Saturday, March 3, 2018

மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் எரியும் விளக்கு !


மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் விளக்கு எரிந்துக் கொண்டே இருக்கும் அதிசயத்தை பற்றி பார்ப்போம்....!

🌟 உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் ஒரு அழகிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், வருடத்தில் 6 மாதங்கள் மூடியும் 6 மாதங்கள் திறந்தும் இருக்கும்.

🌟 இத்தலம் கடல் மட்டத்திற்கு 10 ஆயிரம் அடி உயரத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோவிலில் ஏழுமலையான் விஷ்ணு எனும் நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌟 இந்த கோவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் மூடப்பட்டு அதற்கு அடுத்த வருடம் வரும் மே மாதம் திறக்கப்படும்.

🌟 கோவிலை மூடும் சமயத்தில் இங்கு ஒரு விளக்கு ஏற்றப்படும். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலை திறக்கும்போது அந்த விளக்கு எரிந்துக்கொண்டே இருக்கும். அது எப்படி இவ்வளவு காலம் அணையாமல் எரிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

🌟 இதுமட்டுமல்லாமல் கோவில் மூடப்படும்போது இறைவனுக்கு சார்த்தப்பட்ட பு+க்களும் அப்படியே வாடாமல் ஆறு மாதங்கள் வரை இருக்கின்றன. இந்த அற்புதம் ஓரிரு ஆண்டுகளாக நடக்கவில்லை, ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இப்படி தான் இங்கு நடக்கிறது.uttarakhand 

No comments:

Post a Comment