Sunday, November 16, 2014

வெந்தயம்



பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கச் செய்யும் உடல் எடை குறைக்கும் டயட்டில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மெல்லுங்கள். அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்துக்கள், உங்கள் பசியை அடக்கிவிடும்.

அழகு சாதனம்  வீட்டிலேயே தயார் செய்யும் அழகு சாதனமாக வெந்தயத்தை பயன்படுத்தலாம். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, உங்கள் சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும்.

தலைமுடி பிரச்சனைகளுக்கான தீர்வு  வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு, மறுநாள் காலை தலையில் மசாஜ் செய்தால், முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். இன்னும் என்ன? பொடுகை விரட்டவும் வெந்தயம் பெரிதும் உதவும்.

No comments:

Post a Comment