Sunday, November 17, 2013

ஹோமங்கள் பற்றிய விளக்கம்

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!


ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? 

ஹோமம் தான். 

கோவிலுக்கு போறது, சாமி கும்பிடுறது, அர்ச்சனை செய்றது,அபிழேகம் செய்றது, மொட்டை போடுறது, அலகுகுத்திக்கிறது, தீ மிதிக்கிறது எல்லாமே பரிகாரத்தின் ஒரு வடிவமாக இருந்தாலும் ஹோமம் தான் கடைசி. 

இதுக்கு மேலே பரிகாரம் செய்யணும்னா தவம்தான் செய்யணும்.  ஒரு மலை உச்சியா பார்த்து ஏறி உட்கார்ந்து தவம் செய்தால் பரசிவன் வந்து குழந்தாய் என்ன வரம் வேண்டும் என்று கேட்டாலும் கேட்கலாம். போகட்டும்.


சரி...சொல்லுங்க. 

ஒரு ஹோமம் செய்றிங்க. ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். 

என்னென்னமோ காயி, வேரு,இல்லை, பட்டைன்னு அக்கினியில் போடுறார். அதை பற்றி கொஞ்சமாவது தெரியுமா? 

அட ... மந்திரம் தெரியுமான்னு கேட்கலை. அங்கே என்ன செய்றாங்கன்னு தெரியுமா?

தெரியாதுல்ல. 

நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு  எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க.  

அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன?

அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை இப்போ சொல்றேன். கொஞ்சமாவது அதை பற்றி தெரிஞ்சுக்கோங்க.


முதலில் கணபதி ஹோமம். 

எந்த  காரியம் செய்தாலும்  முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் வாராமல் இருக்க விநாயர் வழிபாடு.

அதிலும் ஹோமம் மாதிரி உயர்ந்த பரிகாரங்கள் செய்யும் போது, அரக்க சக்திகள் அதை தடுக்க பார்க்கும் என்கிறது புராணங்கள்.

உண்மைதான். ஹோமத்தின் வழி அந்த பலனை பெற வேண்டும் என்ற விதியமைப்பு இல்லைனா, பல தடைகள் வரும்.

நீங்களே பாருங்க. ஹோமத்திற்கு தேதி குறிச்சிருப்பாங்க. அந்த நாள் நெருங்கும் போது,வீட்டில் இருக்கும் பொம்பளைங்க யாரவது தீட்டுன்னு குண்டை தூக்கி போடும்.

வர்ற 20 ம் தேதிதான் குளிக்கிற கெடு. சனியன் இப்பவே வந்துட்டு என்பார்கள்.

ஹோமத்திற்கு நாள் குறித்திருப்பார்கள். அந்த நாள் நெருக்கும் போது நெருங்கின பங்காளி ஒருத்தர் சிவலோக பதவியை அடைஞ்சுடுவார்.

பங்காளி இறப்பு பதினாறு நாள்  சூதகம்ன்னு ஹோமத்தை ஒத்தி வைக்கிற மாதிரி வந்துடும்.

ஹோமத்திற்கு நாள் குறிச்சுருப்பங்க. அந்த நாள் நெருங்கும் போது கையிலே  பணமே இல்லாமே திண்டாட வேண்டிவரும்.


அட கடவுளே இவ்வளவு சோதனை வருமா?

எல்லாருக்கும் இல்லை ராஜா. ஒரு சிலருக்கு. சரி.. முதலில் கணபதி பூஜை. துர்தேவதைகலாலோ, துஷ்ட்ட சக்திகளாலோ எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வினைகளை வேறறுக்கும் விநாயகர் பூஜை.





அடுத்து சங்கல்ப்பம்.

கோடான கோடி மக்கள் வாழக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். சரியான முகவரி எழுதப்பட்ட தபால் எப்படி குறுப்பிட்ட நபரை சென்றடைகிறதோ, அதைபோல் செய்யகூடிய இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக்கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த இலக்கு என்பது யாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, அதாவது யாருக்காக செய்கிறோமோ அவருக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்யப்படுவது.



அடுத்து குலதெய்வ பூஜை. 

இது பெரும்பாலான ஹோமங்களில் செய்யபடுவதில்லை. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். உலகத்தில் எத்தனை சாமிகள் இருந்தாலும் குலதெய்வம் முக்கியமானது.

நம் முன்னோர்கள் காலத்தில் குலதெய்வ பூஜை என்பதை குறையில்லாமல் செய்தார்கள்.

எந்த காரியமாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வேண்டினார்கள். வருடத்திற்கு ஒரு முறை விழாஎடுத்தார்கள்  .

வீட்டில் ஒரு சுபகாரியம் நடந்தாலும் முதல் பத்திரிகை சாமிக்கு வைத்தார்கள். ஆக குலதெய்வத்தோடு  அவர்களுக்கு இருந்த நெருக்கம் அதிகம்.

இது எந்திர யுகம். காரில் போகும்போது ஹாய் முருகா என்று ஒரு கை தூக்கிவிட்டு போகுற அளவிற்குத்தான் நேரம் இருக்கிறது.

என்ன செய்ய..... எப்படி இருப்பினும் , அடுத்து செய்ய வேண்டியது குலதெய்வ பூஜை.  குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் பூஜை.

ஆகமத்தில் இடம் இல்லையே என்று அலச்சியம் செய்யக்கூடாது.


அடுத்து செய்யப்படுவது பிதிர் பூஜை. 

இது ஒன்னும் அமாவாசை தர்ப்பணம் இல்லை. தெய்வமாகி போன நம் முன்னோர்களை தேடிபிடித்து வணங்குவது.

நீத்தார் உலகம் என்று சொல்லக்கூடிய இடத்தில் நம் மூன்று தலைமுறையை  சேர்ந்த முன்னோர்கள் இருப்பார்களாம்.

வருடத்தில் ஒரு நாள் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி உண்டு. அது திதி நாள். அன்று அவர்களுக்கு உரிய திதி கடமைகளை சரிவர செய்தால் மகிழ்ந்து வாழ்த்திவிட்டு செல்வார்களாம்.

ஒன்றுமே செய்யவில்லை என்றால், வந்தவர்கள் நல்ல மனது உள்ளவராக இருந்தால் மனக்குறையோடும், கெட்ட மனது உள்ளவராக இருந்தால் சபித்து விட்டும் போய்விடுவார்களாம்.

அது போன்ற குறைகள் இருந்தால் அவற்றை நீக்கி அவர்கள் ஆசியை பெறுவதற்காக செய்யப்படுவது பிதிர்பூஜை.

இதுவும் பெரும்பாலான ஹோமத்தில் தவிர்க்க படுகிறது. இது முறையல்ல.

எந்த தேவதையை குறித்து ஹோமம் செய்கிறோமோ அந்த தேவதையை கும்பத்தில் நிலைநிறுத்தல்.

கும்ப ஸ்தாபனம்


கும்பம்  என்பது உடல். அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் என்பது தலை. கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும். உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும். 

தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது. காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ, அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும் தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள். 

ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன் தாத்பரியம். 

என்ன ஹோமம் செய்கிறோம்? அதாவது எந்த தெய்வத்தை நினைத்து செய்கிறோமோ, அந்த தெய்வத்தை கும்பத்தில் நிலை நிறுத்துவதுதான் ஆஹாவனம் என்று பெயர்.

அடுத்து செய்யப்படுவது நவக்கிரக தோஷ பரிகாராம். 

ஜெனனி ஜென்ம சௌக்கியனாம்
வர்த்தினி குல சம்பதாம்
பதவி பூர்வ புண்ணியனாம்
லிக்கியதே ஜென்ம பத்திரிகா என்பது ஜோதிட வாக்கு.

நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரகங்கள். நம்புகிறமோ இல்லையோ, ஏற்றுக் கொள்கிறோமோ  இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள்.

இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான் நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரங்களை வணங்கி பூஜிக்க வேண்டும்.

இதை ஹோம நிறைவுக்கு முன் செய்வதும் உண்டு. இனி ஹோமம் ஆரம்பம்





இந்த நடைபெறும் போதுதான் வேத பாராயணங்கள் செய்யப்படுகிறது. வேத பாராயணங்கள் என்பது இறைவனை ஆராதிப்பது என்று பொருள்.

பொதுவாக பாராயணங்கள் என்பதே இறைவனை புகழ்ந்து பாடி, அவர் அருளை பெறுவதுதான்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்திரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு.

உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது. அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது.

காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை சொல்வது.

பிராத்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல் பலிப்பதர்க்காக சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார பிராத்திப்பது என்று பொருள்.

பாராயண முடிவில் சமகம் சொல்லப்படுகிறது. இதை பற்றி தனியே ஒரு கட்டுரை எழுதுகிறேன். இப்போதைக்கு படம் மட்டும். வசுவதாரா கொண்டு நெய் ஊற்றும் போது சொல்லப்படும் மந்திரம் சமகம்.


கடைசியாக பூர்ணாஹுதி 


இது ஹோமத்தின் நிறைவு பகுதி. பட்டு துணியில் வாசானாதி திரவியங்கள் சேர்த்து, எட்டு கண் விட்டெரிக்கும் அக்னி  தேவனுக்கு சமர்ப்பணம் செய்வதுதான் பூர்ணாஹுதி எனப்படுவது. 

இந்த அவிர் பாகத்தை பெற்று கொள்ள தேவலோக தேவேந்திரனே வருவாராம். இதை செய்து முடித்ததும் ஹோமம் நிறைவு பெறுகிறது.

சுபம் 
நம் இந்து சாஸ்திரப்படி , இறைவனுக்கு எதையேனும் நீங்கள் அளிக்க விரும்பினால், அதை அக்னி மூலம் தான் அளிக்க முடியும்.  அர்ப்பணிப்பு  உணர்வுடன் மிக சிரத்தையுடன் நீங்கள் மேற்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம். நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அளிக்கப்படும்  அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

அக்னிக்கு அளிக்கப்படும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம்.  அது உரிய முறையில் காலத்தே நம்மை வந்து பிரதி பலன்களை அளிக்கும்.  நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம்.
சில முக்கியமான ஹோமங்களை கீழே காண்போம். :

மகா கணபதி ஹோமம்  : தடையின்றி செயல்கள் நடைபெவும், லெட்சுமி கடாட்சம்  பெறவும்.


சந்தான கணபதி ஹோமம்  : நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.



வித்யா கணபதி ஹோமம்  : கல்விக்காக



மோகன கணபதி ஹோமம்  : திருமணத்திற்காக



ஸ்வர்ண கணபதி ஹோமம்  : வியாபார லாபத்திற்காக 



நவகிரக ஹோமம்  : நவகிரகங்களினால் நன்மை ஏற்பட



லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம். : ஏழையும் செல்வந்தனாவான் 



துர்க்கா ஹோமம்  : எதிரிகளின் தொல்லை அகல,



சுதர்சன ஹோமம் : கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் ஏவல்கள்  அகல



ஆயுஷ் ஹோமம் : ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.



மிருத்யுன்ஜெய  ஹோமம்  : ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.



தன்வந்திரி ஹோமம் : நோய் நிவாரணம்



ஸ்வயம்வரா ஹோமம்   : திருமணதடை அகல, விரைவில் கைகூட



சந்தான கோபால கிருஷ்ணஹோமம். : குழந்தைப் பேறு கிடைக்க
மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம் : மேற்கல்வி. தெளிந்த  சிந்தனை, 

பார்வதி கலா ஹோமம்  

ஜாதகரீதியாக நாகதோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். அப்படி அமைந்த ஜாதகர்களுக்கு ஆண்கள் என்றால் 30 வயதுக்கு மேலும், பெண்கள் என்றால் 27 வயதிற்கு மேலும் திருமணம் செய்ய வேண்டும். முன்னதாகத் திருமணம் நடந்தால் மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டுவிடும். அப்படிப் பட்ட ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வர கலா ஹோமமும் செய்து, கலச அபிஷேகம் செய்து கொண்டால் மேற்கண்ட தோஷங்கள் யாவும் விலகிவிடும். காரைக்குடி செஞ்சை நாகநாத சுவாமி கோவிலிலும், பள்ளத்தூர் அருள்நந்தி ஆசிரமத்திலும் மேற்கண்ட ஹோமங்களை முறையாகச் செய்வார்கள்.
                                                             ****
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் சந்நிதியில் ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி மந்திர ஜப ஹோமம் பொதுதீட்சிதர்களால் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் இந்த ஹோமத்தில் பங்கேற்று தரிசித்தனர்.
பொதுவாக ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு திருமணம் தோஷம் இருந்தால் இந்த சுயம்வர கலா பார்வதி ஹோமம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் இந்த ஹோமம் செய்வதில் வல்லவர்கள்.
இதனையடுத்து ஸ்ரீசிவகாமி அம்மன் சந்நிதியில் பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பாலஜோதிடர் வெங்கடேச தீட்சிதர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீசுயம்வர கலாபார்வதி மந்திர ஜப ஹோமத்தை பொதுதீட்சிதர்கள் நடத்தினர். திருமண தோஷம் உள்ள திரளான பக்தர்கள் இந்த ஹோமத்தில் பங்கேற்று தரிசித்தனர்.
                                                                   ****
உங்களின் ஆயுள் ஆரோக்கியம் கல்வி செல்வம் மனை வாகனம் குழந்தை காதல் திருமணம் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பிதுர்தோஷம் மாதுர்தோஷம் சர்ப்ப‌தோஷம் பிராமண‌தோஷம் குருசாபம் திருஸ்டிதோஷம் வாக்குதோஷம் பிரேதசாபம் சத்ருதோஷம் குலதெய்வ‌தோஷம் மாந்திதோஷம் நாக‌தோஷம் போன்ற் அனைத்து விஷயங்களுக்கும் சிறப்பான முறையில் ஹோமங்கள் செய்யப்படும்.

1. பிறந்த நட்சத்திர சாந்தி ஹோமம்: இந்த நட்சத்திர சாந்தி ஹோமம் ஒவ்வொரு வருடமும் உங்கள் பிறந்த நாள் அன்று செய்யப்படும். இது உங்களுக்கு அந்த வருடத்திற்க்கு நல்லபலன்களை அதிகமாகக் கிடைக்கச் செய்யும். இது இரண்டு வேத பண்டிதர்களால் செய்யப்படும். கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.5,000/-; 4 வேத பண்டிதர்கள் ரூ.10,000/-


2. கிரக சாந்தி ஹோமம்: (ஏதாவது ஒரு கிரகத்திற்க்கு மட்டும்) உங்கள் ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் கிரகம் அதற்க்குறிய நல்ல பலன்களை தராமல் கெடுபலன்களைத் தந்து கொண்டிருக்கும். அதை மாற்றி நல்ல பலன்களைத் தருவதற்கும் அல்து நடைபெறும் திசாபுத்தி குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்க்கும் இந்த ஹோமம் செய்யப்படும். கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.10,000/-



3. உத்தியோகப் பிராப்தி ஹோமம்: தொழில் முறையில் ஏற்படும் குறுக்கீடு தடைகளை சரிசெய்வற்க்கும் உத்தியோகத்தில் உயர்நிலை அடைவதற்க்கும் இந்த ஹோமம் செய்யப்படும்.  கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.10,000/-



4. நவக்கிரஹ ஹோமம்: குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட இந்த ஹோமம் செய்யப்படும்



5. கணபதி ஹோமம்: காரிய தடைகள் விலகி வெற்றி அடைய இந்த ஹோமம் செய்யப்படும்
கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.5,000/-



6.குபேர ஹோமம்: மகாலட்சுமி ஹோமம்: உங்கள் கஸ்டங்கள் தீர்ந்து தனவரவு ஏற்படவும் செல்வ வளம் பெருகவும் இந்த ஹோமம் செய்யப்படும். கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.10,000/-



7. மனை தோஷ நிவர்த்தி: மனையில் ஏற்படும் கஸ்டங்கள், ஏவல் பில்லி சூன்யம் நீங்கி சகல செளபாக்கியம் பெற சுதர்சன ஹோமம் சிறப்பாகச் செய்யப்படும்.
கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.12,000/-; 4 வேத பண்டிதர்கள் ரூ.18,000/-



8. ஆயுள் ஹோமம்: கிரக கோளாறுகளினாலும் முன் ஜென்ம கர்ம வினையாலும் நோய் நொடிகளும் ஆயுள் பங்கங்களும் ஏற்படும். இதற்கு சிறப்பான முறையில் ஆயுள் ஹோமம் செய்யப்படும். கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.20,000/-



9. திருமணம்: திருமண வயது வந்தும் திருமணம் கூடி வராமல் ஏற்படும் தடைகளுக்கும் செவ்வாய் தோஸ நிவர்த்திக்கும் முறையான பரிகாரம் சிறப்பாகச் செய்யப்படும்.
கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.15,000/-



10. மாங்கல்ய தோஷ பரிகாரம்: இருதார தோஷமுள்ள ஜாதகங்களுக்கும் திருமணத்திற்க்குப் பின் வாழ்வில் பிரச்சினை உள்ளவர்களுக்கும் செய்முறைப் பரிகாரம் சிறப்பாகச் செய்யப்படும். கட்டணம்: ரூ.5,000/-



11. புத்திர காமேஷ்டி யாகம்: குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாகவும், குழந்தைகள் வாழ்வு சிறப்படையவும் முறையான பரிகாரம் சிறப்பாகச் செய்யப்படும்.
கட்டணம்: 2 வேத பண்டிதர்கள் ரூ.20,000/-


மந்திர எண்ணிக்கை கட்டணங்கள்:

27000 மந்திரங்கள்  ரூ.25,000/-
54000 மந்திரங்கள்   ரூ.50,000/-
100000 மந்திரங்கள் ரூ.90,000/-


http://kalyaanam.co.in/Homam_list.html

நவாக்ஷரி சண்டிகா தேவி ஹோமமும்,
சூலினிதுர்க்கா ஹோமமும்,
திருஷ்டிதுர்க்கா ஹோமமும் 
காமோகர்ஷண ஹோமம்
வாஞ்சா கல்ப கணபதி ஹோமமும்,
புத்திர ப்ராப்தி ஹோமமும்,
சந்தான பரமேசுவர ஹோமமும்
சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும்
பதிகமன ஹோமமும், சதிகமன ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம்.

1 comment: