Friday, June 26, 2015

ஸ்டெப்ஸ் அகாடமி'யில் ஒரு மாத கால ஆங்கில பயிற்சி வகுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்டெப்ஸ் அகாடமியில், ஒரு மாதகால, பவர் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.இதுகுறித்து, "ஸ்டெப்ஸ் அகாடமி' நிர்வாகி செந்தில்வேலன் வெளியிட்டுள்ள அறிக்கை:பல ஆண்டுகளாக, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும், ஸ்டெப்ஸ் அகாடமி, புதுச்சேரியில் ஒரு மாத கால பவர் இங்கிலீஷ் பயிற்சி நடத்த உள்ளது. மூன்று நிலைகளாக அளிக்கப்பட இருக்கும் இந்த பயிற்சிக்கான சேர்க்கை, வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. பயிற்சி வகுப்பு, டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் நடைபெறும். கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், பணிபுரிவோர், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தொழில்முனைவோர், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும், இந்தப் பயிற்சியில் சேர்ந்து, சிறப்பான பலன் பெறலாம். அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெறும் விதத்தில், காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை, பகல் 11.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை, 7.30 மணி முதல் 9.00 மணி வரை, பல்வேறு நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன.சர்வதேச தரத்தில், பல நவீன பயிற்சி முறைகளைக் கொண்டு, அமெரிக்காவில் நேரடி பயிற்சி பெற்ற, ஆரோவில் சர்வதேச நகரத்தில் பயிற்சியாளராக பணியாற்றிய, ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் வெளிநாட்டினருக்கு பயிற்சி அளித்த ஆசிரியரால், இந்த வகுப்பு நடத்தப்படுவது சிறப்பம்சமாகும். ஆங்கிலம் பற்றிய பயத்தை விலக்கி, குறுகிய காலத்திலேயே அனைத்து தரப்பினரும் சிறப்பான ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் வெற்றிகரமான முன்னேற்றம் அடைய இந்த பயிற்சி பலருக்கு உதவியிருக்கிறது.இந்த ஆங்கிலப் பயிற்சியில், மேலும் பல நவீன முறைகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ஆங்கிலம் தெரியாமல் இருப்பவர்களும், அரைகுறை ஆங்கிலத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என வருத்தப்படுபவர்களுக்கும், எளிமையாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள இந்த பயிற்சி நல்ல வாய்ப்பாக அமையும்.
அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், சலுகை கட்டணத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் விபரங்கள் பெற, ஸ்டெப்ஸ், 31, நீடராஜப்பையர் வீதி- காந்தி வீதி சந்திப்பு, அமுதசுரபி அருகில், புதுச்சேரி 1 என்ற முகவரியிலோ, 98949 19412 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment