Sunday, July 14, 2013

காசிக்கு சமமான தலங்கள்/TEMPLES EQUAL TO KASI

சுவேதாரண்யம்-திருவெண்காடுஎல்லோராலும் ஒருவருடைய வாழ்நாளில் காசிக்கு செல்ல முடிவதில்லை.  நம் தமிழ்நாட்டிலேயே காசிக்கு சமமான ஐந்து  or six? தலங்கள் உள்ளன. 

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு phone : +91-4364-256 424
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 15 கி.மீ தூரத்தில் திருவெண்காடு கோயில் உள்ளது

இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். 

புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்

பஞ்சநதம்-திருவையாறு On the highway from Thanjavur, you pass five bridges ' over the Vadavar, Vettar, Vennar, Kudamurutti and Cauvery, the five rivers from which Thiruvaiyaru gets its name (thiru = sacred; ai = five; aaru = river). The presiding deity of the Siva temple here, Panchanatheesvarar (in Tamil, Ayyarappan ' both mean the same thing, `the Lord of the Five Rivers') also gets his name from them. Thiruvaiyaru is considered as holy as Varanasi and bathing in the Cauvery here is as guaranteed to rid devotees of sins as bathing in the Ganges.

Near the Siva temple is the one-roomed house where Thyagaraja composed some of his greatest works. On the banks of the river is the samadhi of the saint composer and it is here that the greatest music festival in the country takes place annually.

The Thyagaraja Aradhana festival is held in January Tiruvaiyaru temple has also a shrine for Aatkondar or Kala Samharamoorthy, which is unique in the world. A Homa Kund started by saint Shri Adi Sankara can be found outside the shrine of Aatkonda

கவுரிமாயுரம்-மயிலாடுதுறை

அர்ஜுனம்-திருவிடைமருதூர் - 612 104. தஞ்சாவூர் மாவட்டம்.+91- 435- 2460660.

இறைவன் - மகாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர், மருதவாணர்.
இறைவி - பிருகத்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை.
தலமரம் - மருது (அர்ஜுனம்) மரத்தின் கீழே கட்டுண்ட கண்ணனின் உருவம் உள்ளது. பக்கத்தில் காவிரி ஓடுகிறது. தீர்த்தம் - காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்.காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூகாம்பிகை: கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.வேறு எங்கும் இல்லை. தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மூல லிங்க தலம்: ஆலய அமைப்பு முறைப்படி திருவலஞ்சுழி-விநாயகர் , சுவாமிமலை-முருகன் , சேய்ஞலூர்-சண்டேசுரர் , சூரியனார்கோயில்-சூரியன் முதலான நவகோள்கள், சிதம்பரம்-நடராஜர் , சீர்காழி-பைரவர், திருவாவடுதுறை-திருநந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன் அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோயிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

அசுவமேதப் பிரதட்சிணம் : திருவிடைமருதூரில் மருதப் பெருமானை வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இந்த அசுவமேதப் பிரதட்சிணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும். வலம் வருவதும் நூற்றி எட்டு, இருபத்து நான்கு, பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும். திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதாலாகும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.

பட்டித்தாரும் பத்திரகிரியாரும்:  பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. பட்டினத்தார் இத்தலத்து மருவாணர் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒரு நாட்டுக்கே ராஜாவாக இருந்து விட்டு துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம் தோறும் தரிசித்து வந்து இருவரும் திருவிடைமருதூர் வந்த தங்கினர். பட்டினத்தார் திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒருநாயையும் உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். பட்டினத்தார் நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை.,இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார். இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க தன்னை இந்த திருவோடும்,நாயும் நம்மை சம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் உயிர் விட்டது.பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும், நாய்க்கும் முக்தி அளித்தார்.அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மட வீதியில் நாயடியார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம். மகாலிங்கப் பெருமான் தன்னைத்தானே அர்ச்சித்த சிறப்புடைய தலம். வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் ஸ்ரீ சைலம் , தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்)இடையில் இத்தலம் இருப்பதால் இதற்கு இடைமருது (மத்தியார்ச்சுனம்) எனும் பெயர் அமைந்தது. அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள். இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே. சனிபகவான், சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார்.

அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம், காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. 27 நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தின் நான்கு திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர்,ரிஷிபுரீசுவரர், சொக்கநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் சுவாமி அம்பாள் கோயிலை வலம் வரலாம். இப்பிராகாரத்¬ வலம் வந்தால் பேய், பைத்தியம் முதலியன நீங்கும். இன்றும் இவற்றால் பீடிக்கப்பட்டோர் வந்து வலம் செய்து குணமடைவதைப் பார்க்கலாம்.

மறைந்தவர்களுக்கு நீத்தார் கடனை சரிவர செய்யாமல் இருப்பதுதான் பல குடும்பங்களின் நீங்காத துயருக்கு முக்கிய காரணமாகும். இப்படி பல குடும்பங்கள் பெருகி விட்டதை சில ஆண்டுகளாக பார்க்கப் பரிதாபமாக உள்ளது. இந்த தவறு ஒன்றுதான் குடும்பத்தை வாழவிடாமல் வாசலில் கோலமிட முடியாத வீடாக ஆக்கிடும் என்று பல சாஸ்திர நூல்கள் எச்சரிக்கின்றன. கடுமையான பரிகாரம் செய்ய வேண்டும். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயத்தில் அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடத்துங்கள். மேலும் அங்குள்ள திருக்குளத்தில் பத்து கிலோ எள்ளை கீழேயுள்ள வடமொழி ஸ்லோகத்தைச் சொல்லிச் சொல்லி மீன்களுக்கு போடுங்கள். அதற்குப் பிறகு வரும் வருடாந்திர திதியை தவறாது செய்து கொண்டே
வாருங்கள்.   

குக்ஷேத்திரம் கயா கங்கா ப்ரபாஸம்
புஷ்கராணிச தீர்த்தாநி எதாநி
புண்யாநி திலதானே பவந்து இஹ
அஸ்மத்குலே ம்ருதாயேச கதிர்யேஷாம்
நவித்யதே தேஸர்வே த்ருப்திம் ஆயாந்து
மத் தத்தேன தில முஷ்டினா!

சாயாவனம்-திருசாய்க்காடு

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோவில்
சாயாவனம்
காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609105

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மி. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறை - பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனம் அடையலாம்.

திருச்செந்தூர் கோவிலைச் சார்ந்த வில்லேந்திய முருகர் வெளிநாட்டிற்குக் கடத்திச் செல்ல முயன்ற கோது, கடலில் புயலில் கப்பல் சிக்கவே இத்திருவுருவினை காவிரிப்பூம்பட்டிணக் கரையில் போட்டுச் சென்றதாகவும் அதனைக் கண்டெடுத்து இந்த திருக்கோவிலில் வைத்துள்ளதாகவும் கூறுவர்.

ஸ்ரீவாஞ்சியம்-திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம் - 610 110 திருவாரூர் மாவட்டம்.+91-4366 291 305, 94424 03926, 93606 02973.கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.

எமன் , தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.

கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி  எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.

தலங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்து வழிபட்டால் அவர்கள்  காசிக்கு சென்று பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.  காசிக்கு செல்ல முடியாதவர்கள் இத்தலங்களுக்கு  சென்று பயன் பெற்று பேறு பெறுவார்களாக.

TEMPLES EQUAL TO KASI.

Six places on the banks of the river Cauvery are said to be the most sacred and equivalent to Varanasi:

Thiruvengadu, 
Tiruvaiyaru, 
Sayavanam, 
Mayuram, 
Tiruvidaimarudur and 
Srivanchiyam. 

Out of these, Srivanchiyam is "one-sixteenth" more sacred than Kasi (Varanasi). Lord Siva is said have told Parvati that he loves this place the most.



OM NAMASHIVAYAA!!!

No comments:

Post a Comment