள் வாங்கி வந்து மல்லிகை சாகுபடியைத் தொடங்கினேன்.
குறைந்த பரமாரிப்பு நிறைவான லாபம்
தொடக்கத்தில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்த பிறகு 6 மாதம் வரை தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட செடி தாக்குபிடிக்கும். மண் ணுக்கு ஏற்ற விளைச்சலை தரும் மல்லிகை 15 ஆண்டுகள் வரை வாழ்ந்து விவசாயிக்கு பலன் தருகிறது.  காய்கறி சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிக வருவாய் மல்லிகை சாகுபடியில் கிடைக்கும். நல்ல விளைச்சலின்போது மாதம் ரூ.40 ஆயிரம் வரை இதில் சம்பாதிக்க முடிகிறது. ஆண்டுக்கு இருமுறை கவாத்து செய்து முறையாக பராமரித் தால் நிலையான வருமானம் நிச்சயம். தமிழ் மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் மல்லிகைக்கு மார்கெட்டில் அதிக தேவை இருக்கும்.
அப்போது ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். முறையான பராமரிப்பு இருந்தால் மல்லிகையை நம்பி யார் வேண்டுமானாலும் துணிச்சலுடன் சாகுபடியில் இறங்கலாம்” என்கிறார் தன்னம்பிக்கை விவசாயி மலசீலன்.
அவரது அனுபவங்கள் பற்றி மேலும் அறிய 80120 08400 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

நிரந்தர வருமானம் தரும் கோரை 

கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள் செழிப்பான நன்செய் பூமியாகவும், ஏனைய பகுதிகள் வானம் பார்த்த புன்செய் நிலமாகவும் உள்ளது.
நன்செய் பகுதியில் அதிகமாக நெல், வாழை ஆகியவை பயிரிடப்படும் நிலையில் காவிரியை யொட்டியுள்ள புதுப்பாளையம், மறவாபாளையம், நொய்யல், நெரூர், குளித்தலை, நங்கவரம் என காவிரி பாசன பகுதிகளில் அதிகளவில் கோரை சாகுபடி நடைபெற்று வருகிறது. நெல், வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற நன்செய் பயிர்களை விட்டு எதற்கு கோரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது.
இந்தக் கேள்விக்கு விடை தேடி கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மேட்டுமருதூர் உழவர் ஆய்வுமன்ற அமைப்பாளரான மா.வீரமலை (64) என்ற விவசாயியை சந்தித்தோம். முன்னாள் கிராம முன்சீப்பான அவர். கோரை சாகுபடி செய்வது ஏன் என்பது பற்றி விவரித்தார்.
“கோரைக்கு எப்போதும் தண்ணீர் நிற்க வேண்டும். மேலும், தண்ணீர் பாய்ச்சலையும், காய்ச்சலையும் தாங்கக்கூடியது கோரை. எவ்வளவு தண்ணீர் நின்றாலும் தாங்குவதுடன், தண்ணீ ரின்றி வறண்டு போனாலும் தாங்கக் கூடியது கோரை. ஆடு, மாடுகள் மேயாது. திருடு போகாது, எந்த பருவத்திலும் சாகுபடி மேற் கொள்ளலாம்.
ஒருமுறை கோரை சாகுபடி செய்துவிட்டால் 10, 15 ஆண்டுகள் வரை அதனை வைத்து வருவாய் ஈட்டலாம். வியாபாரிகள் நம் வீடு தேடி வந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். நிலத்தை உழவு செய்து, வரப்பு வெட்டி நெல்லுக்கு தயார் செய்வது போல வயலைப் பண்படுத்திக் கொடுத்து விட்டால், வியாபாரிகளே கோரைக்கிழங்கு நட்டுக் கொடுத்து விடுவார்கள்.
முதல் முறை சாகுபடியின் போதும் மட்டும் நடவுக்கென கணிசமான தொகையை செலவிடு வதுடன், உரம் வைத்தல், களையெடுப்பு ஆகியவற்றை மேற் கொள்ள வேண்டும்.
அறுவடைக்காக 10 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒரு கட்டு கோரை ரூ.900 முதல் ரூ.1,200 வரை விலை போகிறது. ஒரு கட்டில் 25 முதல் 30 கிலோ வரை கோரை இருக்கும். ஒரு ஏக்கரில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். அதன்பின் களை எடுப்பது, உரம் வைப்பது ஆகிய பணிகளை மட்டும் மேற்கொண்டால் 6 மாதங்களுக்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து அறுவடை செய்து கொள்வார்கள்.புகழ்பெற்ற பத்தமடை பாய் தயாரிக்க கரூர் மாவட்டத்திலிருந்து கோரைகள் கொள்முதல் செய்யப் படுகின்றன. கோரை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது” என்கிறார் அவர்.
விவரங்களுக்கு 96987 69572

 வேம்பின் மகத்துவம் :
வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயி களுக்குப் பயன்படுகின்றது. வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0% உள்ளன.
இதனை நன்செய் நிலங் களுக்கு இடலாம். வேப்பந் தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் குறைந்துவிடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங் களுடன் கலந்து வைத்தால் வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
வேப்பங்கொட்டைக் கரைசல்
10 கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி அதை 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவி னிகள், தத்துப்பூச்சிகள், புகை யான், இலைச்சுருட்டுப்புழு, ஆணைக் கொம்பன், கதிர்நா வாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர் களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண் ணெய்க் கரைசல் பயன்படும்.
வேப்பம் புண்ணாக்கு
வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச் சத்து 1.1%, சாம்பல் சத்து 1.5%உள்ளன. இதை நேரடியாக பயிருக்கு இடலாம். 

thanks to : http://tamil.thehindu.com/business/

No comments:

Post a Comment