Wednesday, February 11, 2015

குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம்: தமிழக அளவில் தருமபுரியில் முதல் முயற்சி

இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் கொண்ட முருங்கைக் கீரை மற்றும் காய்கள் பள்ளி வளாகத்திலேயே கிடைக்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம் நடவு செய்ய சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தர வின் பேரில் மாவட்ட கல்வித்துறை இந்த பணியில் 95 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது.
‘பள்ளிக்கு ஒரு முருங்கை நட்டு, நிறைவான இரும்புச் சத்து பெறுவோம்’ என்ற வாசகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முருங்கைக் கீரை, பூ, காய் ஆகியவை பள்ளி வளாகத்திலேயே சத்துணவில் சேர்க்க கிடைத்து விடும். இதுதவிர பப்பாளி, வல்லாரை கீரை ஆகியவற்றை நடவும் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். இவை அனைத் துமே குழந்தைகளின் ஆரோக்கி யத்தையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும் குணம் கொண் டவை. வளரிளம் பருவ மாணவிகளுக்குத் தேவையான சில முக்கிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன. இந்த உணவு வகைகள் தொடர்ந்து கிடைப்பதன் மூலம் அரசுப் பள்ளி குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பட்டு அவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதுடன், நுண்ணறிவுத் திறன் கொண்டவர்களாகவும் உருவெடுப்பர்’ என்றனர்.
சிக்குர்மேனி கீரை பயிரிட திட்டம்
‘சிக்குர்மேனி’ என்பது அடர்வனப் பகுதிகளில் கிடைக்கக் கூடிய ஒரு கீரை வகை. பல கீரைகளில் அடங்கியிருக்கும் சத்துக்கள் இந்த ஒரே கீரையில் கிடைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே இந்த கீரையை உணவுக்காக அரசுப் பள்ளிகளில் நடவு செய்யவும் ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

No comments:

Post a Comment