Saturday, September 20, 2014

குளத்துடன் அமைந்த தேவாலயம்

வில்லியனூர் மாதா திருத்தலம் பாண்டிச்சேரியில் இருந்து மேற்கே விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது


லூர்து மாதா பெயரில் வில்லியனூரில் தேவாலயம்  பெர்னதெத்தின் உறவினரான தார்ப்ஸ் அடிகளார் இங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லூர்து அன்னையின் சொரூபம் கப்பலில் இருந்து  இறக்கிய போது, அது மூன்று முறை கீழே விழுந்தது. எனினும், மாதா சொரூபத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது இன்று வரை பெரும் அதிசயமாகவே கருதப்படுகிறது. 1877, ஏப்ரல் 8 அன்று புதுச்சேரியின் பேராயர் மேதகு லெவணான் ஆண்டகை அவர்கள் திருமுறை ஒழுக்கங்களை நிறைவேற்ற, லூர்து அன்னையின் சொரூபத்தை அர்ச்சித்து கெபியில் அரியணை யேற்றினார். ஆசியக் கண்டத்திலேயே சில சொரூபங்கள்தான் போப்பாண்டவரின் பெயரில் முடிசூட்டப்பட்டுள்ளன. அவற்றில் வில்லியனூரில் அமைந்துள்ள புனித லூர்தன்னை சொரூபமும் ஒன்று.
ஆசியாவிலேயே, குளத்துடன் அமைந்துள்ள தேவாலயம், வில்லியனூரில் மட்டும்தான் உள்ளது. ஆரம்ப காலத்தில், கற்களால் கட்டப்பட்டிருந்த இந்தக் குளத்தின் கரைகள், 1923ஆம் ஆண்டில், செங்கற்களால் கட்டப்பட்டன. 1924ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மையப் பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில், லூர்து நகரில் மாதா காட்சி கொடுத்தபோது, அங்குள்ள சுனையில் உற்பத்தியான புனித நீர் இந்தக் குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்படுகிறது. இதனால் மாதா குளத்தில் உள்ள நீரினை பயன்படுத்தும் பக்தர்கள் பல்வேறு நோய்களிலிருந்து விடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற புனிதம் வாய்ந்த மாதா குளத்தில் லூர்து நகரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள தீர்த்தம் ஆண்டுதோறும் கலக்கப்பட்டு வருகிறது.

Villianur
is located to the west of Pondicherry on the Pondicherry - Villupuram main road at a distance of 9.5 Km from Pondicherry. Villianur is the headquarters of Villianur Commune Panchayat.

No comments:

Post a Comment