Sunday, January 14, 2018

தூண் விழுந்தால் உலகமே அழிந்து விடும்!



🌒 மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோவில்தான் 'ஹரிஷ்சந்திரகட் கோவில்". இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.

🌒 இது 6-ஆம் நு}ற்றாண்டில் கலாசு+ரி பேரரசால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலுக்கு அருகில் தான் 'கேதாரேஸ்வர்" என்ற இந்த அதிசய குகைக் கோவில் உள்ளது. 

🌒 இந்த குகைக்கு உள்ளே சென்றால் நீரால் சு+ழப்பட்ட 5 அடி உயர சிவலிங்கத்தைக் காணலாம். அதுமட்டுமல்லாது லிங்கத்தை சுற்றியுள்ள தண்ணீரைக் கடந்துதான் லிங்கத்தை அடைய வேண்டும். 

🌒 சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் காரணத்தினால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினம். மழைக் காலங்களில் குகைக்கு அருகில் கூட செல்ல முடியாது. 

🌒 சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் இருந்துள்ளன. இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே சேதமடைந்து விழுந்த நிலையில் ஒரே ஒரு தூண் மட்டுமே உள்ளது. இந்த தூண் எப்போது சேதமடைந்து கீழே விழுகிறதோ அன்று உலகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. 

🌒 சிவலிங்கத்தை சுற்றியுள்ள நான்கு தூண்களை 'சத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்" ஆகிய நான்கு யுகங்களை தௌpவுப்படுத்துவதாக கூறப்படுகின்றது. 

🌒 ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து உலகம் அழிந்துவிடும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment