இந்தியத் தொழில் துறையில் முன்னணி நிறுவனங்களில் மூன்றாம் தலைமுறையினர் இப்போது தங்கள் தந்தையின் தொழிலை ஏற்று நடத்தத் தயாராகி விட்டனர். பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் இத்தகைய மாற்றம் மெதுவாக நடைபெறத் தொடங்கி விட்டன.
டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான இக்குழும நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 1,048 கோடி டாலர்.
1. 2003-ம் ஆண்டு நிறுவன நிர்வாக பயிற்சியாளராக சேர்ந்தவர் 2010-ம் ஆண்டு சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2. நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து படிப்படியாக அனைத்து பொறுப்புகளையும் கவனித்தவர்.
எண்ணெய் அகழ்வு, சுத்திகரிப்பு மட்டுமின்றி பெட்ரோகெமிக்கல், சில்லரை வணிகம், தொலைத் தொடர்பு என பல்வேறு தொழில்களில் இக்குழுமம் ஈடுபட்டுள்ளது. சொத்து மதிப்பு ரூ. 1,53,822 கோடி.
1. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2. ஆகாஷும் மகள் இஷாவும் இரட்டையர்களாவர். மெக்கன்ஸி நிறுவனத்தில் வர்த்தக பகுப்பாளராக பணிபுரியும் இவர் சில்லரை வர்த்தகப் பிரிவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
3. தாயுடன் சமூக சேவை, மும்பை கிரிக்கெட் அணியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ். நுகர்வோர் பொருள்கள், மின்னணு பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம். இக்குழும நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு ரூ.16,535 கோடி
1. குழும நிறுவனங்களின் தலைமை பிராண்ட் அதிகாரி. கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குநர் குழுவில் உள்ளார்.
2. கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மனிதவள மற்றும் புதிய பொருள் தயாரிப்புப் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். நுகர்வோர் பொருள் தயாரிப்புப் பிரிவின் செயல் இயக்குநராக உள்ளார்.
3. இவர் கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா. சிமென்ட் தயாரிப்பு, ஜவுளி, ஐடியா செல்லுலர், சில்லரை வர்த்தகம் என பல்வேறு தொழில்களில் இக்குழும நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இக்குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ. 53,505 கோடி.
1. ஸ்வதந்திரா மைக்ரோபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு உதவி புரிகிறார்.
2. மிகச் சிறிய வயதானதால் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார். புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகிறார்.
3. பள்ளியில் படித்து வருகிறார்.
பார்தி குழும நிறுவனங்களின் தலைவர் சுநீல் பார்தி மிட்டல். இக்குழுமம் தொலைத் தொடர்பு, சில்லரை வணிகம், காப்பீடு, டிஜிட்டல் டிவி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இக்குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ. 92,714 கோடி.
1. லண்டனில் உள்ள ரோக்சாண்டா வேக்கர் எனும் சர்வதேச ஆடை பிராண்ட் மேம்பாட்டில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்நிறுவனத்தில் இவர் முதலீடு செய்துள்ளார்.
2. இவர் ஹைக் மெசஞ்சர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ஸிப் போன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.
3. இரட்டைக் குழந்தையில் இளையவரான இவர் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்துள்ளார்.
இது பன்னாட்டு உருக்கு உற்பத்தி நிறுவனமாகும். இதன் தலைவர் லட்சுமி மிட்டல். ஆர்சிலர் நிறுவனத்தை 2006-ம் ஆண்டு லட்சுமி மிட்டல் கையகப்படுத்தினார். உலகின் மிக அதிக அளவில் உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆர்சிலர் மிட்டல் திகழ்கிறது. நிகர சொத்து மதிப்பு 3,100 கோடி டாலராகும்.
1. மூத்த மகனான இவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். நிறுவனங்களைக் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
2.மிட்டல் குழும நிறுவனமான எல்என்எம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குராக உள்ளார் மகள் வனிஷா மிட்டல். ஐரோப்பிய வணிகக் கல்வி மையத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.