Sunday, November 16, 2014

புரோஸ்டேட் வீக்கம் வராம இருக்கணும்ன்னா... இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க...

சரியான உள்ளாடை: அதிகப்படியான வெப்பம் ஆண்விதைகளுக்கு நல்லதல்ல. மேலும் புரோஸ்டேட் சுரப்பியானது சிறுநீர்ப்பைக்கு கீழே வலது பக்கத்தில் உள்ளது. எனவே இறுக்கமான உள்ளாடையை அணிந்தால், புரோஸ்டேட் சுரப்பியானது அதிக அழுத்தத்திற்கு உட்படுவதுடன், வெப்பமடைந்துவிடும். ஆகவே எப்போதும் தளர்வான உள்ளாடையை அணிய வேண்டும்.

போதிய தண்ணீர் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடித்து, சிறுநீரை வெளியேற்ற வேண்டும். ஒருவேளை அபபடி தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் அப்படியே இருந்தால், சிறுநீரக தசைகளானது இறுக்கமடைய ஆரம்பித்துவிடும். பின் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வுகள் இருக்கும், ஆனால் சிறுநீர் வெளியேறாமல், உடலில் நச்சுக்கள் அதிகரித்து, புரோஸ்டேட் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும் ஆண்களில் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவை சீராக வைத்துக் கொள்ள ஜிங்க் மிகவும் இன்றியமையாதது. அதிலும் ஆண்களுக்கு வயதாகும் டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைவதால், புரோஸ்டேட் சுரப்பியானது வீக்கமடைய ஆரம்பிக்கும். எனவே ஆண்கள் எப்போதும் ஜிங்க் நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்து வர வேண்டும்.

உள்ளாடை அணிவதை தவிர்க்க வேண்டாம்   சிலர் பேண்ட், ஜீன்ஸ் அணியும் போது உள்ளாடை அணியமாட்டார்கள். அப்படி அணியாமல் இருந்தால், பேண்ட் அல்லது ஜீன்ஸானது அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்து, புரோஸ்டேட் சுரப்பியை பாதிப்பிற்குள்ளாக்கும். இப்படியே நீடித்தால், நாளடைவில் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கமானது ஏற்படக்கூடும்.

No comments:

Post a Comment