Saturday, August 9, 2014

கூழாங்கற்களே சிவசொரூபங்கள்

நர்மதை நதியில் கிடைக்கும் கூழாங்கற்களே சிவ சொரூபங்கள். ஓம்காரேஸ்வரர் என்ற சிவபுண்ணிய ஸ்தலத்தின் அருகே உள்ள தாரா க்ஷேத்திரத்தில் நர்மதை நதியின் கூழாங்கற்களே பாணலிங்கங்கள் என்று போற்றப்படுகின்றன. தாராஷேத்திரத்தில் நர்மதை நதி பல அருவிகளாகக் கீழே விழும் இடத்தில் பல ஆழ்நீர் சுனைகள் உள்ளன. இக்கிணறுகளை ‘குண்ட்’ என்பார்கள். மழைக்காலங்களில்
ஏற்படும் வெள்ளத்தில் அடித்து வரப்படும் பாறைகள் இக்குண்டங்களில் விழுந்து நீரின் சுழல்களில் புரட்டப்படுகின்றன. பல ஆண்டுகள் இந்தக் கற்கள் இடைவிடாமல் சுழன்று உருளுவதால் மென்மையான கூழாங்கற்களாக மாறி பாணலிங்கங்களாக உருவாகின்றன.
இந்தக் குண்டங்களின் அடியில் குவிந்துள்ள கூழாங்கற்களைச் சேகரிக்கும் வழக்கம் உள்ளது. ரேகைகளும், வடுக்களும் கொண்ட இக்கூழாங்கற்களே பாணலிங்கமாக வழிபடப்படுகின்றன. வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டு சந்திரசேகரர், உமா மகேசுவரர், விசுவநாதர் என்று இந்த பாணலிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment