Sunday, September 15, 2013

முக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

முகப் பளபளப்பு
ஆரஞ்சுத் தோலை எடுத்துக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கி நன்றாகக் காய வைக்கவும். பிறகு அதை நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வைட்டமின் சி இருப்பதால், இந்தப் பொடி தோலுக்கு மிகவும் நல்லது. இதை ரோஸ் வாட்டர் அல்லது பாலில் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டுக்கொண்டால், முகம் பொலிவாக இருக்கும். சருமத்தில் பூசினாலும் பளபளப்பாக இருக்கும்.

புழு வெட்டு, வழுக்கை
1 கோப்பை நல்லெண்ணெ யில் 7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாகக் காய்ச்சவும். இறக்கி வைத்து 1 மூடி எலுமிச்சம் பழத்தில் சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக் கவும். பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் 2 சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.

வீட்டிலிருந்தபடியே சுலபமாகவும்,செலவி ல்லாமலும்,பக்கவிளைவுகள் இல்லாமலும் செய்து கொள்ளக்கூடிய சித்த மருத்துவ முறையில் ஒரு முக அழகுக் கலவை. முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :

தேவையான பொருட்கள்:-
1 - முல்தானி மட்டி பொடி - 200,கிராம்
2 - கஸ்தூரி மஞ்சள் பொடி - 50, கிராம்
3 - பூலாங்கிழங்கு பொடி - 50, கிராம்
4 -கோரைக் கிழங்கு பொடி - 50, கிராம் 
5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,

இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக் கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும் கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி விடவும் .
இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும் முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல் களை அகற்றும்,முகம் மென்மையாகும்,சிவப்பு அழகு கிடைக்கும். இது அனுபவ முறையில் கைகண்ட முறையாகும்.

முகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க :
1 - கருவேப்பிலை - ஒரு கை பிடி
2 - கசகசா - ஒரு டீ ஸ்பூன்
3 - கஸ்தூரி மஞ்சள் - சிறிய துண்டு இதனை அரைத்து முகத்தில் பூசி அரை
மணி நேரம் கழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்.

10 நிமிடங்களில் முகம் பளபளக்க

முகப்பரு தொல்லை: சந்தனப் பவுடர் அல்லது டூத் பேஸ்ட்டை பருக்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து கழுவினால், நன்கு வெளிப்பட்ட பருக்கள் மறைந்து லேசாக காணப்படும்.

சின்ன சீரகத்தை அரைத்து ஒவொரு நாள் இரவிலும் முகத்தில் தடவி வர முகப்பரு மறைந்து விடும்.

* அகில் கட்டையை, பசும் பால் விட்டு சந்தனம் அரைப்பது போல் அரைத்து, அதை, உடம்பில் பூசி, பதினைந்து நிமிடம் கழித்து குளிக்க, தளர்ந்த சதையெல்லாம் இறுகி, உடல் மினுமினுப்பாக இருக்கும்.

தோல் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ, நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வாருங்கள் போதும்.

சரும நிறத்தை சிகப்பாக்கும் முக பூச்சுகள்

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம் 

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். 

உதடு உலர்ந்து விட்டதா? * உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும். 

கரு வளையம் போக :- இட்லி மாவை கண்ணுக்குகீழ் பூசி 15 நிமிடம் கழித்து ரோஸ்வாட்டரில் கழுவிவிடவும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தரும். * உருளைக்கிழங்கு சாறை தினமும் கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் நீங்கும்.

காது அழகை பராமரிப்பது எப்படி? * உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது. 

மணம் தரும் கோரைக் கிழங்கு!
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா? என்று இறைவனுக்கே சந்தேகம் வந்ததற்கு காரணம் அந்தக் காலப் பெண்கள் கோரைக்கிழங்கு மாவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்ததுதானோ என்னவோ... கோரைக் கிழங்கு மாவை தலையிலும், உடலிலும் தேய்த்துக் குளித்து வந்தால் நீங்கள் இருக்கும் இடம் மணமணக்கும் போங்கள். தவிர இந்தக் கிழங்கில் உள்ள `டெர்பீன்கள்' சேர்த்து தயாரிக்கப்பட்ட வாசனை எண்ணெய் காய்ச்சலையும் போக்கக்கூடியது.

தினம் ஒரு நெல்லி!தோல் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ, நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வாருங்கள் போதும்.

சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, சொறி, சிரங்கு போன்ற எல்லா வகை சரும பிரச்னைகளுக்கும் பெஸ்ட் தோழி பறங்கிப்பட்டைதான்!
சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பறங்கிப்பட்டை சூரணத்தை 40 நாட்கள் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேலே சொன்ன சரும பிரச்னைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடி விடும். சருமத்திலும் நல்ல நிறம் கொடுக்க ஆரம்பிக்கும்.

முடி செழித்து வளர...
பெயரிலேயே தன் குணத்தை சொல்லும் `பொடுதலை' தான் நல்ல முடி வளர்ச்சிக்கு ஏற்ற மூலிகை. பொடுதலையின் இலைச்சாறுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சவும். இதை பொடுகு உள்ளவர்கள் தலைக்குத் தேய்த்து வர பொடுகு நீங்கி தலைமுடி செழித்து வளரும். தவிர பெரும்பாலும் முக அழகும், முதுகு அழகும் கெட்டுப் போவதே பொடுகினால்தானே... ஸோ, பொடுதலையை பயன்படுத்தி கூந்தலை வாருங்கள். கூடவே முகத்தையும், முதுகையும் பொடுகு பாதிப்பில்லாமல் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

அழகுராணி சோற்றுக் கற்றாழை!
சித்தர்களால் `குமரி' என்று செல்லமாக அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே கடவுள் பெண்களுக்குக் கொடுத்த ஒரு அழகு வரம் என்றே சொல்லலாம்... ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

ஆஹோ ஓஹோ பச்சிலை!
ஒரு இலையை கசக்கினாலே வீடு முழுவதும் மணம் வீசும் திருநீற்றுப் பச்சிலையிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணெயை (Bascillicum oil) தொடர்ந்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் அதைக் கிள்ளினால் வரும் கரும்புள்ளிகள் எல்லாமே மறைந்துவிடும்.

செலவேயில்லாமல் ஸ்லிம்மாக்கும் அருகம்புல்!
சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இடித்து சாறு பிழிந்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலிலுள்ள நச்சு மற்றும் கெட்ட நீர் வெளியேறி விடும். ரத்தம் சுத்தமாகும். உடம்பிலுள்ள தேவையற்ற ஊளைச்சதையெல்லாம் குறைய ஆரம்பிக்கும்.
தேங்காய் எண்ணெயையும், அறுகம்புல் சாற்றையும் சமஅளவு எடுத்து தைலமாக காய்ச்சி அதை உடலெங்கும் பூசி அரைமணி நேரம் கழித்து பயற்றம் பருப்பு மாவால் தேய்த்துக் குளியுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அறுகம்புல் சாற்றில்சிறிதளவு மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்த வெடிப்புகளில் தடவி வர பாதங்கள் பஞ்சு போல் `மெத்'தாகி விடும்.

4 comments: