Tuesday, October 28, 2014

ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி

முசிறி தாலுகா அருகே வெள்ளுர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகா உடனுறை ஸ்ரீதிருக்காமேஸ்வரர் ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி கோவில்.
 திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, வெள்ளுர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகா உடனுறை ஸ்ரீதிருக்காமேஸ்வரர் ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி என்ற புரதான திருக்கோவில் உள்ளது. கோவிலில் மகாலட்சுமி வில்வமரமாக தோன்றி சிவலிங்கத்தின் மீது வில்வமழை பொழிந்து வழிபட்டதின் பயனாக இறைவன் மஹாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை கொடுத்தாக ஓலைச்சுவடிகளில் உள்ளது. மேலும், விஷ்ணுவின் இதயத்தில் மஹாலட்சுமியை ஸ்தாபனம் செய்த தலமாகவும் விளங்கி உள்ளது. மன்மதன் தாழ் இழந்த உடலை இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு மீண்டும் உடலை பெற்றதாகவும்,  குபேரனும், ஆதிசேஷனும், சூரியனும் சிவபெருமானை வழிபட்ட தலமாக புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும், வில்வ மர நிழலில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும் தான். மஹாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால், இத்தலத்தில் உள்ள இறைவனுக்கு ஐஸ்வரயேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்யாநுக்ரஹர் என்ற பெயர்களும் உள்ளது. கோவிலின் சிறப்பு அம்சமாக குழந்தை பாக்கியம் வேண்டுவோர் திருக்காமேச பெருமானை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம். திருமணமாகதவர்கள், சுய தொழில் புரிவோர், நகை வியாபாரிகள், சுக்ரதோஷமுடையவர்கள் ஐஸ்வர்ய லெட்சுமியையும், வில்வமரத்தினையும் வலம் வந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். எந்த ஒரு செயலை செய்ய முயன்றாலும் இக்கோவிலில் உள்ள சிவபெருமானை தரிசித்து விட்டு செய்தால் எதிரிகளின் தொல்லைகளோ அல்லது எவ்வித தடையுமின்றி வெற்றி கிட்டுவதாகவும், தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகள் மற்றும் எதிரி தொல்லைகள் நீங்குவதாகவும் உள்ளது. அட்சய திருதியை அன்று அதிகாலை முதல் யாக பூஜைகள் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள், ஐஸ்வர்யா மகாலட்சுமிக்கு நடத்தப்பட உள்ளது. திருச்சிக்கு அருகே முசிறியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளூர்.

No comments:

Post a Comment