Friday, November 24, 2017

Maha shiva rathri/night prayer based on zodiac sign

மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது🙏🙏🙏

மேஷ ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

மிதுன ராசிக்காரர்கள், சிவ லிங்கத்தை கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்து, ஊமத்தை பழத்தை படைத்தால், ஆசைகள் நிறைவேறும். 

கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும். 

சிம்ம ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.

கன்னி ராசிக்காரர்கள், பாங் பால்/நீரால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், சிவன் நல்ல ஆரோக்கியத்தை அருள்வார். 

துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள் புரிவார். 

விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது. 

தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும். 

மகர ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், சிவன் வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார். 

கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம்/லாபம் கிடைக்க உதவுவார். 

மீன ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று குங்குமப்பூ பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க வழி செய்வார்.

No comments:

Post a Comment