Saturday, July 20, 2013

அனைத்து மத புண்ணிய ஸ்தல மண் மூலம் கட்டிய கிறிஸ்தவ ஆலயம்!

அனைத்து மத புண்ணிய ஸ்தல மண் மூலம் கட்டிய கிறிஸ்தவ ஆலயம்!
ஆகஸ்ட் 10,2012
அ-
+
ஓசூர்: ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து, கிறிஸ்தவ ஆலயம் கட்டியுள்ளனர்.ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், திருஇருதய ஆண்டவர் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயம், அன்ணை வேளாங்கண்ணி மாதா ஆலய வடிவமைப்பை போல் ஐந்து கோடி ரூபாய் மதிபீட்டில் புதிதாக கட்டப்பட்டது.சகோதரத்துவம், மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், உலகின் அனைத்து மத புண்ணிய ஸ்தலங்கள், கோவில்கள், கடல்கள் மற்றும் புனித மலைகளில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்கள், மண் மற்றும் தண்ணீர் கொண்டு, இந்த ஆலயத்தை கட்டியுள்ளனர்.ரோம்நகர் ஆலயம், தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நாகூர் முஸ்ஸிம் தர்கா மற்றும் மொராக்கோ, அல்ஜீரியா, உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள், பாலஸ்தீனம், இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட கிறிஸ்தவ நாடுகள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஹிந்து நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் கோவில்களில் இருந்து மண் எடுத்தும், புத்தகாயவில் இருந்து போதி மர இலை ஆகியவற்றை எடுத்து வந்தும், இந்த ஆலயத்தின் அடித்தளத்தில் இடப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது.கங்கை நதி, காவிரி ஆறு, யோர்தான் நதி, லூர்து நதி, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, மத்தியத் தரைக்கடல் ஆகிய இடங்களில் இருந்து தண்ணீரும் எடுத்து வந்து, கட்டுமான பணியில் தெளிக்கப்பட்டது.இமயமலை, சீயோன் மலை, செயின்ட் தாமஸ் மலை, குருசு மலை உள்ளிட்ட சிறப்பு வாய்ந் மலைக்கற்கள் எடுத்து வந்து, இந்த கோவில் அடித்தளத்தில் இடப்பட்டு கட்டப்பட்டது. அனைத்து மக்களும், சகோதாரர்கள் என்ற மத ஒற்றுமையை உணர்த்துவதற்காக, இந்த கோவிலை, அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த பணம் மூலம் கட்டப்பட்டதாக, ஆலய பங்குத் தந்தை அருள்ராஜ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:ஓசூர் நகரில், பல்வேறு மதம், கலாச்சாரம், இனத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் மத்தியில், மத ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆலய கட்டுமான பணிக்கு, அனைத்து மத புன்னிய ஸ்தலங்களில் இருந்து, மண், கற்கள், தண்ணீர் எடுத்து வந்து கட்டப்பட்டது. இந்த ஆலயம், முழுக்க முழுக்க அனைத்து மதத்தை சேர்ந்த, மக்கள் கொடுத்த பணம், பொருட்கள் மூலம் கட்டப்பட்டது. இந்த கோவில் திறப்பு விழா, வரும் 20ம் தேதி நடக்கிறது. விழாவில், அனைத்து மத தலைவர்கள், கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment