Saturday, August 17, 2013

கரப்பான் பூச்சியை ஒழிப்பதற்கான வழிகள்!!!

வெள்ளரிக்காய்
கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டுமெனில், வெள்ளரிக்காயை பயன்படுத்தினால் வராமல் தடுக்கலாம். அதற்கு வெள்ளரிக்காயின் தோலை, ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தினால், கரப்பான் பூச்சிகள் வருவதை நிரந்தரமாக தடுக்கலாம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை நல்ல பூச்சி விரட்டியாக செயல்படும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தூவினால், இனிப்புக்காக வரும் கரப்பான் பூச்சிகள் சர்க்கரையுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து சாப்பிடுவதால், இறந்துவிடும்.

மாவு 
மாவு மிகச் சிறந்த கரப்பான் பூச்சி விரட்டி என்றால் அது மாவு தான். ஆம், எப்படியெனில் மாவு உருண்டையில் சிறிது போரிக் ஆசிட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைத்தால், கரப்பான் வருவதை தவிர்க்க முடியும்.

பிரியாணி இலை

சமையலில் மணத்திற்காக பயன்படுத்தும் பிரியாணி இலையை பொடி செய்து, அதன் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவினால், பிரியாணி இலையின் மணத்திற்கு கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால் கரப்பான் பூச்சி இறந்துவிடும்.

சோப்பு தண்ணீர்
சோப்பு தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் வராது. எனவே கரப்பான் பூச்சி வரும் இடங்களில் சோப்புத் தண்ணீரைத் தெளித்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதுடன், வந்தால் இறந்து விடும்.

No comments:

Post a Comment