Saturday, March 3, 2018

கிழமைகளுக்கான அதிர்ஷ்ட நிறம்


ஞாயிறு : சூரியனுக்குரிய நிறம் தான் மஞ்சள். இது எதிரிகளை விலக்க வல்லது மற்றும் உடனடியாக பலன் தரக்கூடியதும். ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது.

எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சள் நிற உடைகள் மற்றும் நகைகளை அணிவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

திங்கள் : திங்கட்கிழமை வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது. அதுவும் திங்கள் சந்திரனைக் குறிக்கும் சொல் என்பதால் அதன் வெள்ளை நிறம் அனைத்திலும் சிறந்ததைக் குறிக்கிறது.

எனவே திங்கட்கிழமை வெள்ளை நிற உடைகளை அணிந்து, வெள்ளை நிறமுள்ள முத்து, வைரம் போன்ற நகைகளை போட்டுக் கொள்வது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

செவ்வாய் : செவ்வாய் சிவப்பு நிறங்களைக் குறிக்கும். எனவே, செவ்வாய்க்கிழமை அன்று சிவப்பு வண்ண உடைகளையும், சிவப்புக்கல் அல்லது பவளம் ஆகிய நகைகளையும் அணிவது மிகவும் நல்லது.

புதன் : புதன்கிழமை பசுமையைக் குறிக்கும். புதன்கிழமையில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, புதன்கிழமை அன்று பச்சை நிற உடைகள், மரகதம் உள்ளிட்ட பச்சை நிறக் கற்கள் ஆகியவற்றை அணியலாம்.

வியாழன் : வியாழக்கிழமை மஞ்சள் நிறத்தைக் குறிக்கிறது. மஞ்சள் நகைகள் மற்றும் தங்க நிற உடைகளை அணிவது மங்களகரமாக இருக்கும்.

வெள்ளி : வெள்ளிக்கிழமை இளங்சிவப்பு நிறத்தை குறிக்கும். எனவே, வெள்ளிக்கிழமைகளில் இளங்சிவப்பு நிறம் உடைய உடைகள், மாணிக்கம் உள்ளிட்ட சிவப்பு நிறக்கற்களை கொண்ட நகைகள் ஆகியவற்றை அணிவது மிகவும் நல்லது.

சனி : சனிக்கிழமை அன்று கருப்பு நிறத்தில் உடை அணிவது சிறந்தது. அதேபோல் அன்று நீலம், ஊதா மற்றும் வாடாமல்லி போன்ற நிறங்களையும் அணியலாம். days colour

No comments:

Post a Comment