Thursday, March 5, 2015

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகம விதிகளை மீறி பாலாலயம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் திருப்பணிக்காக கருவறையில் இருந்து தேவசபைக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகளை பாலாலயம் செய்வது தொடர்பாக தீட்சிதர்களிடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் மே 1-ம் தேதி நடைபெற உள்ளது. நடராஜர், சிவ காமசுந்தரி அம்மன் இருக்கும் பொன்னால் வேயப்பட்ட கனக சபை சந்நிதியில் திருப்பணி வேலை செய்ய வசதியாக தேவசபை யில் வரும் 8-ம் தேதி அன்று நட ராஜர், சிவகாம சுந்தரி அம்மனை பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மேலும், 5-ம் தேதி முதல் 60 நாட்களுக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் இருவருக்கு தேவ சபையில் வைத்து பூஜை நடைபெற உள்ளது.
இந்நிலையில், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் டிரஸ்டி கைலாச சங்கர தீட்சிதர் மற்றும் அவரது மகன் ராஜா பரமேஸ்வர தீட்சிதர் ஆகி யோர் நடராஜரையும், அம்மனை யும் பொற்கூரையில் உள்ள சந்நிதியில் இருந்து 60 நாட் களுக்கு முன்பே வேறு இடமான தேவசபைக்கு மாற்றி பாலாலயம் செய்ய கடும் எதிப்பு தெரிவித்துள் ளனர். இதுகுறித்து இருவரும் கூறியதாவது;
பாலாலயம் என்கிற பெயரில் நடராஜரையும், சிவகாம சுந்தரி அம்மனையும் இதய ஸ்தலமான சித்சபையை விட்டு இரண்டு மாதத்துக்கு தேவசபைக்கு மாற்றி பூஜை செய்வதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
நீண்ட நாட்களுக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனை மாற்றி வைக்கும்போது, நடராஜர் சந்நிதிக்கு பக்கத்தில் உள்ள சிதம்பர ரகசிய ஸ்தானத்துக்கு யார் பூஜை செய்வது? எனவே, உலக நன்மை வேண்டி அஷ்ட மங்கள தேவபிரசன்னம் வைத்து பார்த்து, பாலாலயம் செய்ய வேண்டும். இதை கருத்தில் கொள்ளாமல் பாலாலயத்தை நடத்தினால் இதனால் ஏற்படும் விளைவு கடுமையாக இருக்கும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment