Saturday, August 9, 2014

பாவம் போக்கும் அந்தியூர் குருநாத சுவாமி

குருநாதரைத் தொழுதால் அருளும் பொருளும் குன்றாக வளரும் என்பார்கள். பூர்வஜென்ம சாபத்தையும் பாவத்தையும் போக்கி, வளமான வாழ்வைத் தருபவர் குருநாத சுவாமி. அவரது ஆலயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் அமைந்துள்ளது. 700 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் குருநாதரின் வனம் உள்ளது.
கோயிலில் மூலவராக வீற்றிருக்கிறார் குருநாத சுவாமி. ஒரு பாதி சிவனின் அம்சமாகவும் மறு பாதி முருகனின் அம்சமாகவும் விளங்கும் குருநாதர், முரட்டு மீசை, ஒரு கையில் வாள் , மற்றொரு கையில் வேல்.  அகந்தையை அழித்த குருநாதா.. உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜென்ம சாபம் நீங்கப் பெற்றேன். இந்த வனத்தில் அன்னை காமாட்சி தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். என்றென்றும் உங்களுடனே இருக்க ஆசைப்படுகிறேன். அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பித் தலை வணங்கி நிற்க அருள்புரிய வேண்டும்'' என்று வரம் கேட்டான். இதனால், அசுர குணம் கொண்டவர்களுக்குக்கூட குருநாத சுவாமி பூர்வ ஜென்ம சாபத்தையும், பாவத்தையும் போக்கி, நல்லருள் புரிவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஜென்ம சாபம், பாவம் நீங்குவதற்கு மட்டுமின்றி பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துகளால் தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்கவும் குருநாதரை மக்கள் வழிபடுகின்றனர்.

No comments:

Post a Comment