Saturday, January 17, 2015

lord muruga


Thiruparangkundram:
First worship siva-parvathai@menakshi sundareswarar temple at sanathi street Secondly worship the lord muruga who is with deivanai
White peacock represents devarhal & rishihal to worship muruga
Water sunai created by murgan at mountain for nakerans problem solving.
Dissolve salt in lakshmi thertham to erase themal & muhaparu
Hanuman with his long tail as seat before Ravana can be seen as sculpture in six pillar mandapam @ left pillar. Followers apply mehandi in his tail

Palani :
First worship pada vinayahar temple at foot of the hills and proceed to Palani
At north side of the hill Bramha thertham for a sacred dip.
Pogar jiva smaathi is at top of the hill in the inner round southwest corner of the temple.     
Morning 6am viswarupa tharisanam, vila puja @ 7.15hrs, siru kala santhi @ 8hrs includes abiseham … rak-alam abisheham honey & thenai mavu will be given as prasatham. Sandal is applied on murugan statue this is given as prasadam on next day morning. Try to obtain abisheham thertham as prasadam. 

Male child – Ottan chathiram, Kulandai Velappar Temple is in-between Palani & Dindukal offer chocolates, mittai for child birth, marriage, passing in exams, etc. this is in the palani pathayathrai route

Swamy Malai: 6km from kumbakonam
 2nd house as Guru. This is the only created hill.
As soon as enteringblind has got his vision by praying this vinayahar.
This murugan is equal to sivan vice versa. Shanmuga archanai. To eradicate enemies is specially performed here.  
                                             
Thiruthani: 5th house. Ordinary sandal powder is not used hers, sandal powder made from indran’s sandal stone is only used. This sandal is not applied in forehead of followers, instead it is dissolved in water and is had as drink. This drink cures all incurables. This is given to followers only on special days.       
In the rear side wall of the mulavar, u can see child form athi Balasubramaniar which is prior to his marriage.
Biravar always has two dogs as his vaganam, but here u can see four dogs representing 4 Vedas, hence praying him will bestow growth in studies.
Obstacles in marriages are removed. Pray Kalyana Murugan for getting marriage and after marriage the couples can perform thirukalyanam.
Valli thevani & murugan are in tamil aku. Abath sakaya vinayakar should be worshiped after praying all deity.     

Palmuthir cholai: 6th house is situated at Alagarmalai at a distance of 21kms from Madurai surrounded by nature’s tree. Every 10 minutes bus is available from madurai to alagarkoil. From foot of the hill to palamuthir cholai. Temple vehicles are plying from 6am to 5.30pm.. Originally there was Vel statue only, which can be seen in a separate sannathi. It is believed that Ganapalam (Naval palam) thiruvilayadal story was originated at this place. Silamaru alis nubura thertham (sunai water encompass vitamins of iron, & thamiram) is adjacent to Madavai mandapam cures all ailments. Rakayee amman temple has a soonai water. Alagar koil is 21kms from maduari in the foot of the hill and samba Dhosai is famous prasadam.       

Thiruchendur:
58kms from Thirunelveli & 40kms form Tuticorin shore of Bay of Bengal. First holy bath in Nali kinaru (well), thereafter bathe in sea, pray thundu kai vinayahar, take prathatchanam via Kiri Street, enter the temple via shnmuga vilasam south entrance and male should remove his upper dresses, pray to 5 lingams which were worshiped by muruga. Worshiping during vaikasi (May  to june) is equaling to entire year worship.        
Viputhi prasadam is given in panner leaf which has 12 nerves i.e. it represent 12 arms  Adjacent to santhana malai swing is tied by childless, for early children. At south of the temple memorial of Silent(mouna) samy, Vallinayaka samy, Kasi samy, who were the founders. Thara abiseham (milk drops) is done for 3 hrs. stomach ailment are cured by him & reciting kanda sashti.         
 தீரா வினை தீர்ப்பான் திருச்செந்தூரான்
 தீரா வினை தீர்ப்பான் திருச்செந்தூரான்
இன்றைய திருச்செந்தூர் என்ற,முருகன் கோயில் கொண்ட தலம்,அறுபடை வீட்டின் அதிமுக்கியம் வாய்ந்த இரண்டாவது தளம்.இந்தக் கோயில்,தேவர்களின் அரண்மனைகளை உருவாக்கிய,பிரம்மதேவனே தொழும்படியான ஆற்றல் மிகுந்த மயன் என்ற சிற்பியால் உருவாக்கப்பட்டது.இந்த கோயில் வங்கக் கடலின் கரையில் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால்,அந்தக் கடலினுள் திருச்செந்தூர் முருகன்,செந்திலாண்டவர் என்று தேவர்களால் போற்றப்படும் பாலசுப்பிரமையரின் மூல ஸ்தானத்திற்கு நேர் எதிரில் உள்ள வதனாம்பரம் என்ற தீர்த்தக் கரையில்தான்,கோயில் அமைந்துள்ளது.

அதனால்தான் கடலில் நீராடி,பின் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நாழிக் கிணற்றில் நீராடிய பின்னரே ஆறுமுகப் பெருமானை தரிசிக்கவேண்டும்.

நாழிக் கிணறு கந்தக சக்தி கொண்டது.முனிவர்களும் சித்தர்களும் தேவர்களும் இவ்வாறு அனுதினமும் உஷத்காலத்தில் நீராடி பின் அப்பன் ஆறுமுகனை தொழுத பின்னரே தேவலோகம் செல்கின்றனர் என்பது உண்மை.

"வீரம்,கருணை,கொடை,தாராளம்,தீட்சண்யம்,ருத்ரம் என்ற குணங்கள் கொண்ட இவரை 6 நாள் விரதம் இருந்து ஐப்பசி மகா சஷ்டியில் சேவித்தால் அனைத்து நலனும் பெறலாம்" என்கிறார் ,அகத்தியர்.

இந்தக் கோயிலில் மேலவாசல் விநாயகரை முருகன் தான் போருக்கு புறப்படும் முன் தொழுது சென்றாராம். எனவே,வியாபாரம் ஆரம்பிப்பவர்கள்,கூட்டு வியாபாரம் செய்ய நினைப்பவர் கள்,கடல் தாண்டி வேலைக்கு செல்பவர்கள்,இந்த விநாயகரை வணங்கி வேலையை ஆரம்பித்தால்,புகழ்,ஐஷ்வர்யம்,ஆனந்தம் எல்லாம் சேரும் என்கிறது நாடி.

ஆறுமுக நைனாரையும் குமாரவிடங்கரையும் ஒருவன் பூர்வஜன்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே திருச்செந்தூர் சென்று தொழ முடியும்.எத்தனை பொருள் செல்வம் இருந்தாலும் இந்த இடத்திற்கு வந்து,நீராடி,விரதமிருந்து இந்த இறைவனைத் தொழுவதால் வாழ்வில் கிடைக்கும் நிம்மதி,விவரிக்க இயலாதது.

கரியமாணிக்க விநாயகரை தொழுபவருக்கு ஊனம் என்பதே வராது.வாதம்,வலிப்பு போன்ற கடுமையான பிணிகளும் குணமாவதோடு,எதிர்காலத்திலும் இத்தகைய பீடைகள்,ஒருவருடைய குலத்திற்கேவராது என்கின்றன நாடிச் சுவடிகள்.

இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் அரங்கநாதன்,
சனீஸ்வரர்,நடராஜர்,வீரவாகுத் தேவருக்கு
சனிபிரதோஷ தினத்தில் (குறிப்பாக தேய்பிறை நாளில் அமையுமானால் கூடுதல் சிறப்பு) ஆராதித்து வர,இதயம் பலப்படும்.இவ்வாறு 2 சனி பிரதோஷங்களில் ஆராதித்தால் இதய நோயே அண்டாது;ஆயுளும் விருத்தியாகும்.
முருகப்பெருமானால் ஏற்படுத்தப்பட்ட நாழிக்கிணறு என்பதனை 'ஸ்கந்த ப்ஷ்கரணி' என்கிறார் அகத்தியர்.

இந்த நீரை 3 மண்டல காலம் (144 நாட்கள்) ,சந்தானம் கலந்து அருந்தி வந்தால் சரும நோய்கள்,சொரியாசிஸ் போன்ற கொடிய நோய்கள் தீர்க்கப்படுகின்றன.இது நாடி படித்து - -பரீட்சை செய்து குனங்கண்டவர்கள் பலர்.ஆதிசங்கரர் பகவத் பாதாள்,தனது நோய் நீங்க இந்த முறையைத்தான் கடைபிடித்தார்.

"வைகாசி விசாகத்தில்,ஐப்பசி சுக்கில சஷ்டியில் கண்டிப்பாக திருச்செந்தூர் சென்று,இளநீர் மட்டும் அருந்தி,விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபட,தடைபட்ட திருமணம் மனம் மகிழ நடந்தேறும்.வழக்குகள் வெல்லும்.தாமதமான பதவிகள் தப்பாமல் வந்து சேரும்.விலகாத பேய்களும் வெருண்டோடும்." என்கிறார்,நக்கீர தேவர்.

பணம் வேண்டுமா?பதவி வேண்டுமா? அமைதியான இல்லறம் வேண்டுமா?வேலை வேண்டுமா? வளநாடு போக வேண்டுமா?கோர்ட்டில் வெற்றி வாகை சூடவேண்டுமா? வீர தீர விளையாட்டினால் கீர்த்தியும் பொருளும் சேர வேண்டுமா?

திருச்சீரலைவாய்,சதுர்வேதிமங்கலம்,ஜயந்திபுரம்,திரிபுவனமாதேவி என்று தேவர்களால் பெருமையுடன் போற்றப்படும் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை தொழுது சரணடையுங்கள்;


Marutha malai: 15km away from kovai railway station. This are is full of herbal tree & plants hence deities mental & physical ar cured by the mere presence/air. Temple is inbetween 2 mhills. It has route for walking by 837 steps and by road. First pray Thondri vinayakar this is suyambu elephant face with-out body, on the way edumban temple, childless pray by ting swing at pusa tree & kodari muri tree nad are benefited. Foot immersion of a Horse can be located, this is the place murugan has himself got hold of a thief when his ornaments was stolen. Panja-virutcha ---ham (korakkatai, ichi, ala maram, vakanai arasa tree) has vinayahar & vel murugan, lit gee lamp to get rid of devils eye, poverty, negativity & prosperity in business.  Athi mula sthalam has murugan with valli & devani in the form of linga. The main deity statue is made by snake saint, right to him is patiswaran (siva) with parvathi sanathi, hence it is somaskanda sthalam. At marthua hill marutha thertham, kanni thertham, skantha thhertham are ootru neer, this cures all ailments. a cave can be seen  right side of athi mulavar, here snake sithar(pambati sithar) use to meditate, here murugan is seen as 5head snake, and viputhi used for beseham of snake sither is distributed to followers. This viputhi mixed with water cures Naha thosam, poison bites & skin disorder.       
Marutha hill is for murugan, kovai poondi velliangri is for siva, neeli hill is for parvathi, hence it is also somaskanda         
vaikasi visaham is a special day for solving all family problem and for child birth prayer. 

Chin ala pati Subramanian temple
Every day 7pm to 11pm one can sense good aroma. Few devotes have said that they can observe divine circle around Subramanian statue and during sasti, kirthigai & Monday it is still stronger

Sikal singravelan – sathru puja eliminating enemies & sweating murugan are famous

முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாக கருதப்படும் மருதமலையில் எழுந்தருளியிருக்கும் எழில் முருகனின் சுடர் முகத்தை தரிசிப்பவர்களின்  வாழ்வில் வளம் பெருகும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. கோயிலின் வலது புறம் தல விருட்சமாகிய மருதமரம் உள்ளது. மருதமலை என  பெயர் உருவானதற்கு மருதமரம் ஒன்றாக கருதப்படுகிறது.


தம்பிக்கு உகந்த விநாயகர்: மருதமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாகஇருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவதுவிசேஷம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, "தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். மலைக்கோயிலுக்கு படி வழியாகச் செல்லும் பக்தர்கள் மட்டுமே இவரை வணங்கிச் செல்கிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள், இவரைக் கவனிக்காமல் சென்று விடுகிறார்கள். வாகனத்தில் வந்தாலும், அடிவாரத்திலுள்ள இவரை வணங்கியபிறகே செல்ல வேண்டும் என்பது நியதி.

சாபம் நீங்கியது: கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் இத்தலத்தின் பல சிறப்புகளை எடுத்துக்காட்டுகிறார். சுயம்பு மூர்த்தியாய் லிங்க வடிவில் இருந்த சிவன் மீது பால் சுரந்தபோது காமதேனுவின் குளம்பு தெரியாமல் பட்டுவிட்டது. அதனால் தோஷம் அடைந்தது காமதேனு. பஞ்சகிரியில் உறையும் முருகனை வழிபட்டு பாவ தோஷ நிவர்த்தி பெற முடிவு செய்தது. அதன்படி சிவன் உறையும் வெள்ளியங்கிரியில் சிவனை வழிபட்டு, பிரும்ம கிரியில் விநாயகரை வழிபட்டு, திருமால் உறையும் விஷ்ணுகிரியை வணங்கி, அம்பாள் உறையும் நீலிமலை என்னும் நீலகிரியை வழிபட்டு, குமரன் உறையும் மருதகிரி வந்து பசி நீங்க புல் மேய்ந்து, சுனை நீர் அருந்தி தொடர்ந்து வழிபட்டு தன் தோஷம் நீங்கியது. மேலே குறிப்பிட்ட பஞ்சகிரியும் மருதமலையைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகள் ஆகும்.

 பாம்பாட்டிச் சித்தர்: பாம்பாட்டிச் சித்தர் நெடுங்காலம் இம்மலையில் வாழ்ந்தார் என்பது வரலாறு. அவர் வாழ்ந்த இடம் தற்போது குகையாக உள்ளது. இந்தக் குகையில் இருந்து ரகசிய வழியாக "ஆதி மூலஸ்தானம்' என இப்போது வழங்கும் இடத்தில் சென்று அரூப நிலையில் இருக்கும் முருகன் - வள்ளி-தெய்வானையை வணங்கினாராம் பாம்பாட்டிச் சித்தர்.
பாம்பாட்டிச்சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள். 


பாம்பு முருகன் : பாம்பாட்டிச்சித்தர் சன்னதியிலுள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச்சித்தருக்கு முருகன் காட்சி தந்தார். இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளது. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன்தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது விசேஷம்.
மருதாச்சல மூர்த்தி : மருத மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகன், "மருதாச்சலமூர்த்தி' என்றுஅழைக்கப்படுகிறார். மருதமரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் "மருது சுனை'. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆதி முருகன்: புராதனமான சிவன் கோயில்களில் சிவன், சுயம்புலிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார். இவரது சன்னதி "ஆதி மூலஸ்தானம்' எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் இவருக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

பஞ்ச விருட்ச விநாயகர் :அரச மரத்தின் அடியில் விநாயகர் இருப்பார். இத்தலத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்க அதன் அடியில் விநாயகர் இருக்கிறார். இவரை, "பஞ்சவிருட்சவிநாயகர்' என்று அழைக்கிறார்கள். அருகில் முருகப்பெருமான், மயில் மீது அமர்ந்து, கையில் வேலுடன் காட்சி தருகிறார். Here light gee lamp for solving multiple problems

சோமாஸ்கந்த தலம்:சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, சோமாஸ்கந்த அமைப்பு என்பர். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில்தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் சன்னதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை சன்னதியும் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள முருகன் சிகிவாகனர் (மயிலை வாகனமாக உடையவர்), "சேனானி (படைத்தளபதி) என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.

தோஷம் நீக்கும் விபூதி பிரசாதம்: பாம்பாட்டிச்சித்தருக்கு ஆடம்பர அலங்காரம் செய்யப்படுவதில்லை. விபூதிக்காப்பு செய்து, காவியுடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். மனிதர்கள் ஆடம்பரம் இல்லாமல், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.



குதிரையில் வந்த முருகன் : முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோயில்களில் அவரை விழாக்காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முற்காலத்தில் இக்கோயிலில் சில திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோயிலில் சேர்க்கச் செய்தார். அதோடு அவர்களை பாறையாக மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை "குதிரைக்குளம்பு கல்' என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.



இத்தலத்தில் மருத தீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவை மலையில் இருந்து வருபவை. இந்த தீர்த்தங்கள் உடற்பிணி நீக்கும் என துடியலூர் திருத்துடிசை புராணம் கூறுகிறது.


சந்நிதிகள்: மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர், இடப்புறம் மரகதாம்பிகை, நவகிரகங்கள், அலங்கார மண்டபத்தில் அருள்தரும் வரதராசர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. மருதாலசமூர்த்தி: கருவறையில் மருதாசல மூர்த்தி, சிரசில் கண்டிகையுடன் பின்புறம் குடுமியுடன் கோவணம் கட்டி வலது திருக்கரத்தில் ஞானத்தண்டுடன் இடது திருக்கரத்தை இடது இடுப்பில் வைத்தவாறு உள்ளார். முன்புறம் பலி பீடமும், வாகனமும், கொடி மரமும் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன.
             

No comments:

Post a Comment