Friday, November 3, 2017

ஜோதிடரீதியாக மருத்துவம் செய்ய உகந்த நாட்கள்

மருத்துவம் செய்யக்கூடிய மாதம், நாள், நட்சத்திரம், திதி, லக்னம் !

 மருத்துவம் என்பது இந்த காலக்கட்டத்தில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தீராத பல நோய்களையும் தீர்க்கும் அளவுக்கு மருத்துவமனை வசதிகளும், தொழில் நுட்பமும் வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஜோதிட ரீதியாக மருத்தும் செய்ய ஏற்ற மாதம், நாள், நட்சத்திரம், திதி, லக்னம் பார்த்து செய்தால், மேலும் நமக்கு நன்மைகள் கிடைக்கும். அதில் ஜோதிட ரீதியாக மருத்துவம் செய்ய ஏற்ற நாட்கள் இவைகளெல்லாம்....! 

மாதம் :
🌟 சித்திரை, வைகாசி - உத்தமமான காலம் 

🌟 ஆனி, ஆடி - மத்தியமான காலம்

🌟 இதர மாதங்கள் - அதமம்

நாட்கள் :
🌟 ஞாயிறு, திங்கள் - உத்தமம் 

🌟 செவ்வாய், வியாழன், வெள்ளி - மத்திமம்

🌟 புதன், சனி - அதமம் 

நட்சத்திரங்கள் :
🌟 அசுவினி, கேட்டை, ஆயில்யம், பு+ரட்டாதி - உத்தமம்

🌟 சுவாதி, மூலம், கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், ரோகிணி, பரணி, ரேவதி, திருவோணம் - மத்திமம்

🌟 மற்ற நட்சத்திரங்கள் - அதமம்

திதிகள் :
🌟 பஞ்சமி, துவிதிகை, அஷ்டமி, சதுர்த்தி, சப்தமி, தசமி - உத்தமம்

🌟 திருதியை, துவாதசி, திரியோதசி - மத்திமம் 

🌟 பிரதமை, சஷ்டி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, அமாவாசை - அதமம் 

லக்னம் :
🌟 கும்பம், கடகம் - உத்தமம்

🌟 ரிஷபம், மேஷம், கன்னி, மகரம், துலாம், தனுசு, மீனம் - மத்திமம் 

🌟 சிம்மம், மிதுனம், விருச்சிகம் - அதமம்
குறிப்பு :

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? என்பதை ஆடியோ வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment