Sunday, September 22, 2013

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம்

பொதுவாக ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்க கூடாது என்று சொல்லுவார்கள் .

குருநாதர் ( சாய்பாபா உபாசகர் ) சொன்ன தகவல்

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்கலாம்

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் வீட்டில் இருந்தாலே தீய சக்திகள் , தீய விஷயங்கள் உள்ளே இருக்காது என்று கூறினார் .

 வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து  வழிபடலாம் மற்றும் பூஜிக்கலாம் எனவும் கூறினார்
http://i.ytimg.com/vi/MxCPAPuekGw/0.jpg

பேய் பிசாசு, பில்லி, சூனியத்தை விரட்டும் பால ஹனுமான் வழிபாடு

ஏழரை நாட்டு சனி, மனக் குழப்பம் , பீதி மற்றும் காரிய சித்தி பெற வேண்டும் என்பதற்காக பலர் அனுமான் வழிபாடு செய்வார்கள் . ஆனால் பேய் பிசாசு, பில்லி, சூனியம் பிடித்தவர்களும்பால ஹனுமான் வழிபாடு செய்வது உள்ளது என்பது ஆச்சரியம் தரும் செய்தி ஆகும் .
http://www.punjabigraphics.com/images/7/hanuman-ji.jpg




அப்படிப்பட்ட ஒரு ஆலயம் இராஜஸ்தானில் மெஹந்திபூர் அருகில் தௌசா என்ற மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள பால அனுமான் , தன்னுடன் பூதங்களின் தலைவரான பிரேத சர்கார் மற்றும் பைரவரை வைத்துக் கொண்டு பேய் பிசாசு, பில்லி , சூனியம் பிடித்தவர்களுக்கு நிவாரணம் தருவதான நம்பிக்கை உள்ளது. இந்த ஆலயத்தை மெஹந்திபூர் பாலாஜி ஆலயம் என அழைக்கின்றனர்.



இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்டது எனவும் , கொடிய வன விலங்குகள் உலாவிய அடந்த காட்டின் நடுவில் இருந்த ஆலயம் எவருக்கும் தெரியாமல் இருந்தது எனவும் , ஆனால் வெகுகாலத்திற்குப் பிறகு தற்பொழுது ஆலயத்தில் உள்ள பண்டிதரின் முந்தைய சந்ததியினர் ஒருவருடைய கனவில் பால " அனுமார்" தோன்றி அந்த ஆலயம் உள்ள இடத்தைக் காட்டி, அதன் மகிமையை எடுத்துக் கூற அவர்கள் அங்கு சென்று ஆலயத்தைக் கண்டு பிடித்து பூஜைகள் செய்யத் துவங்கினர் எனவும் தெரிகின்றது .



அங்குள்ள பைரவர் பால "அனுமானின் சேனைத் தலைவராக " கருதப்படுகின்றார் . பைரவர் சிவபெருமானின் அவதாரம். நான்கு கைகளுடன் இடுப்பில் கைவைத்தவாறு சிவப்பு வண்ண துணி உடுத்தி உள்ளார் என்பதே அவருடைய தோற்றம் . சாதாரணமாகவே பைரவர் உள்ள இடத்தில் பேய் பிசாசுகள் நுழைய முடியாது என்பது உண்டு. ஏன் எனில் அவர் சுடுகாட்டில் வசிப்பவர் . சிவபெருமானின் அவதாரம் . துஷ்ட தேவதைகளை விரட்டி அடிப்பவர் . பைரவர் யார் என்பதும் அவருடைய மகிமைகளையும் இன்னொரு கட்டுரையில் காணலாம் .



பிரேத சர்கார் பற்றிய எந்த குறிப்பும் புராணங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆலயத்தில் மட்டுமே பிரேத சர்கார் என்ற பெயரையே அறிய முடிகின்றது. ஆனால் இறந்து போனவர்களின் பிரேதத்தில் இருந்து வெளியேறிய ஆத்மாக்கள் சில பேய்களாகத் திரிகின்றன, மற்றும் சில ஆத்மாக்கள் உடனடியாக பிறவிகள் எடுக்கின்றன. அவற்றில் தீயவர்கள் பேய் மற்றும் பூதங்களாக மாற அப்படித் திரியும் ஆத்மாக்களுக்கும் ஒரு தலைவர் இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு நம்பிக்கை. ஆகவே அவரே பிரேதங்களின் தலைவர் எனப் பொருள்படும் பிரேத சர்காராகவும் இருக்க வேண்டும் .

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLFE2ZTdAMwqChaYuOPZ4Tw_wlsI5LZqRmJIecayLK83sIXHQBuWUUlRoT6Z4OsJCiOW6DIjNiF5lgustALoXAAjlDmMppE7NZxZI2ULjacdjr_OjzhW15i0McZsnQgyOUrBVNTG7Jhlo/s1600/bal+hanuman.JPG

இந்த ஆலயத்தில் உள்ள பால அனுமார் , பைரவர் போன்றவர்களுடன் பிரேத சர்கார் இருந்து கொண்டு தவறு செய்யும் பேய் மற்றும் தீய ஆவிகளுக்குத் தண்டனைத் தருகின்றாராம் . இந்த மூவரில் எவருடைய சக்தி எப்படி வேலை செய்கின்றது எனத் தெரியாவிடிலும் , மூவரையும் சரிசமனாகவே பக்தர்கள் பூஜிக்கின்றனர்.



ஆலயம் இரண்டு கணவாய் போன்ற பகுதியில் உள்ளது. அனுமான் ஒரு பாறையில் விக்ரகமாக காணப்படுகின்றார். அது மலையுடன் ஒட்டி இருந்ததினால் பல மொகலாய மன்னர்கள் அந்த சிலையை உடைத்தெரிய பல முறை முயன்றும் அதன் உருவத்தைக் கூட அவர்களால் சிதைக்க முடியவில்லை,



சிலையையும் கொண்டு செல்ல முடியவில்லை என கூறப்படுகின்றது. அனுமாரின் இடது மார்புப் பகுதியில் இருந்து தொடர்ந்து கசிந்து வந்து கொண்டு இருக்கும் நீர் விழுகின்றதினால் இன்றுவரை பால அனுமானின் காலடியில் உள்ள பாத்திரம் ஈரப்பதமில்லாமல் இருந்தது இல்லையாம் .
http://img.tradeindia.com/fp/1/581/991.jpg
துர்தேவதைகள் , பேய்கள் , பிசாசுகளினால் பிடிக்கப்பட்டுள்ளவர்களை இந்த ஆலயத்திற்கு அழைத்து வருகின்றனர். பொதுவாக வியாதியினால் அவதிப்படுவோர் ஆலயத்தில் நுழைந்ததுமே அந்த தீய ஆவிகள் பலவும் ஓடிவிடுகின்றனவாம் . அதையும் மீறி உடலில் தங்கும் சில தீய ஆவிகள் பிடித்துள்ளவர்கள் உள்ளே வந்தால் பைரவர் சன்னதியின் எதிரில் உள்ள குழிகளில் அவர்கள் தலை கீழாக சற்று நேரம் தொங்கத் தொடங்குகின்றனர் . அதற்குக் காரணம் அந்த தீய ஆவிகளுக்கு பைரவர் தூக்கு தண்டனை தந்து விட்டதின் அர்த்தமாம் . பிறகு சில மணி நேரத்தில் அவர்கள் சரியாகி விடுகின்றனராம் .



சிலருக்கு கோளாறு நிவர்தியாக சில காலம் பிடிக்கின்றது. அப்பொழு தெல்லாம் அந்த தீய ஆவிகளுக்கு பால அனுமார், பைரவர் மற்றும் பிரேத சர்கார் போன்ற மூவரும் கடுமையான தண்டனைகளைத் தருவதினால் , தீய ஆவிகள் பிடித்துள்ளவர்கள் தங்கள் மீது பெரிய கற்களை வைத்துக் கொண்டும் , தலைகீழாக இருந்து கொண்டும் , நடனமாடிக் கொண்டும் இருக்கும் சில காட்சிகளை காணலாம். ஆனால் அங்கு வந்து வியாதி நிவர்தியாகிய பின் திரும்பிச் செல்பவர்கள் மீண்டும் அந்த கொடுமையை அனுபவிப்பதில்லை என்ற தீவிரமான நம்பிக்கை உள்ளது.



எவரையும் அனாவசியமாக கட்டிப் போட்டு சித்திரவதை செய்வதில்லை. பல நேரங்களில் மந்திரங்கள் படிக்கப்பட்டும் , சிலர ; உடம்பில் கற்களை வைத்தும், அபூர்வமாக சிலரை ஆலயத்திற் குள்ளேயே கட்டி வைத்தும் உடலுக்குள் புகுந்துள்ள தீய ஆத்மாக்களை விரட்டுகின்றனராம்.

ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்

 http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g3.jpg
நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்

பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்

அவருக்கு செய்பவைகளில் சில ,
http://1.bp.blogspot.com/-q-Tfy-K3tVA/Ttj6-pryofI/AAAAAAAAlpc/Um9wZsLXQAM/s640/ANJU+SALEM.jpeg

வடைமாலை 
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு .

http://4.bp.blogspot.com/-KaNY-bmrVOM/Tyvz1aPlfzI/AAAAAAAAmoA/_nWisssSNhE/s640/ANJU+DARPANA+ALNKM+DPBLR+B.JPG 
வெற்றிலைமாலை


சீதையைத்தேடி தேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில் அவரை சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும் பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்.


http://1.bp.blogspot.com/-fcF35OGw79A/Tut5mkHKyvI/AAAAAAAAl3Q/X-vrhpRbHHg/s1600/NAMAKKAL+HANUMAN+FULL+VENNAI.jpg
வெண்ணெய் சாத்துதல் 

ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

http://en.academic.ru/pictures/enwiki/50/220px-Hanuman_in_Terra_Cotta.jpg
சிந்தூரக் காப்பு


சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்.”என் அவர் நலமா? என்று.....

அதற்கு அனுமான் “எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றதும்.....

மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.,இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்..

http://farm8.staticflickr.com/7153/6573500135_d4540a59d0_m.jpg

ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல் 


ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல், அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம் ராம் நாமம் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது. 

வாலில் பொட்டு வைப்பது


அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக் அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால் தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது, ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை

No comments:

Post a Comment