Saturday, August 9, 2014

சனி தோஷம் நீக்கும் குச்சனூர்

சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றித் தனக்கென ஒரு கோயில் கொண்டுள்ள இடம் குச்சனூர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் எனுமிடத்தில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து வழிபடத் தொடங்கினான். அவனது வழிபாட்டால் மன மிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு, நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும்” என்று கூறினார்.  சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லால் கூரை அமைத்தான். அதன் பிறகு செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூர் என்று பெயர் மாற்றமடைந்து விட்டது. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர் என்று ‘தினகரன் மான்மியம்’ என்கிற பெயரில் வெளியான பழமையான நூல் ஒன்று இத்தலத்தின் வரலாறைத் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment