Saturday, July 20, 2013

மகாபலிபுரம் special

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மகாபலிபுரம் ஒரு சுற்றுலா தலம் மட்டுமின்றி, வேறு பல வகையிலும் சிறப்பு பெற்றதாகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்ய தேசமாக விளங்குவது மட்டுமல்லாமல், முதலாழ்வார் களில் ஒருவரான பூதத்தாழ்வாரின் அவதாரத் தலமும் ஆகும். 

இத்தலத்தின் சரித்திர முக்கியத்துவத்தை அறிந்திருக்கும் பலர், இதன் ஆன்மிகத் தன்மை யைப் பற்றி அவ்வளவாகத் தெரிந்து கொள்ள வில்லை. ஏனெனில் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள தலசயனப் பெருமாள் திருக்கோவிலுக்.

இத்தலம் சேதுவுக்கு நிகரான மகிமையைப் பெற்றது என்றும்; அதனால் இதற்கு "அர்த்த சேது' என்ற பெயரும் உண்டு என்றும் கூறுவர். சேதுவில் கடல் நீராடல் எவ்வளவு புனிதத் துவத்தை அளிக்குமோ அதே பலன்களை இங்குள்ள கடலில் நீராடியும் பெறலாம்.

பொதுவாக கடல் நீராடல் என்பதை அமாவாசை, பௌர்ணமி, கிரகண காலங்களில் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற நியதி உண்டு. ராமேஸ்வரம், சேது மற்றும் மகாபலிபுர கடல் ஸ்நானத்தை எப்போது வேண்டுமானா லும் மேற்கொள்ளலாம். அதேபோல உத்தரா யன, தட்சிணாயன  காலங்களிலும் மாசிமகத் தன்றும் கடல் ஸ்நானம் முக்கியமானது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள திருமால் வெறும் தரையில் சயனித்திருக் கும் தயாநிதி என்றால், இங்கு பூமித் தாயின் மகிமையைப் பற்றி என்ன சொல் வது! இத்திருக்கோவிலில் திருமகளும் "நிலமங்கை' என்ற திருநாமத்துடன் விளங்குவதும் தனிச்சிறப்பு. 

இத்திருத்தலம் மகப்பேறு அளிக்கும் புண்ணிய தலமாகப் போற்றப்படுகிறது. 

இத்திருக்கோவிலருகே அமைந்திருக்கும் ஆதிவராகப் பெருமாள் திருமணப் பேறு அருளும் கருணா மூர்த்தியாய் விளங்குகிறார். 

மாசி மக நன்னா ளில் (mid of February ) மகாபலிபுரம் சென்று புண்ணிய கடல் நீராடி புனிதம் அடைய லாம்.

No comments:

Post a Comment