Friday, August 29, 2014

learn english

Child என்ற சொல் ஒருமை. குழந்தையைக் குறிக் கிறது. குழந்தைகள் என்று பன்மையில் குறிப்பிட children என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். கூட ஒரு ‘S’ சேர்த்துக் கொண்டு சில்ரன்ஸ் என்று நீட்டி முழக்கக் கூடாது. அதேபோல் man என்பதன் பன்மை men. Woman என்றால் பெண். women (விமன்)என்றால் பெண்கள். Mens என்றோ womens என்றோ சொற்கள் கிடையாது. Alumni என்றால் பன்மை. முன்னாள் மாணவர்கள் என்றுதான் அர்த்தம். அதன் ஒருமை alumnus என்பதுதான். இதைச் சுட்டிக்காட்டியதும் அவர் முகத்தில் அதிர்ச்சி. “தெரியும். அவசரமாகப் பேசியதில் தப்பாகி விட்டது” என்று சமாளித்தார்!  பல் என்றால் tooth. பற்கள் என்றால் teeth. ஓஹோ toothனா ஒரே ஒரு பல்தானா? அப்படியானால் toothpasteஐக் கொண்டு ஒரே ஒரு பல்லைத்தான் தேய்க்க வேண்டுமா என்று கேட்கக் கூடாது. ஒவ்வொரு பல்லையும் கவனமாகத் தேய்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம்.
அதேபோல் கால் என்றால் foot. கால்கள் என்றால் feet (பாதம், பாதங்கள் என்ற பொருளிலும் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன). ஆனால் ஆங்கிலத்தில் my foot என்பது எதிர்ப்பைக் காட்டும் சொற்கள். நீங்கள் உங்கள் நண்பரிடம் “நம்ம முத்துகிருஷ்ணன் ரொம்ப நாணயமானவர்” என்று சொல்கிறீர்கள். அவர் பதிலுக்கு “முத்துகிருஷ்ணன் நாணயமானவர்! my foot’’ என்றால் அவர் அந்த நபரைக் கொ ஞ்சம்கூட நாணய மில்லாதவர் என்று கருதுகிறார் என்று அர்த்தம். பல பத்திரிகைகளும் வார இதழ்களும் “மீடியாக்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. மீடியம் (medium) என்பது ஒருமை. மீடியா (media) என்பது பன்மை. எனவே மீடியாக்கள் என்பது தவறான சொல். ஏனென்றால் medias என்று ஒரு சொல் கிடையாதே!
இது போலவே தவறாகப் பயன் படுத்தப்படும் இன்னொரு சொல் ‘பாக்டீரியாக்கள்’. பாக்டீரியம் (bacterium) என்பது ஒரு கிருமியையும், பாக்டீரியா (bacteria) என்பது பல கிருமிகளையும் குறிக்கின்றன. அப்புறம் எப்படி ‘பாக்டீரியாக்கள்' வரும்?

டைலமா என்பது இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்ப நிலையைக் குறிக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் dilemma என்ற வார்த்தைக்கு வேறொரு பரிமாணம் உண்டு. 
 
Apprise - Appraise
Apprise என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? ‘தெரியப்படுத்துதல்’ என்று அர்த்தம். அதாவது Inform என்று பொருள். Apprise this information என்றால் இந்தத் தகவலைத் தெரியப்படுத்து என்று பொருள்.
சிலர் இந்த வார்த்தையை Appraise என்ற வார்த்தையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்வதுண்டு. எனவே Appraise என்ற – அதிகப்படியாக ஒரு a நடுவில் சேர்க்கப்பட்ட – வார்த்தைக்கான அர்த்தத்தையும் தெரிந்துகொள்ளலாம். பாராட்டுதல் என்ற அர்த்தம் தரும் Praise என்ற வார்த்தை உள்ளடக்கியிருப்பதால் அதே அர்த்தத்தைத்தான இதுவும் தரும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. Appraise என்றால் மதிப்பிடுதல் என்று அர்த்தம்.
அதனால்தான் நிறுவனங்களில் ஊழியர்களை மதிப்பிடும் முறையை Appraisal என்று குறிப்பிடுகிறார்கள். ஊழியர்களின் திறமைகளை மதிப்பிடும் Performance Appraisal பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே? நகைகளை மதிப்பிடுபவரை Jewel Appraiser என்றும், நிலங்களை மதிப்பிடுபவரை Land Appraiser என்றும் குறிப்பிடுவதை நீங்கள் அறிவீர்கள்தானே?
வாசகர் ஒருவர் ‘நானான நானில்லை தாயே’ என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் எப்படி எழுதலாம் என்று கேட்டிருந்தார். ஒரு திரைப்பாடலின் தொடக்க வரி இது. எளிமையாகத்தானே இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் யோசித்துப் பார்த்தால், அதற்கான கீ​ழே உள்ள இருவித மொழி பெயர்ப்புகளும் உணர்த்தும் அர்த்தங்களுக்கிடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை உணர முடிகிறதா?
1) O Mother, I Am Not What I Am
2) O Mother, I Am Not As I Was
கொஞ்சம் நேரமும், அதிக ஆர்வமும் இருப்பவர்கள் கீழே உள்ள மொழிபெயர்ப்புகள் எந்தத் திரைப் பாடல்களின் தொ​டக்க வரிகள் என்பதை யோசிக்கலாமே. (இரண்டும் கமலஹாசன் வாயசைத்த பாடல்கள்)
1) If You Focus Only On Stone, God Will Be Invisible.
2) Oh, The Jewel Among Women, Oh The Angel Of Forest, Sing A Song 


பெயர்ச்சொல் என்றால் Noun என்பது உங்களுக்குத் தெரியும்தானே? கீழே உள்ள வார்த்தைகள் Nouns-ஆ?
1. Shyam
2. Rekha
எளிதாகக் கண்டுபிடித்திருப்பீர்கள். இப்போது மீதமுள்ள வார்த்தைகளையும் அவை Nounsஆ இல்லையா என்று இனம் பிரியுங்கள்.
3. Boy
4. Crowd
5. Ganges
6. River
எதிலாவது குழப்பம் வந்ததா? இப்போது கீழே கொடுத்துள்ள வார்த்தைகளையும் Nouns, Nouns அல்லாதவை என்று வேறுபடுத்த முடிகிறதா என்று பாருங்கள்.
7. Elephant
8. Animal
9. Affection
10. Honesty
மேலே உள்ள பத்து வார்த்தைகளில் எவற்றை Nouns என்பீர்கள்? ஒரு ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் இதைக் கேட்டேன். என்ன காரணத்தினாலோ பலருக்கும் Crowd, River போன்ற வார்த்தைகளில் தயக்கம் வந்தது. Affection, Honesty ஆகியவை Nouns அல்ல என்றே பெரும்பாலானவர்கள் பதில் சொன்னார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட பத்து வார்த்தைகளும் Nounsதான். Shyam, Rekha போன்றவை Personal Nouns. குறிப்பிட்ட நபர்களைக் குறிக்கின்றன. Boy, River, Elephant, Animal ஆகியவை Common Nouns. அந்த வகையிலுள்ள யாரை அல்லது எதை வேண்டு மானாலும் அந்த வார்த்தை குறிக்கும். Crowd, Army ஆகிய வார்த்தைகள் Collective Nouns. ஒரே பெயர்ச்சொல் போலக் காணப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் பல நபர்களை உள்ளடக்கியது. Affection, Honesty, Love ஆகியவை Abstract Nouns. அதாவது உணர்வுகள். இவற்றை உணரத்தான் முடியுமே தவிர கண்களால் காண முடியாது.
பெயர்ச்சொல்லின் விதி
ஒரு வார்த்தை Noun ஆ இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க எனது தோராய மான ஆலோசனை இதுதான்.  Name என்று தொடங்கும் ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.உதாரணமாக Name This என்று எதையோ சுட்டிக் காட்டு கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.Chair, Table, Pen, Book என்று எதுவாகவும் பதில் இருக்கலாம். அல்லது ஒரு நதியைக் காட்டி Name It என்றால் பதில் River என்பதாகவும் இருக்கலாம். Ganges என்பதாகவும் இருக்கலாம். இப்படி ‘Name..’ என்று தொடங்கும் எந்தக் கேள்விக்கும் அளிக்கப்படுகிற எந்த ஒற்றை வார்த்தை விடையுமே Nounதான். Name Him அல்லது Her என்ற கேள்விக்கு நீங்கள் அளிக்கும் விடையும் Nounதான்.
ஆல்டரேஷனும் ஆல்டர்கேஷனும்
Alteration – Altercation – Alternate - Alternative
ஒரு பொருளை மாற்றி அமைப்பதை Alter என்பார்கள். அதனால்தான் தையல்காரரிடம் கொடுக்கும்போது “பேண்ட்டைக் கொஞ்சம் Alter செய்யணும்’ என்று தொடங்குகிறோம். Alter என்ற வார்த்தைக்குச் சமமாக Change, Amend, Redesign போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம். Alter வினைச் சொல். அதற்கான பெயர்ச் சொல் Alteration.
ஆனால் Alteration என்பதற்கு நடுவே ‘கடல்’ புகுந்து கொண்டால்? அதாவது ‘C’ சேர்க்கப்பட்டால்?. உரத்த குரலில் சண்டை, பொது இடத்தில் கத்தி விவா தித்தல் போன்றவற்றைக் குறிப்பிடவே Altercation என்ற வார்த்தை பயன் படுகிறது. எனக்குத் தெரிந்த பலரும் Alternate மற்றும் Alternative ஆகிய  வார்த் தைகளை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் கூறும் தீர்வு உங்களுக்குப் பிடிக்கவில்லையென்று வைத்துக் கொள்வோம். இதற்கு Alternate என்ன என்று கேட்கக் கூடாது. Alternate என்றால் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறுகிற என்று பொருள். 1,3,5,7,9 ஆகியவை Alternate Numbers. Periods Of Depression Alternate With Periods Of Elation. Alternative என்பது மாற்று, அதாவது Substitute அல்லது Replacement. These Are The Alternative Methods For Resolving The Issues என்பதுபோல. While Raining, Playing An Indoor Game Is An Alternative To Reading என்பதைப் போல. தவிர வேறொரு அர்த்தத்திலும் Alternative என்ற வார்த்தை பயன் படுத்தப்படுகிறது. மரபுகளிலிருந்து விலகிய பொருட்கள் மற்றும் செயல் பாடுகளைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. An Alternative Life Style, An Alternative World என்பதைப் போல. அதாவது Unusual, Radical, Unorthodox போன்ற வார்த்தைகளை Alternative என்ற வார்த்தைக்குச் சமமான  வார்த் தைகளாகக் குறிப்பிடலாம். 


​சென்ற வாரத்தில் Affection, Honesty ஆகிய சொற்கள் Nouns என்று குறிப்பிட்டதில் நண்பர் ஒருவருக்குப் பலத்த சந்தேகம்.
அப்படியானால் Love என்பதும் Noun-தானா? ஆமாம் என்றால் I Love You என்பதில் இடம் பெறும் Love Verb-தானே? ஆக Love என்பது Nounஆ? Verbஆ? என அவர் பல கேள்விகளை எழுப்புகிறார்.
சொல்லின் பல அவதாரங்கள்
ஆங்கிலத்தில் பல வார்த்தைகளை விதவிதமாகப் பயன்படுத்த முடியும். Love என்ற ஒரே வார்த்தையை வைத்துக் கொண்டு அது Nounஆ Verbஆ என்று சொல்ல முடியாது. அது பயன்படுத்தப்படும் விதத்தைக் கொண்டுதான் அதைச் சொல்ல முடியும்.
Love Is A Pleasant Feeling என்பதில் Love Noun ஆகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. I Love You அல்லது He Loves Her என்பதில் Love Verbஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கீழே உள்ள வாக்கிய​ங்களில் அடுத்தடுத்து ஒரே வார்த்தை எப்படி Noun ஆகவும் Verb ஆகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
This Is An Act Of Mercy.
Do Not Act Like A Fool.
Write The Address.
You Have To Address The Issue.
Divorce Should Be The Last Step.
I Want To Divorce You.
The Delay Is Not Accepted.
Do Not Delay Sending The Mail.
இப்போது ஒரே வாக்கியத்தில்
ஒரே வா​ர்த்தை Noun, Verb ஆகிய
இரண்டாகவும் பயன்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
Drink The Drink.
Do Not Trick Me With Your Trick.
ஆசிரியரும் மாஸ்டரும்
ஆசிரியருக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று ஒரு கேள்வி உ​ண்டு. இதற்கான பதில் “A Teacher Trains The Mind. A Station Master Minds The Train” என்பதாகும். இதில் முதல் வாக்கியத்தில் Train என்பது Verbஆகவும், இரண்டாவது வாக்கியத்தில் Train என்பது Noun ஆகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் முதல் வாக்கியத்தில் Mind என்பது Nounஆகவும், இரண்டாவது வாக்கியத்தில் Mind என்பது Verbஆகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. Love All என்பது அனைவரையும் நேசி என்ற அழகான வார்த்தை. இதில் Love என்பது Verbஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
டென்னி​ஸ் விளையாட்டில் Love All, Love One என்றெல்லாம் ஸ்கோர்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் உள்ள Love எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது? Nounஆகவா? Verbஆகவா? யோசியுங்கள்.
Pre - Post
​Pre என்றால் முன்னதாக என்ற அர்த்தம். Preplan என்றால் முன்னதாகவே திட்டமிடு என்று பொருள். ​Preview என்றால் மற்றவர்களுக்கு முன்னதாகவே பார்த்தல் என்ற அர்த்தம். Post என்றால் (தபால் என்பதைத் தவிர) பிறகு என்று அர்த்தம். Prepaid Connection, Post Paid Connection ஆகியவை நமக்குத் தெரிந்தவைதானே!
Postpone என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. தள்ளிப் போடுதல் என்று இதற்கு அர்த்தம். ஆனால் சிலர் ​Prepone என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது 18-ம் தேதி நடக்கவிருந்த சந்திப்பை இரு நாட்களுக்கு முன்பாகவே வைத்துக் கொள்ளலாம் (அதாவது 16-ம் தேதியே சந்திக்கலாம்) என மாற்றியமைத்தால் அது Prepone செய்வதாம். இது தப்பு. Prepone என்ற வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது.
Check, Cheque
Check என்றால் சரிபார்த்தல் என்று பொருள். Checking Inspector, Ticket Checker என்றெல்லாம் சொல்வது இந்தப் பொருளில்தான்.
Cheque என்பது காசோலை. “செக், கிரடிட் கார்டு ஆகியவற்றைப் பெற முடியாது. ரொக்கம் மட்டும்தான்’’ என்பதில் பயன்படுத்தப்படும் செக், Chequeதான். (இன்னொன்றைக் கவனித் திருக்கிறீர்களா? Q என்ற எழுத்து எங்கே வந்தாலும் அதைத் தொடர்ந்து U என்ற எழுத்து கட்டாயம் வரும்).
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஒரு வழி என்றால் அமெரிக்கர்களுக்குத் தனி வழிதானே? அவர்கள் காசோலையைக்கூட Check என்றே குறிப்பிடுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சினிமா பாடலின் வரி
இன்று Love பற்றி அதிகமாகப் பேசி விட்டதால் நலம் விசாரிக்கும் சில தமிழ்ப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. அவற்றின் முதல் வரியின் ஆங்கில வடிவம் இவை. எந்தப் பாடல்கள் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்.
1. Are You Well?
2. Are You Well My Dear?
3. Hi Dear, Are You Well? 

எண்ணக்கூடிய Nouns எ​ல்லாம் Countable Nouns.
எண்ண முடியாத Nouns கூட உண்டா என்கிறீர்களா? ஏன் இல்லை? Water கூட ​Nounதான். அதை எண்ண முடியுமா? “முடியுமே. நான்கு பக்கெட் தண்ணீர் எனலாமே’’ என்கிறீர்களா? நான்கு பக்கெட் தண்ணீர் எனும்போது நீங்கள் எண்ணுவது பக்கெட்டைத்தான், தண்ணீரை அல்ல.
“ஐம்பது லிட்டர் தண்ணீர் என்று சொல்லலாமே’’ என்கிறீர்களா? சரிதான். ஆனாலும் தண்ணீரை அளக்க முடியுமே தவிர, எண்ண முடியாது. We Can Measure Water. But We Cannot Count Water. சிலவற்றை எண்ண முடியும். சிலவற்றை எண்ண முடியாது. இப்போது அதற்கு என்ன? இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டு சரியான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் விஷயம்.
Few வும் Less ம்
இப்போது கீழே உள்ள நான்கு வாக்கியங்களையும் ஆங்கிலப்படுத்துங்கள்.
1. நாற்காலிகள் கொஞ்சமாக இருக்கின்றன.
2. தண்ணீர் குறைவாக இருக்கிறது.
3. ஐம்பதுக்கும் குறைவான நபர்களே இருந்தனர்.
4. அவனுக்குக் குறைவான அறிவுத் திறன்தான்.
கொஞ்சமான, குறைவான என்ற வார்த்தைகளுக்கு இணையாக நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் எவை? Few? Less? ஒரே அர்த்தம் கொண்டவைதான். ஆனால் எதை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதில் வேறுபாடு இ​ருக்கிறது.
1. There Are A Few Chairs.
2. Water Is Less.
3. There Were Fewer Than Fifty Persons.
4. He Has Less Intelligence.
இரண்டு வாக்கியங்களில் Few என்ற வார்த்தையையும் மற்ற இரண்டு வாக்கியங்களில் Less என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
Few என்பதை Countable Nounக்குப் பயன்படுத்த வேண்டும். I Have Only A Few Pens என்பதுபோல.
Less என்பதை Non-Countable Nounக்குப் பயன் படுத்துவோம். There Is Less Water In The Pot என்பதுபோல.
Few–ம் A Few-ம்
இந்த இடத்தில் வேறொன்றையும் தெரிந்து கொள்வோமே. எப்போது Few? எப்போது A Few?
ஆங்கில மரபுப்படி குறைவான என்றால் A Few. எதுவுமே இல்லையென்றால் Few.
அதாவது A Few Decisions Were Taken At The Meeting என்றால் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று அர்த்தம். மாறாக Few Decisions என்று மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அர்த்தம்.
அதேபோல அதிகமான என்பதற்கும் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. More, Much. இவற்றில் More என்பதைக் Countable Nounக்கும், Much என்பதை Non-Countable Nounக்கும் பயன்படுத்த வேண்டும். I Have More Pens. There Is Much Water In The Pot.
பாடல் வரிகளின் விடை
சென்ற முறை சில தமிழ்திரைப்படப் பாடல்களின் தொடக்க வரிகளை ஆங்கிலத்தில் அளித்திருந்தேன். விடைகள் இதோ:-
1. Are You Well? – நலந்தானா? (உடலும் உள்ளமும் நலந்தானா?)
2. Are You Well My Dear? – சவுக்கியமா கண்ணே (சவுக்கியமா?)
3. Hi Dear, Are You Well? – என்னம்மா கண்ணு சவுக்கியமா?
மேலும் சில பாடல் வரிகளை நீங்களே ஆங்கிலப்படுத்திப்பாருங்கள்.
தொடர்புக்கு:
(aruncharanya@gmail.com)

No comments:

Post a Comment