Friday, July 21, 2017

குரு ஸ்தலங்களும்!.. வணங்க வேண்டிய ராசியினரும்!!...

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன்.

குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.

இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.

இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.

12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தலங்கள் : Jupiter temple

மேஷம் ⇢ திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி.

ரிஷபம் ⇢ காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.

மிதுனம் ⇢ சிதம்பரம் நடராஜர் தட்சிணாமூர்த்தி.

கடகம் ⇢ திருச்செந்தூர் முருகன் கோவில் தட்சிணாமூர்த்தி.

சிம்மம் ⇢ கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.

கன்னி ⇢ சங்கரன்கோவில் தட்சிணாமூர்த்தி.

துலாம் ⇢ மதுரை மீனாட்சி கோவில் தட்சிணாமூர்த்தி.

விருச்சிகம் ⇢ திருவிடைமருதூர் தட்சிணாமூர்த்தி (திருநெல்வேலி அருகில்).

தனுசு ⇢ ஆலங்குடி கோவில் தட்சிணாமூர்த்தி.

மகரம் ⇢ திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோவில் தட்சிணாமூர்த்தி.

கும்பம் ⇢ திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தட்சிணாமூர்த்தி.

மீனம் ⇢ ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தட்சிணாமூர்த்தி.
யுரனழை வடிவில் இதை பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்!

No comments:

Post a Comment