Saturday, March 28, 2015

மொத்தமாக பால் வாங்க நந்தனத்தில் ஆவின் சேவை மையம்

திருமணம் போன்ற விசேஷங் களுக்கு ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மொத்தமாக ஆர்டர் கொடுக்க சென்னை நந்தனத்தில் புதிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திருமணம் போன்ற நிகழ்ச்சி களுக்கு ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சமையல் கலைஞர்கள் மொத்தமாக ஆர்டர் செய்துகொள்ளலாம். விருப்பப்படும் திருமண மண்டபங் கள் அல்லது அவர்களது இருப் பிடத்திலேயே அவை நேரடியாக சப்ளை செய்யப்படும். ஆர்டர் களை பெறுவதற்காக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலு வலகத்தில் புதிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 94455 30503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
100 லிட்டருக்கு மேலான ஆர்டர் கள் மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு குறை வான ஆர்டர்களை மண்டல அலு வலகங்களில் பதிவு செய்து அருகே உள்ள ஆவின் டிப்போக்களில் பெற்றுக்கொள்ளலாம். சமையல் கலைஞர்கள் வாங்கும் பாலுக்கு ஊக்கத் தொகையாக லிட்டருக்கு ரூ.1 வழங்கப்படும். தவிர, சில்லறை விற்பனை விலையைவிட ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைந்த விலைக்கு வழங்கப்படும். ஆவின் தொடர்பான புகார்களை 1800 425 3300 என்ற இலவச சேவை எண் ணில் தொடர்பு கொண்டு தெரி விக்கலாம். aavincomplaints@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும் அனுப்பலாம். இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
http://tamil.thehindu.com/tamilnadu/article7031147.ece

No comments:

Post a Comment