Sunday, August 11, 2013

சருமத்தைக் காக்கும் கற்ப மூலிகை..குப்பைமேனி..Naturally Remove Facial Hair in Women | பெண்களின் முக ரோமங்களை போக்கும் கஸ்தூரி மஞ்சள்!



உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம்.

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை சம அளவு மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.;


கஸ்தூரி மஞ்சளுக்கு முடி வளர்ச்சியை குறைக்கும் தன்மை உண்டு. எனவே நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் கஸ்தூரி மஞ்சளை வாங்கி அதனுடன் பாசிப்பயறு சேர்ந்து இரண்டையும் வெளியில் காயவைத்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும். தினசரி குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் இந்த பவுடரை போட்டு கழுவவும். உடனடியாக பலன் தராது. ஆனால் நாளடைவில் முடியை உதிரச்செய்து ரோமங்கள் வளர்வதை தடுக்கிறது. முகமும் அழகாவதோடு சருமமும் பாதுகாக்கப்படும்.

பாசிப் பயறு, மஞ்சள், பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும், முகத்தில் ரோமங்கள் வளராது.

சர்க்கரை கரைசல் 2 கப் சர்க்கரையில், கால் கப் எலுமிச்சை சாறு ஊற்றி அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை அகலமான பாத்திரத்தில் போட்டு மிதமாக சூடுபடுத்தவும். லேசாக நுரைகள் வந்த உடன் இறக்கிவைத்து லேசாக குளிர வைக்கவும். கைகளை நன்றாக கழுவிய பின்னர் இந்த கலவையை எடுத்து முகத்தில் ரோமம் உள்ள பகுதிகளில் நன்றாக திக்காக அப்ளை செய்யவும். (தோல் பொசுங்கிவிடும் என்ற அச்சம் வேண்டாம்) பின்னர் உலர்ந்த பின்னர் காட்டன் துணி கொண்டு அவற்றை துடைத்து எடுக்கவும். தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். முகமும் பொலிவடையும். 

No comments:

Post a Comment