Monday, May 18, 2015

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை:

படம் | சிறப்பு ஏற்பாடுஆப்கன் ராணுவ வீரருக்கு இந்தியரின் கைகள்.
 ஆப்கானிஸ்தானில் 2 கைகளை இழந்த அந்நாட்டு ராணுவ கேப்டன் ஒருவருக்கு, கேரள மாநிலம் கொச்சியில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
அப்துல் ரஹீம் (30) என்ற இந்த வீரர் 3 ஆண்டுகளுக்கு முன் காந்தஹாரில் கண்ணிவெடியை அகற்றும் முயற்சியின்போது, தனது 2 கைகளை இழந்தார். இவர் பல நாடுகளில் முயற்சி மேற் கொண்ட பிறகு 4 மாதங்களுக்கு முன் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் கழகத்தை (ஏ.ஐ.எம்.எஸ்) அணுகினார்.
இந்நிலையில் கேரளத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 54 வயது நபரின் கைகளை அவருக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு கடந்த மாதம் சுமார் 15 மணிநேர அறுவை சிசிச்சை செய்யப்பட்டது. 20-க்கும் மேற் பட்ட அறுவை சிகிச்சை நிபுணர் கள், 8 மயக்க மருந்து நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் அப்துல் ரஹீ முக்கு பொருத்தப்பட்ட 2 கைகளும் அன்றாட செயல்பாடுகளுக்கு பெரும்பாலும் ஏற்ற வகையில் தற்போது தயாராகிவிட்டன. என் றாலும் பிசியோதெரபி சிகிச்சைக் காக அவர் இன்னும் 9 - 10 மாதங்களுக்கு மருத்துவ மனையில் தங்கவேண்டியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை யின் பிளாஸ்டிக் சர்ஜரி துறை பேராசிரியர் சுப்ரமணிய அய்யர் கூறும்போது, “ஒவ்வொரு கையை யும் 2 எலும்புகள், 6 ரத்தக் குழாய் கள், சுமார் 14 தசை நாண்கள் ஆகியவற்றுடன் பொருத்த வேண் டியிருந்தது. நோய் தடுப்பாற்றலை அடக்கி வைப்பதற்கான மருந்து கள் அறுவை சிகிச்சைக்கு முன் தொடங்கி தொடர்ந்து தரப்பட்டது” என்றார்.
மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, “உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்துவதை நாட்டில் முதல்முறையாக 4 மாதங்களுக்கு முன் நாங்கள் மேற்கொண்டோம். இந்த சிகிச்சை செய்துகொண்ட 30 வயது இளைஞரின் 2 கைகளும் அன்றாட செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் தற்போது முற்றிலும் தயாராகிவிட்டது. இப்போது செய் யப்பட்டது 2-வது அறுவை சிகிச்சை” என்றனர்.

No comments:

Post a Comment