Saturday, September 21, 2013

அஹோபில க்ஷேத்ரத்தின் தீர்த்தங்கள் :

1. ரக்தகுண்டம் :

இந்த திவ்யக்ஷேத்ரத்தில் உள்ள பல புண்ய தீர்த்தங்களில் ரக்தகுண்டம் என்கின்ற தடாகம் மிகவும் முக்யத்வம் வாய்ந்தது.சிங்கப்பிரான் இரணியனைக் கொன்றழித்த பின்னர் தன திருக்கரங்களை இத்தடாகத்தில் அமிழ்த்தி சுத்தம் செய்து கொண்டதாய்க் கருதப்படுகிறது.

2. லாஞ்ச கோனேரி :

பார்கவா நரஸிம்ஹப் பெருமான் ஸந்நிதிக்கு வடகிழக்கில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தீர்த்தம் லாஞ்ச கோனேரி என்றழைக்கப்படுகிறது. முற்காலத்தில் ராஜசபை நடனமாது ஒருத்தி அஹோபில திவ்யதேசத்தில் நரஸிம்ஹப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து, தனதுபாவங்களை மன்னிக்க வேண்டி மன்றாடிப் பிரார்த்தித்தாள். அப்போது எம்பெருமானது ஆணைப்படி இத்தடகத்தினை ஏற்படுத்தி, அதனால் தன பாபங்கள் நீங்கப்பெற்றாள் என்பது வரலாறு.

3. ராம தீர்த்தம் :

கீழ அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் ராமதீர்த்தம் என்கின்ற திவ்யதடாகம் அமைந்துள்ளது. சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமன் இந்த திவ்ய தடாகத்தில் நீராடி அனுஷ்டானங்களைச் செய்ததால் இந்தத தீர்த்தம் அவரது திருப் பெயராலேயே வழங்கப்படுகிறது.

4. பவானி தீர்த்தம் :

ஸ்ரீ அஹோபில திவ்யதேசத்தின் பிரதானமான தீர்த்தம் பவநாசினி ஆகும். ஸம்ஸாரமாகிறது பவத்தை நாசம் செய்து முக்தி அடைவதர்க்கான தகுதியை
உண்டாக்குவதால் இதற்க்கு பவநாசினி என்று பெயர். இந்தத தீர்த்தத்தில் பதிமூன்று புன்யதீர்த்தங்களும் கலந்துள்ளன.அவை நரஸிம்ஹ தீர்த்தம், ராம தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், பீம தீர்த்தம், சங்க தீர்த்தம், வராஹ தீர்த்தம், ஸுதா தீர்த்தம், தொர தீர்த்தம், கஜ குண்டம், விநாயக தீர்த்தம், பிரவ தீர்த்தம், ராஜாத குண்டம் ஆகியன. இவையனைத்தும் பவ நாசினியின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

இத்திஉத்தலத்தின் மற்றைய  சிறப்புக்கள் :

ஸ்ரீ அஹோபிலமடத்தின் ஏழாவது ஜீயராக எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் அழகிய ச்ருங்கர் இங்குள்ள வேடுவர்களின் குலதெய்வமான சென்சுலக்ஷ்மித்தாயாருக்கும் எம்பெருமானுக்கும் நடந்த திருக்கல்யாணத்தை 'வாசந்திகா பரிணயம்' என்கிற தமது ஸம்ஸ்க்ருத நாடகத்தில் விவரித்துள்ளார்.

இத்திருத்தலத்து எம்பெருமான் ப்ரகுமாவாலும், ஸாக்ஷாத் பகவானது திருவவதாரங்களான ஸ்ரீ ராமபிரானாலும், ஸ்ரீ வேங்கடீப் பெருமானாலும் வானகப் பெற்றவர் என்ற பெருமை முக்யத்வம் வாய்ந்தது.

ஸ்ரீ அஹோபிலேசனான ஸ்ரீந்ருஸிம்ஹப் பெருமானை வழிபட்டதன் பலனாக திருவேங்கடமுடையான் ஸ்ரீபட்மாவதித்தாயாரை திருக்கல்யாணம் செய்து கொண்டான் எனும் மங்கள வைபவம் இத்துத்தலத்திர்கேயான மேன்மை!

அது போலவே, ஸ்ரீராமன் இந்தப் பெருமானின் புகழை ஐந்து ஸ்லோகங்களால் துதிக்க , அது 'நரசிம்ஹ பஞ்சம்ருதம்' என்று பிரசித்தி பெட்ட்ருள்ளது. இந்த ஸ்தோத்ரங்களும், வரலாறும் பரம ப்ரமாணமான நூல்களான ஹரி வம்சம், மோக்ஷ தர்மம் ஆகியவற்றில் பீஷ்ம- யுதிஷ்டிரர்களுக்கிடையே உரையாடலில் குறிப்ப்டப்பெற்றுள்ளன. இந்த திவ்யதேசத்து எம்பெருமானது அருளால், சிறையிலிருந்த சீதாப்பிராட்டியாரை பற்றிய விபரங்கள் ஸ்ரீராமபிரானுக்குக் கிடைக்க, அதனால் அவர் ராவணனைக் கொன்றொழித்து ஜகந்மாதாவான ஜானகியை மீட்டெடுத்தான் என்பர்.

விஜய நகரப் பேரரசர்கள் அனைவரும் இந்தப் பெருமானின் பரமபக்தர்கள் , ஹரிஹரர் தொடங்கி கிருஷ்ண தேவராயர், அச்சுத தேவராயர் போன்ற விஜய நகரப பேரரசர்கள் அனைவரும் இந்த திவ்யதேசத்து எம்பெருமாங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபாட்டு வந்தனர் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

No comments:

Post a Comment