Monday, September 16, 2013

"சேவ் மை சிஸ்டர்ஸ்' மோதிரம்: பெண்களுக்காக புது வரவு

பெங்களூரு:காமுகர்களிடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள, பெண்களுக்காக, "பெப்பர் ஸ்பிரே', "ஷாக் அடிக்கும் சாதனங்கள்' போன்றவை மார்க்கெட்டில் கிடைத்தன. அந்த பட்டியலில், தற்போது, "மோதிரம்' இணைந்து உள்ளது.மிளகாய் ரசாயனம்புதிய மோதிரத்தை, "சேவ் மை சிஸ்டர்ஸ்' (என் சகோதரிகளை காப்பாற்றுங்கள்) டிரஸ்ட் தலைவர் இம்ரான் கான், சமாஜ்வாடி கர்நாடகா மாநில தலைவர் சங்கர் பிதரி ஆகியோர் பெங்களூரில் வெளியிட்டனர்.



புதுமை மோதிரத்தில், மிகச்சிறிய அளவிலான டேங்க், சிறிய ஊசி, பம்ப், கிளிப் அமைக்கப்பட்டிருக்கும். சிறிய டேங்கில், மிளகாயில் தயாரிக்கப்பட்ட, "கேப்சில்' என்ற ரசாயனம் இருக்கும். இதை, மோதிரத்தின் சிறிய ஊசி, பம்பின் மூலம் ஆபத்து நேரங்களில் உடலில் செலுத்தலாம். இம்மோதிரத்துக்கு, 1,999 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஐந்து பேரை தாக்கலாம்:இம்மோதிரத்தை பயன்படுத்தும் பெண்கள், இவ்விரண்டு கிளிப்புகளை அகற்றி, டேங்கில்உள்ள மிளகாய் ரசாயனத்தை, எதிராளிகள் உடலில் செலுத்தினால், அதிகமான வலி, எரிச்சல், நமச்சல் ஏற்படும். இதனால், உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. சாதாரண மோதிரம் போல் தயாரித்து உள்ளதால், ஒவ்வொருவரும் அணிந்து கொள்ளலாம். ஒரு மோதிரத்தின் மூலம், ஐந்து பேரை எதிர்கொள்ளலாம்.

"சேவ் மை சிஸ்டர்ஸ்' உதவியை பெற விரும்பும் பெண்கள், 080 - 6450 0112 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என்று அமைப்பு தலைவர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment