Saturday, May 2, 2015

சிலம்பாறு என்னும் நூபுர கங்கை

108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அழகர் கோயில், மதுரை மாவட்டம் அழகர் மலை மீது அமைந்திருக்கிறது. இந்த மலை, திருமாலிருஞ் சோலை என்றும் அழைக்கப்படுகிறது.இங்கு ‘நூபுர கங்கை’ என்னும் புனித தீர்த்தம் உள்ளது. மகாவிஷ்ணு உலகை அளப்பதற்காகத் தன் திருவடிகளைத் தூக்கியபோது, அந்தத் திருவடியைக் கழுவி பிரம்மன் பூஜை செய்தார். அவ்வாறு கழுவியபோது, விஷ்ணுவின் கால் சிலம்பில் இருந்து கசிந்த நீர்த்துளிகள் அழகர் மலை மீது விழுந்து, புனித தீர்த்தமானது. கால்சிலம்புக்கு ‘நூபுரம்’ என்ற பெயரும் உண்டென்பதால், இந்த ஆறு சிலம்பாறு என்றும், நூபுர கங்கை என்றும் அழைக்கப்படுகிறது. 

சித்திரகுப்தனின் வேலை சித்திரகுப்தன் ஒரு கையில் எழுதுகோலும், மறு கையில் எழுதுகோலுக்குத் தேவையான மையும் கொண்டு காட்சி அளித்தார். இவர் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டே மக்களுக்கு இன்ப, துன்பங்கள் வாழ்வில் ஏற்படும். இவர் பாவங்களைத் தள்ளுபடி செய்யும் அதிகாரமும் பெற்றவராம். எனவே இவரைத் தொழுதால் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். சித்ரகுப்தனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வணங்க வேண்டும். சித்திரகுப்தன் ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது. வெயில் அதிகரிக்கும் மாதமான சித்திரையில் இவரது ஜெயந்தி வருவதால் அன்னதானம், விசிறி, குடை, செருப்பு உட்பட பல தானங்களைச் செய்தால் புண்ணியம் கூடிப் பாவம் குறையும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment