Tuesday, November 25, 2014

சூரிய ஒளி மேற்கூரை திட்டம்: 2,257 வீட்டு உரிமையாளர்கள் மனு

மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியில், வீடுகளில் செயல்படுத்தப்படும் சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தித் திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருகத் தொடங்கியுள்ளது.
சூரிய ஒளி மேற்கூரைத் திட்டம்
மக்கள் மற்றும் தனியாரிடையே சூரிய மின்னுற்பத்தியை ஊக்கப்படுத்துவதற் காக சூரிய மின்சக்திக் கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது. அதில், சூரிய மின்சக்தியை வீடுகளிலேயே உற்பத்தி செய்யும், முதல்வரின் சூரிய ஒளி மேற்கூரை மின்னமைப்புத் திட்டமும் ஒன்று. கடந்த ஆண்டு இறுதியில், இத்திட்டத்துக்கான விண்ணப்பங்களை எரிசக்தி மேம்பாட்டு முகமை வரவேற்றிருந்த போதிலும், கடந்த சில மாதமாக ஆன்லைனில் அதன் இணையதளத்தில் (www.teda.in) பொதுமக்களிடமிருந்து மனுக்கள் குவியத் தொடங்கியுள்ளன.
நெட் மீட்டரிங்-நாட்டில் முதல் முறை
இது தொடர்பாக தமிழக எரிசக்தித் துறை வட்டாரங்கள், ‘தி இந்து’விடம் கூறியதாவது:-
இத்திட்டத்தின்படி, 10 ஆயிரம் குடி யிருப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படை யில், வரும் மார்ச் 2016-ம் ஆண்டுக் குள் சூரியசக்தி மேற்கூரை மின்னுற் பத்தி அமைப்பை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மின் தொகுப்புடன் (கிரிட்) அந்த அமைப்பு இணைக்கப்பட்டிருப்பதால், மின்சாரத்தை நேரடியாக மின்தொகுப் புக்கு அனுப்பமுடியும். உற்பத்தி குறையும்போது, கிரிட்-ல் இருந்து வீட்டுக்கு மின்சாரம் எடுக்கவும் முடியும். இதற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் ‘நெட்மீட்டரிங்’ எனப்படும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கிரிட்-ல் இருந்து பெறப்படும் மற்றும் கிரிட்டுக்கு அனுப்பப்படும் மின்அளவி னைக் கணக்கிடும் ‘பை டைரக்ஷனல்’ (இருவழிப்பயன்பாடு) மீட்டர்கள், பயனாளிகளின் வீடுகளில் பொருத்தப் படுகின்றன. இத்திட்டம் அறிமுகமான போது, சாதாரண மீட்டரை பொருத்தி விட்டோம். இப்போது, அந்த வீடுகளில் படிப்படியாக இருவழி பயன்பாடு மீட்டரை மாற்றிப் பொருத்தும் பணி நடந்துவருகிறது. இதைப் பார்த்து, புதுடெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்களில் ‘நெட் மீ்ட்டரிங்’-ஐ உள்ளடக்கிய மின்கொள்கைகள் வகுக்கப் பட்டுள்ளன.
ரூ.50 ஆயிரம் போதும்
இதற்கு, மத்திய அரசு ரூ.30 ஆயிர மும், மாநில அரசு ரூ.20 ஆயிரமும் மானியமாக அளிக்கின்றன. அதுபோக, ரூ.43 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை (நிறுவனங்களுக்கேற்ப விலையில் மாற்றம்) செலவழித்தால் போதுமானது. இந்த மின்கலங்களை சப்ளை செய்ய 17 நிறுவனங்களை தமிழக அரசு இறுதி செய்து முகமை இணையதளத்தில் வெளி யிட்டுள்ளது.
ஒரு வீட்டில் மாதத்துக்கு 200 யூனிட் மின்சாரம் செலவாவதாக வைத்துக் கொள்வோம். அங்கு சூரியமேற்கூரை அமைப்பு மூலம் 150 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும் பட்சத்தில் , உற்பத்தியில் இருந்து செலவு போக, மீதம் 50 யூனிட் டுக்கு பணம் செலுத்தினால் போதுமானது. ஒரு வேளை பயன்பாட்டு அளவை விட அதிக மின்உற்பத்தி செய்யப்பட்டால், மின்கட்டணத்தில் கழித்துக்கொள்ளலாம். உபரி மின்சாரம், வங்கி சேமிப்பு போல் கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் மின் கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும் (அதிகபட்சம் 90 சதவீதம் வரை கழிக்கமுடியும்).
5 ஆண்டுகள் சர்வீஸ்
ஒரு வீட்டில் ஒரு கிலோவாட் மின்உற்பத் தித் திறன் உபகரணத்தை நிறுவுவதற்கு மட்டும் மானியம் தரப்படும். அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகபட்சம் 5 பேர் இணைந்து 5 கிலோவாட் உபகரணத்தைப் பொருத்தலாம். இந்த உபகரணங்களை 5 ஆண்டு வரை அந்தந்த நிறுவனங்கள் பழுதுபார்க்கும்.
தமிழகத்தில் இதுவரை 2,257 பேரிட மிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 255 வீடுகளில் பயன்பாடு தொடங்கி விட்டது. ஆன்லைன் மூலமாக 2,161 மனுக்கள் வந்துள்ளன. சென்னையில் அதிகபட்சமாக 602 மனுக்களும், கோவையில் 289 மனுக்களும் பெறப் பட்டுள்ளன. மனு செய்தவர்களில் ஏராள மானோர், தனியார் நிறுவனத்தினை தேர்வு செய்வதில் தாமதம் செய்வ தாலேயே வேகமாக உபகரணங்களைப் பொருத்தமுடிவதில்லை. இதுவரை சுமார் 90 வீடுகளில் இருவழி பயன் பாடு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மீட்டருக்கு மட்டும் அந்தந்த செயற் பொறியாளர் அலுவலகத்தில் மனுசெய்ய வேண்டும்.
சூரியமேற்கூரை அமைப்பினை நிறுவு வதற்காக, மாதாந்திர மின் கட்டண அட்டை பதிவு எண் இருந்தால் மட்டும் போதுமானது. எரிசக்தி முகமை இணையதளத்தின் (www.teda.in) மூலம் 15 நிமிடங்களில் மனு செய்துவிடலாம். மனுவை டவுன்லோடு செய்தும், முகமை அலுவலகத்தில் அளிக்கலாம்.                                                                                          http://tamil.thehindu.com/tamilnadu/article6632310.ece

No comments:

Post a Comment