Saturday, March 3, 2018

வாஸ்துப்படி வீடு கட்டுவதற்கான அடிப்படை விதிகள் என்னென்ன?


வாஸ்து சாஸ்திரத்தில் சில அடிப்படை விதிமுறைகள் உண்டு. இந்த அடிப்படை விதிமுறைகளே தெரியாமல் பலபேர் உள் அமைப்புகளை மாற்றி அமைத்துக் கொண்டு வறுமை, நோய், கடன், மனக்குழப்பங்கள் போன்றவற்றில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. 


வாஸ்து விதி முறைகள் : 

1. நமது வீடு எப்பொழுதுமே சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டுமே இருக்க வேண்டும். மேல் கூரை எப்பொழுதுமே சமதளமாகவே இருக்க வேண்டும். மற்ற அனைத்து அமைப்புகளும் தவறாகும்.

2. நம்முடைய இடம் மற்றும் வீட்டிற்கு நான்கு திசைகளிலும் காம்பவுண்ட் சுவர் மிகமிக அவசியம். வடக்கு, கிழக்கு சுவர் எக்காரணம் கொண்டும் பொதுசுவர் கூடாது.

3. மேல்நிலை நீர்த்தொட்டி எப்பொழுதுமே தென்மேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். கீழ்நிலை நீர்த்தொட்டி என்பது வடகிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். மற்ற எந்த பகுதியிலும் நீர்த்தொட்டி அமைப்பு வருவது மிக தவறு.

4. வடகிழக்கு வரவேற்பரை, தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம், தென்கிழக்கு சமையலறை, வடமேற்கு கழிவறை வருவதே சிறப்பை தரும். மிக நல்ல உயர்வையும் தரும்.

5. வீட்டிற்குள் கழிவறை என்பது மேற்கு நடுப்பகுதியில் வரலாம். வீட்டிற்குள் வடமேற்கு பகுதியில் வரலாம். வீட்டிற்கு வெளியேயும், வடமேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும். மற்ற பகுதிகளில் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது.

6. செப்டிக்டேங்கை பொருத்தவரை வீட்டிற்கு வெளிப்பகுதியில் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். மற்ற வேறு எந்த பகுதிகளிலும் வருவது தவறு.

7. படி அமைப்பு என்பது வடகிழக்கு தவிர மற்ற மூன்று பகுதிகளிலும் வீட்டிற்கு வெளிப்புறத்தில் வருவது சிறப்பு. வீட்டிற்கு படி அமைப்பு என்பது தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதியில் மட்டுமே வரவேண்டும். வேறு எங்கு வந்தாலும் தவறே ஆகும்.

8. தரைதளம், கூரைதளம், காம்பவுண்ட்டுக்குள் உள்பகுதி தரை அமைப்பு இவையனைத்தும் தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு பள்ளமாகவும் மட்டுமே வர வேண்டும்.

9. பு+ஜையறை என்பது ஒவ்வொரு அறையிலும் தென்கிழக்கு சார்ந்தோ, வடமேற்கு சார்ந்தோ மட்டுமே வரவேண்டும். மற்ற பகுதிகளில் வரும்போது கெடுதலான பலன்களே கிடைக்கும்.

10. தெருகுத்து, தெருபார்வை, ஜன்னல்கள், வாசல்கள் இவையனைத்தும் உச்சம் பகுதியில் மட்டுமே வரவேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மையாகும்.

No comments:

Post a Comment