Tuesday, May 13, 2014

water falls around tamil nadu

குற்றாலம் என்றதும் பொங்கிப் பெருகும் நதி நீர் நம் மனத்தில் தெறிக்கும். குற்றாலத்தைப் போன்று பாறைகளில் மோதி நுரைத்து எழும் அருவிகளைப் பார்க்கும்போது குளிர்ச்சி அடையாதோர் உண்டா? ஆகாயகங்கை, உலக்கை அருவி, திற்பரப்பு அருவி, சுருளி அருவி, கோவைக் குற்றாலம், கும்பக்கரை அருவி என உங்கள் கோடையைக் குளிர்விக்கும் அருவிகள் தமிழ்நாட்டில் அநேகம். அது போன்ற அருவிகள் குறித்து சிறு அறிமுகம்.
கோவைக் குற்றாலம்
கோவைக் குற்றாலம், கோயம்புத்தூரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அருவி அமைந்துள்ள சாடிவயல் என்னும் கிராமம், மரங்கள் அடர்ந்த குளுமையான வனப் பகுதியாகும். இந்தப் பகுதிகள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. மே மாதத் தொடக்கத்திலேயே இங்கு குளுமையான காற்றுடன் மழைச் சாரல் அடிக்கத் தொடங்கிவிடும். இதனால் இந்தப் பகுதி கோடைச் சுற்றுலாவுக்கு ஏற்ற பகுதியாகும். சிறுவாணி அணை இந்த அருவிக்கு அருகில்தான் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து சிறுவாணி, சாடிவயல் செல்லும் பேருந்துகள் இந்த அருவிக்குச் செல்கின்றன.
கொலை அருவியாகும் கும்பக்கரை அருவி
தேனீ மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. இதனை சின்ன குற்றலாம் என்று கூறுவர்.   கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள மூளையார் என்ற இடத்தில இருந்து இந்த அருவி உருவாகிறது. பல மலைகள் கடந்து கும்பக்கரை அருவியாக மாறுகிறது. இந்த அருவியில் யானை கசம், குதிரை கசம், அண்டா kazam  என பல கசம் கல் உள்ளது. இந்த கசத்தில் வலுக்கும் பறைகள் அதிகம். சுற்றுலா பயணிகள் வலுக்கும் பாறைகளை பற்றி அறியாததல் தங்களுடைய உரையை இலகின்றனர்.

No comments:

Post a Comment