Wednesday, April 30, 2014

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் மேல்மலையனூர் - 604 204, விழுப்புரம் மாவட்டம்.

இத்தலத்து அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திறக்கும் நேரம்: காலை 7 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும். +91 - 4145 - 234 291.

கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

அங்காள பரமேஸ்வரி ஆதிபராசக்தியின் அம்சமாக இணைவதற்காக பார்வதி என்ற பெயரில் பர்வதராஜனின் மகளாக பிறந்தார். பின் பரமேஸ்வரனை திருமணம் செய்து கயிலையை அடைந்தாள்.

முன்பெல்லாம் சிவன், பிரம்மா இருவருக்குமே ஐந்து தலைதான் இருந்தது. திருமணத்தை நடத்திவைத்த பிரம்மா சிவனைப் பார்ப்பதற்காக கயிலை வந்தார். அப்போது ஏதோ குழப்பத்திலிருந்த பார்வதி ஐந்து தலையுடன் வந்தது சிவன் என கருதி, பிரம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். நிமிர்ந்து பார்த்த போது தான் வந்தது பிரம்மா என்பதை உணர்ந்து வருந்தினார். இருவருக்குமே ஐந்து தலை இருப்பதால் தானே இந்த குழப்பம். எனவே பிரம்மனின் ஒரு தலையை எடுத்துவிடும்படி சிவனிடம் பார்வதி வேண்டினாள்.

பார்வதியின் வேண்டுகோளின்படி சிவனும் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டது. சிவனின் பிரம்மஹத்தி தோஷம் போக்குவதற்காகவும், இந்த கலியுகத்தில் மக்களுக்கு அருள் பாலிப்பதற்காகவும் அன்னை பராசக்தி சிவசுயம்பு புற்று வடிவில் அங்காளபரமேஸ்வரியாக மேல்மலையனூரில் அவதாரம் செய்துள்ளார். இவர் வடக்கு நோக்கி அமர்ந்து நம்மை காத்து வருவது ஒர் சிறப்பம்சமாகும். வில்வமே இங்கு தல விருட்சமாகும்.

சரஸ்வதி சாபம் : தன் கணவனின் ஒரு தலை கிள்ளி எறியப்பட்டதை சரஸ்வதி அறிந்தார். உடனே கோபத்துடன் பார்வதியை பார்த்து சரஸ்வதி, ""எனது கணவர் பிரம்மனின் அகோர உருவத்திற்கு காரணமான நீயும் அகோரமாக போவாய்'' என்று சாபமிட்டார்.

இந்த சாபத்தின் பலனாகத்தான் மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காளபரமேஸ்வரி என்ற நாமத்தடன் அமர்ந்தாள். சிலகாலம் கழித்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி ஒரு மூதாட்டியின் வடிவம் பெற்று மீண்டும் மலையனூர் வந்து தங்கினார். அதன்பிறகு மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள்.ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தைக்கு ஏற்பட்ட கர்வத்தை போக்க, தாட்சாயினி அகோர உருவம் கொண்டு யாகத்தையும், அதை நடத்திய தந்தையையும் அழித்தாள். அத்துடன் அந்த யாகத்திலேயே விழுந்து தன் உடலை  அழித்துக் கொண்டாள். அப்படி உருவ மற்ற அவதாரமாக நின்ற அம்சமே அங்காளி சக்தி ஆகும்.

இதை அறிந்த சிவன் மிகுந்த கோபத்துடன் உருவமற்ற அங்காளியை தனது தோளில் சுமத்தி ஆங்காரமாக நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி கீழே விழுந்தது. அப்படி விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமானது. அந்த தண்டகாருண்யத்தின் ஒரு பகுதியே மேல்மலையனூர் ஆகும். தாட்சாயினி யாகத்தில் விழந்து சாம்பலான இடம் என்பதால் இக்கோயில் பிரசாதமாக சாம்பலைத்தான் தருகிறார்கள்.

தல விருட்சம்வில்வம்

Friday, April 25, 2014

காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில்

கிருஷ்ணகிரி; அருகேயுள்ள தேவசமுத்திரம் காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடன் தேங்காய் கட்டி சிறப்பு வழிபாடு. இது சக்தி வாய்ந்த தெய்வம் என்றனர். தேவசமுத்திரம் ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமைகளில் சிவப்புப் பையில் தேங்காயைக் கட்டி வழிபட்டால், நினைத்த காரியம் பலிக்கும் என்பார்கள்.

Monday, April 21, 2014

மாதவிடாய்க்கு இரண்டு நாளைக்கு முன்னதாக வரும் பருக்கள், ஒரு சில நேரம் நிலைத்துக் கறுத்துவிடுகின்றன, என்ன செய்யலாம்?

மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பிருந்து கண்டிப்பாக உங்கள் உணவில் பழங்கள், இளநீர், மோர் சேருங்கள். உளுந்து சாதம்- எள்ளுத் துவையல் சாப்பிடுங்கள். முடிந்தால் தினசரித் தலைக்குக் குளிப்பது மிக மிக நல்லது. அத்தோடு முகத்தைப் பாசிப்பயறு, கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு, வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சேர்த்து வீட்டில் தயாரிக்கும் நலுங்கு மாவு கொண்டு மாலையும் இரவும் கழுவுங்கள்.
அதையும் தாண்டி முகப்பரு வந்தால், திருநீற்றுப் பச்சிலை (துளசி வகை) சாறை அவ்விடத்தில் தடவிவாருங்கள். இப்போது அதில் இருந்து எடுக்கப்படும் basil oil-இல் செய்த மூலிகை கிரீம்களும் சந்தையில் கிடைக்கின்றன.

தாயும் ஆன இறைவன்

குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபடுவது பக்தர்களின் வாடிக்கை. வாழையடி வாழையாகக் குடும்பம் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில், வாழையைக் கருவறையில் வைத்துப் பூஜித்து, பின்பு அதைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.
சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாள் தனிச் சந்நிதியில் இருக்கிறாள். கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையைக் கட்டி அர்ச்சனை செய்து வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. 

டயட்டிங் இல்லாமல் எடையைக் குறைக்க முடியுமா? கேட்கும் திறன் குறை?

எனக்குக் கேட்கும் திறன் குறைவாக உள்ளது. குறிப்பாக எனது இடது காதைவிட, வலது காது குறைவாகவே கேட்கிறது. இப்பிரச்சினைக்கு அலோபதி மருத்துவ ஆலோசனை பெற்றபோது, எனது வலது காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு பலவீனமாக இருப்பதாகவும், இதற்கு மருந்து கிடையாது என்றும் கூறப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது? 
  நரம்பு பாதிக்கப்பட்டதால் ஒலிகளைக் கடத்தும் திறன் குறையும்பட்சத்தில், அதற்குத் தீர்வு தரும் மூலிகை மருந்துகளின் பயன் இதுவரை முழுமையாக ஆய்வு செய்து அறிவிக்கப்படவில்லை. காது, தலைப் பகுதியில் செய்யப்படும் வர்ம மருத்துவம் பயனளிக்கக் கூடும். தேர்ந்த வர்ம மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள். காது கேட்கும் திறன் குறைவுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அதிகமில்லை. சளி, நீர் அடைப்பதால் ஏற்படும் கேட்கும் திறன் குறைவுக்குச் சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், படிப்படியாகக் காது, தொண்டைக் குழலில் தங்கியுள்ள நீர்த்திவலைகள் குறைந்து கேட்கும் திறன் சீராகும். மூக்கடைப்புடன் கூடிய செவித்திறன் குறைவுக்கு, சீந்தில் எனும் தாவரத் தண்டின் உலர்ந்த பொடியை உள்மருந்தாக அரை டீ ஸ்பூன் அளவு வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிடுகையில், கபம் குறைந்து கேட்கும் திறன் சரியாகும். மருத்துவ வாய்ப்புகள் இல்லாத நரம்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனும்பட்சத்தில், காது கேட்கும் கருவியின் உதவியை நாடுவதில் தயக்கம் வேண்டாம். 

எனக்குச் 54 வயதாகிறது. உயரம் 5.2 அடி, எடை 65 கிலோ. எனக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், பி.பி. போன்ற எதுவும் இல்லை. ஆனால்,  டயட் இருப்பதும் சாத்தியமில்லை. என்னுடைய எடையைக் குறைக்க வேண்டும். எப்படிச் செய்வது?

முதல் விஷயம், பட்டினி இருந்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில நேரத்தில் வயோதிகத்தை நோக்கிய உங்கள் பயணத்தில், கால்சியம் முதலான சத்துக்குறைவைக் கொடுத்துவிடக்கூடும். தேர்ந்தெடுத்த, சரியான அளவிலான, அதிகப் பழங்கள் கீரைகள் கொண்ட லோ கிளைசிமிக் உணவுத் திட்டம் உங்களுக்கு வேண்டும். தினசரி நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் 45 நிமிடங்கள், கபாலபாதி பிராணாயாமம் 30 நிமிடம் செய்வது போன்றவை உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட சில யோகாசனங்களை மூச்சுப் பயிற்சியுடன் இணைத்து, தற்போது Dynamic yoga எனக் கற்றுத்தருகிறார்கள். இவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். குடம்புளி எனும் கோகம் புளி பற்றி உங்களுக்குத் தெரியுமா? பொதுவாகக் கேரளத்தில் மீன்கறி சமைக்க, இந்தப் புளியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் புளிதான் நாம் பண்டைக் காலத்தில் பயன்படுத்தியது என்று சொல்வோரும் உண்டு. இந்தப் புளியில் Hydroxy citrate என்ற சத்து உண்டு. உடல் எடையைக் குறைக்க இது உதவுவதாகப் பல ஆய்வுகள் சொன்னதால், இந்தக் குடம்புளிச் சத்து எடை குறைக்கும் பல மருந்துகளிலும், உணவு வகைகளிலும் பயன்படுகிறது. நீங்கள் இந்தப் புளியைக்கொண்டு சமைக்கலாம். அல்லது அது உள்ள மூலிகை மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்குப் பின் வாங்கிப் பயன்பெறலாம்.வெந்தயம், பூண்டு, கொள்ளு, சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். திட உணவு வரிசையில் தினசரி தினை, ராகி, கம்பு, சோளம், வரகரிசி ஆகியவற்றில் ஒன்று இடம்பெறட்டும். இட்லி-தோசையாக, சோறாக, சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்தத் தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைந்த அளவு சாப்பிட்டாலே பசியைப் போக்குவதுடன், அதிக ஊட்டமும் தரும் லோகிளைசிமிக் தன்மையுடைய உணவு வகைகள் இவை.

தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற முடியுமா?

எனக்கு வயது 21, பெண். எனக்கு கீழ் தாடையிலும் வயிற்றிலும் தேவையற்ற முடி வளர்கிறது. லேசர் சிகிச்சை, சித்தா, ஆயுர் வேதச் சிகிச்சைகள் எடுத்து விட்டேன். ஆனால், எந்தப் பலனும் இல்லை. ஹார்மோன் சமநிலையின்மை உறுதியாகியிருக் கிறது. இதற்கு என்ன தீர்வு?
பெயர் வெளியிட விரும்பவில்லை
தேவையற்ற முடிகளுக்கான முக்கியக் காரணம் ஹார்மோன்களில் ஏற்பட்ட லேசான மாறுதலாக இருக்கக் கூடும். சில நேரம் மாதவிடாய் சீரில்லாது இருக்கும், சினைப்பை நீர்க் கட்டிகளிலும் இப்பிரச்சினை வரக்கூடும். புறச் சிகிச்சையில் முடிகளை நீக்குவது என்பது தற்காலிக நிவாரணம்தான் கொடுக்கும்.
சோற்றுக் கற்றாழை எனும் வெகு சாதாரணமாக வளரும் மூலிகைச் செடிக்குச் சித்த மருத்துவ இலக்கியங்களில் குமரி என்று பெயர். இந்த மூலிகையின் உள்மடலில் இருக்கும் சோற்றுப் பகுதியை எடுத்து ஜூஸ் செய்து சாப்பிடுவதும், இச்சோற்றில் பனங் கருப்பட்டி, பூண்டு சேர்த்துக் கிளறிச் செய்யப்படும் லேகியத்தைச் சாப்பிடுவதும் ஹார்மோன் சீர்கேட்டைச் சரிசெய்ய உதவும்.
கூடுதலாகப் பாசிப் பயறு, மஞ்சள், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சீமை கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் நலுங்கு மாவைத் தேய்த்துக் குளிப்பதும் நல்லது.
முடியை அகற்றும் இன்னொரு மூலிகை வழியும் உண்டு. கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இரண்டும் ஒரு பங்கும்; அம்மான் பச்சரிசி எனும் எளிய மூலிகையை அதில் பாதி பங்கும் சேர்த்து நன்கு மை போல் அரைத்துக்கொண்டு, தேவையற்ற முடியுள்ள (மீசைப் பகுதியில்) போட்டுவைத்து அரை மணி நேரம் கழித்துக் கழுவிவந்தால் முடி நீங்கும். சிலருக்கு அம்மான் பச்சரிசி அரிப்பையும் தடிப்பையும் உண்டாக்கும் என்பதால், போட்டவுடன் அரிப்போ, தடிப்போ வருகிறதா எனச் சிறிய இடத்தில் தடவிப் பரிசோதித்த பின் பரவலாகப் பயன்படுத்த வேண்டும்.
May 13, 2014 

http://tamil.thehindu.com/general/health

தொல்லை தரும் சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கல்
நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு, இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்துப் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கத்தில் பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது.
காரணம் என்ன ?
சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர் வறட்சி, உப்பு, மசாலா மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.
கற்கள் என்ன செய்யும் ?
சிறுநீரகப் பாதையில் உருவாகும் கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்
சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போதும், சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறும் புறவழித் துவாரம்வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.
பரிசோதனைகள்
சிறுநீரகக் கல்லைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் போதும். கல் எந்த இடத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, எந்த வகையான கல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதா எனப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். இதைக் கொண்டு கல்லுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம்.
வகைகள்
கால்சியம் கற்கள், யூரிக் ஆசிட் கற்கள், சிஸ்டின் கற்கள், ஸ்டுரூவைட் கற்கள் என சிறுநீரகக் கற்கள் நான்கு வகைப்படும். இவற்றில் கால்சியம் கற்கள்தான் பெரும்பாலோருக்கு இருக்கும். இவை கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட்டாக இருக்கும். ஆக்சலேட் என்பது பசலைக் கீரை, முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை, முந்திரிப் பருப்பு, மீன், இறைச்சி, சாக்லேட் போன்ற பல உணவுகளில் அதிகமுள்ளது. இது தவிர நம் கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது.
சில உணவு வகைகள் வளர்சிதை மாற்றம் அடையும்போது தோன்றும் பிரச்சினைகளாலும் ஆக்சலேட்டின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாகின்றன. பாஸ்பேட் தாது முழுப் பயறுகள், எண்ணெய் வித்துகள், கொட்டைகள், கேரட், பால் போன்ற பொருள்களில் உள்ளது.
கீல் வாதப் பிரச்சினை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் உருவாகின்றன. மேலும் புரதச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளையும் இறைச்சி உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவோருக்கு இந்த வகைக் கற்கள் ஏற்படுவதுண்டு.
சிஸ்டின் கற்கள் பரம்பரை வழியாக வருவது. இவர்களுடைய சிறுநீரகங்கள் சிஸ்டின் எனும் அமினோ அமிலத்தைச் சிறுநீரில் ஒழுகவிடும். அப்போது அது சிறுநீரகப் பாதையில் படிகங்களாகப் படிந்து கற்களாக உருவாகிவிடும். ஸ்டுரூவைட் கற்கள், சிறுநீரகத்தில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவதன் காரணமாகத் தோன்றுகின்றன.
இங்கு கற்களின் வகைகளைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம், ஒரு முறை கல் உருவாகி, சிகிச்சை பெற்றுச் சரியானவர்களுக்கும் மீண்டும் மீண்டும் கல் உருவாவதற்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளது. எனவே, ஒருமுறை அகற்றிய கல்லின் வகையை அறிந்து, அது உருவாகத் துணைபுரியும் உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டால், மீண்டும் கல் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
சிகிச்சை முறைகள்
சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களைச் சரியான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பது, மருந்து, மாத்திரைகள் மூலமே கரைத்துவிடலாம். 1.5 செ.மீ. வரை அளவுள்ள கற்களை எந்தவித அறுவை சிகிச்சையும் இல்லாமல், ‘ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி' எனும் முறையில் வெளியிலிருந்தே ஒலி அலைகளைச் செலுத்தி, கல்லின் மீது அதிர்வை ஏற்படுத்தி உடைத்துவிடலாம்.
சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றில் உள்ள கற்களை ‘யூரிட்ரோஸ்கோப்பி' எனும் முறையில் வளையும் தன்மையுள்ள குழாய் போன்ற ஒரு கருவியைச் சிறுநீர்ப் புறவழி வழியாக உள்ளே செலுத்திக் கற்களை நசுக்கியும் லேசர் கொண்டு உடைத்தும் எடுத்துவிடலாம். ஆனால், சிறுநீரகத்தில் உள்ள கற்களை இந்த முறையில் எடுக்க முடியாது. 2 செ.மீ.க்கும் அதிகமான அளவில் உள்ள கற்களை ‘நெப்ரோ லித்தாட்டமி' எனும் முறையில் முதுகில் சிறிய துளை போட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடலாம்.
என்றாலும், மீண்டும் கல் உருவாவதைத் தடுக்கக் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம்.
வெயிலில் அலையாதீர்கள் !
பெரும்பாலும் வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.
வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு ‘சன் கிளாஸ்' அணிந்து கொள்ளலாம்
உப்பைக் குறைக்கவும் !
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்குத் தினமும் 2.5 கிராம் உப்பு (சோடியம் குளோரைடு) போதும். சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்கிறோம். தவிர, பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவு உணவு, பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
எதைச் சாப்பிடக் கூடாது?
காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. குளிர் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக் கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது.
உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக் கிழங்கு, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக் கரு, பால், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். இதுபோல், கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவை குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும். எனவேதான் இந்த எச்சரிக்கை!
தண்ணீர் அருந்துங்கள் !
வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதும்). பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. அதிக அளவில் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் நீர் அருந்துவதும் திரவ உணவை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.
எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?
சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையைக் குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும்.
General Physician gganesan95@gmail.com http://tamil.thehindu.com/general/health

Saturday, April 19, 2014

அடமான வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் புறநகர்ப் பகுதியில் ஒரு ஃபிளாட் வாங்கினார் ரமேஷ். அவருக்கு மும்பையில் நல்ல வேலை கிடைத்தது. பணியிட மாற்றம் காரணமாக ஃபிளாட்டை விற்றுவிட முடிவு செய்கிறார் ரமேஷ். வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த ஃபிளாட்டை வாங்கினார். வங்கிக்கு முறையாக இ.எம்.ஐ.யும் செலுத்திவருகிறார். தற்போது வீட்டை விற்க முடிவு செய்துவிட்டதால் அவரது நண்பர், அந்த ஃபிளாட்டை வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், அவர் இந்த வீட்டை விற்க முடியுமா? முடியும் என்றால், அதற்கான நடைமுறைகள் என்ன?
வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ நிச்சயமாக விற்கலாம். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் இல்லை. இதற்காகச் சில வழிமுறைகள் வறையறுக்கப்பட்டுள்ளன. வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வாங்குபவர், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
* வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதவிர வங்கிக்கு முன்னதாகக் கொடுக்கப்படுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலை எழுத்துப் பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
* இவை தவிர, சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.
* வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நண்பரிடம் கொடுக்க வேண்டும்.
* வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு, வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்க வேண்டும். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
* ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழு தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு நிறைவுற்றதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு அத்தாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
* வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், ஃபிளாட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அடமான வீட்டுக்கடன்
உங்கள் கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. இதன்படி மேற்கூறிய நடைமுறைகளில் முதல் மூன்று நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.
* தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
* வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.
* வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.
* கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.
* அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில் அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்பினருக்கும் நேரமும் சிரமமும் கணிசமாகக் குறையும்.

Five things to know while buying a car

Auto manufacturers are promising fabulous discounts for those planning to make a purchase. Go through these pointers before you avail of sops

New year, old model 

Car companies usually offer big discounts in December to clear their inventories before they hike prices and launch new models in January. If you buy now, your vehicle will bear the registration date of December 2013, and in a few days, it will be last year's model. This should not matter if you are planning to use the car for at least 7-8 years. However, if you plan to change the car in 3-4 years, the registration date will matter. A 2013 model will fetch a lower resale price four years down the line. Hence, it will be prudent to wait till January to buy it. Remember that a new car should be used for at least 8 years to get a full return on investment. Sell it earlier and you could lose out on its value.

Buy within your means 

The bigger the car, the fatter the discounts being offered. However, don't let the freebies entice you into making a purchase you can't afford. The golden rule is that the price of a car should not be more than 60% of your annual take-home income. If your take-home salary is 60,000 a month, don't think of buying a car priced at more than 4.32 lakh (60% of 7.2 lakh annual income ). Another time-tested principle is that the car loan EMI should not be more than 15% of your post-tax monthly income, or 40% of your investible surplus after all expenses and mortgage payments. Follow these rules diligently when you choose the car model and you won't regret the decision.

Consider the offers closely 

While you should not look a gift horse in the mouth, when it comes to freebies from car dealers, a closer look is necessary. They tend to inflate the value of free accessories to make the deal seem more attractive. This is why it's better to go for cash discounts rather than free accessories. Don't fall for the exchange offers as well. Most car dealers offer to buy your old car, but the price they quote is usually much lower than the one you would get elsewhere. A bit of market research will tell you roughly how much you can expect for your car, and you won't have to run around to find buyers. Avail of portals like Olx. in, which have made it easier to sell used stuff.

Transfer the no-claim bonus 

All car owners know that if you don't make a claim in a year, the next year's premium fetches a discount. However, few know that a no-claim bonus can be transferred to another vehicle, bringing down the insurance cost of a new car. You will have to submit the photocopies of the sale agreement, transfer documents, insurance note and the car's registration certificate, along with a letter requesting the policy's termination, to the insurer. The latter issues a no-claim certificate, which will get you the discount on the new car's insurance. If the insurance of the new car works out to 15,000, a 50% no-claim bonus will reduce it to 7,500. This certificate is valid for three years from the date of issuance, but you will have to make things clear to the buyer since it is assumed that the old car comes with insurance.

Petrol, diesel or CNG? 

Petrol is the costliest car fuel, but petrol cars are the cheapest. Diesel is inexpensive, but the diesel variants of cars are costlier by 75,000-1 lakh. They also require higher maintenance. Your choice should depend on how much you travel in a day. If you drive more than 80 km a day, go for a diesel car. You will be able to recover the extra cost within two years. This assumes that the gap between petrol and diesel prices will not narrow down further. CNG is a clean and cheaper fuel, but its availability can be an issue. Morever, the CNG cylinder takes up a lot of boot space.

Thursday, April 17, 2014

11 temples of Lord Hanuman that have magical powers

Hanumanghadi, Ayodhya : This temple is situated in Ayodhya. It is built on a hill that stand on the right side of the River Saray. To reach this temple, people need to climb 76 stairs. The idol of Lord Hanuman in this temple is of just 6 inches, which is always covered with flowers.

Balaji Hanuman Temple, Rajasthan: There is a place called Mehendipur in Rajasthan. Here on a huge rock, an idol of Lord Hanuman has been formed on its own. People worship this idol as Lord Hanuman. The feet of this idol of Lord Hanuman has a small pond, which is never short of water.

Saalasar Hanuman Temple, Rajasthan: There is a village in Rajasthan called Saalasar. The temple of Lord Hanuman has his idol, which has beard and moustache. People say that this idol was found by a farmer while he was working on his fields.  

Hanumandhara, Chitrakut Uttar Pradesh: There is a small town called Hanumandhara in Chitrakut. Here on a hill there is an idol of Lord Hanuman hanging. The waterfalls on this hill touch this idol of Lord Hanuman, which is why the name of this place has been kept Hanumandhara.

Sankatmochan Temple, Banaras, Uttar Pradesh: This is an old place associated with the name of Lord Hanuman and a huge temple of him is also made here. It is believed that saint Tulsidas had kept the idol of Lord Hanuman here.

Shri Hanuman Temple, Jamnagar, Gujarat: Along with Jamnagar, this temple too was established in 1540. It is believed that this temple has magical powers. The name of this temple is also mentioned in guinness book of world records.

Mahavir Hanuman Temple, Patna, Bihar: This temple is situated right in front of Patna junction. After Vaishno Devi in North India, this temple is visited by maximum devotees. The income of this temple is around one lakh everyday

Hanuman Mandir, Allahbad, UP: Situated right next to Allahbad fort, this Hanuman temple has the idol of lying Hanuman. This idol of Lord Hanuman is 20 feet long.

Shri Panchmukh Aanjanayer Swami Ji, Tamil Nadu: The Hanuman temple situated in Kumbkonam in Tamil Nadu had five-head idol of Lord Hanuman. This temple is believed to be the ultimate savior of mankind, which not just solves people’s problems, but also protects them all their lives.

Shri Kashtabhanjan Hanuman Temple, Gujarat: This temple is considered to be the most important and known temples of Gujarat.


Exploring the Spiritual and Divine Dimensions

Published: 09th April 2014 07:36 AM























Now Suta Muni tells us a great secret. When the ritual is complete in Naimisha Aranya, Devi says, “May my Chaitanya Shakti’s Shakti always be with you.” Saying this she gives all the Sages a piece of red cloth as Her Prasada. In the kali yuga, every two days, our level of Chaitanya Shakti is coming down. That is why we feel tired and depleted of energy more quickly as days pass. So, from today all of you should keep a red kerchief or piece of cloth with a little zari (gold thread work) with you. This should be bright cherry red and not a maroonish shade. This colour is also called ‘post office red’. The kerchief can be any material like silk, cotton, synthetic fabrics, satin etc. It is enough if it is even five inches by five inches in size. Men should keep it in their right pockets and women should keep it in their hand bags. When men wear veshti or dhoti, they can tuck it into their waist. Every day touch this cloth once reverently and say, ‘Om Lalitha Tripurasundaryei Namaha’. Get  this by Durgashtami at the latest. All kinds of Shakti will flow to you from this–Viveka Shakti, Iccha Shakti, Jnana Shakti, Kriya Shakti, Jagrata Shakti, Shravana Shakti (power of discrimination, will power, comprehension power, power of action, power of awareness, art of listening)…the list is endless. Let us all chant mother’s mantra without fail tonight. It is our offering of  gratitude to Her for all the grace that she is constantly showering upon us. When you chant her name with devotion and dedication, but without any expectations, you will experience a miracle in the material, divine and spiritual realms of you lives tomorrow. May all of you be rejuvenated, recharged, re-infused and revitalised by the chaitanya of the divine mother. May a feeling of physical, mental and spiritual wellbeing overflow from you. May all beings be happy. Jai Mata. Om Tat Sat. 
Extract from ‘The book of direct truths, subtle truths and the mystical truths of Devi Mahatmyam’ by Shri Shri Nimishananda

http://lifepositive.com/from-life-positive-to-life-divine/

16 Secrets of Kamakhya Temple no one knows

Kamakhya Temple, Assam is one among the 52 shakti peeths of India. Kamakhya Temple is situated at the top of Ninanchal Hill (800 feet above sea level) in the Western part of Guwahati city. There is no image of Shakti here. Witin a corner of the cave in the temple, there is sculptored image of the yoni of the goddess, which is the object of reverence. A natural spring keeps the stone moist. Other temples on the Ninanchal Hill include those of Tara, Bhairavi, Bhuvaneshwari and Ghantakarna. 

The temple consists of three major chambers. The western chamber is large and rectangular and is not used by general pilgrims for worship. The middle chamber is a square with a small idol of the Goddess, a later addition. The walls of this chamber contain sculpted images of Nara Narayana, related inscriptions and other Gods.

The middle chamber leads to the sanctum of the temple in the form of a cave, which consists of no image, but a natural underground spring that flows through a yoni-shaped cleft in the bedrock.

Sati married Lord Shiva against the wish of her father, king Daksha. Once king Daksha was having a yagna, but he didn’t invite Sati and Shiva. Sati was very upset, but she still went to her father’s palace. When she reached there, her father insulted her and Shiva. Sati was unable to bear this disrespect for her husband Shiva, so she jumped in the yagna fire and killed herself.

When Lord Shiva came to know about this, he got very angry. Enraged Shiva wondered while holding the dead body of Sati in his arms. He started the dance of destruction of the universe. Lord Vishu in order to save the universe, cut the body of Sati into pieces with his Sudarshan chakra. Body parts of Sati fell at different places and these places are known as shakti peeths. 
Story about the stair case of the temple

There was a demon Naraka who fell in love with Goddess Kamakhya and wanted to marry her. Goddess put a condition that if he would be able to build a staircase from the bottom of the Ninanchal Hill to the temple within one night, then she would surely marry him. 

Naraka took it as a challenge and tried all with his might to do this marathon task. He was almost about to accomplish the job when the Devi, panic-stricken as she was to see this, played a trick on him. She strangled a cock and made it crow untimely to give the impression of dawn to Naraka. Duped by the trick, Naraka thought it was a futile job and left it half way through. Later he chased the cock and killed it in a place which is now known as Kukurakata, situated in the district of Darrang. The incomplete staircase is known as Mekhelauja path. 

Saturday, April 12, 2014

Home Remedies For Dark Neck

natural method for removing skin discoloration on neck is exfoliation. Exfoliation is best for breaking up the pigmented cells to allow them to fade. Exfoliate your neck skin twice a week with yogurt and crushed walnuts. This natural homemade exfoliating scrub will remove dirt and take away the outer layer of skin to whiten the dark skin around your neck.

Wear a sunscreen on neck before going out in sun.This will ensure that you don't damage your    skin more during treatment or after it.Also wear a protective cloth on it white colour will be best(note-white reflects heat and light max).

You can also try a natural scrub made of baking soda and water for removing hyper pigmentation on neck. The mix should be paste-like. As baking soda works as a natural skin exfoliant, it will slowly remove dark discolored patches on the neck and back. This will provide a brighter skin tone on your discolored neck.

How to Get Rid of Dark Neck

1. Make Daily Care Routine to Get Rid of Dark Neck

It is very essential to cleanse and exfoliate neck skin every day just as we do with our faces. When we neglect neck while pampering face, this results in patchy dark skin. So follow this daily care routine for getting rid of dark neck.
  • Take milk and rub your neck with it. Milk is an excellent cleanser and a toner too.
  • After cleansing, use a scrub, preferably natural one, to exfoliate the skin around your neck.
  • You may mix olive oil with sugar and rub gently to scrub your neck.
  • Sometimes use another scrub having bleaching agent such as lemon juice. You will find many scrubs here in this article that you can use for daily exfoliation.
  • After exfoliating, wash off with water and apply some moisturizer.
  • Whenever you go out, apply sunscreen to your neck along with your face. This will avoid pigmentation.
  • Never step out in sun when you apply lemon juice on your skin. This will make your neck darker than before.
If you follow the above neck care regime daily, you will begin seeing result in a two week’s time. However, do not stop and continue cleansing, scrubbing and moisturizing your skin.
Here are some easy tips and tricks, you can call them home remedies too, for whitening your dark neck.

1. Cucumber
Cucumber cleanses the skin and help to soothe the skin and bring back the glow of the skin. Scrubbing the neck with cucumber removes the dead skin cells.
• Apply grated cucumber or cucumber juice on the dark neck.
• Gently scrub the neck for a few minutes
• Wash it off after 15 minutes

2. Lemon Juice
The citric acid present in the lemon juice is a natural bleaching agent. If you have sensitive skin, you will have to use diluted lemon juice for this purpose.
• Apply lemon juice to the dark skin of the neck using cotton ball
• Leave it there for 10-20 minutes and wash it off with water.
• Do not expose the skin to sunlight after applying lemon juice.

3. Honey And Tomato
Honey helps to lighten the skin and it is a natural moisturizer. Tomato and lemon has acids in them which will help to lighten the dark color.
• Mix honey , tomato juice and lemon juice and apply it to the affected areas
• Leave the mix on the skin for 20 minutes and wash it off.
• Repeat the remedy daily to get faster result

4. Almonds
Almonds contain vitamins which are essential for the skin health. The oil also acts as a moisturizer.
• Make a paste of powdered almond and milk powder with honey
• Apply this paste on the sides and back of the neck, where the skin is dark
• Leave the mixture on the skin for 30 minutes and wash off with water.

5. Olive Oil
Olive oil helps to moisturize the skin and to nourish the skin.
• Mix olive oil and lemon juice and apply it on the dark neck areas
• Keep the mix on the skin for at least 20 minutes to reduce the darkness of the skin.

6. Aloe Vera
Aloe Vera is a natural skin lightener and it also moisturizes the skin
• Apply pure gel of Aloe Vera directly on the neck
• Wash your neck after 20 minutes.
• Repeat the remedy daily to get faster result

7. Potato
The potato has bleaching abilities and this will lighten the skin.
• Take grated potato or potato juice and apply it on your neck
• Leave it there for 15 minutes and clean the neck using water
• You can also apply a mix of lime juice and potato juice to get faster results

8. Walnut
Walnut acts as a scrubber and removes the dead cells on the skin reducing the dark color. Milk cleanses and moisturizes the skin. The vitamins and zinc present in the walnut nourishes the skin
• Make a paste of walnut with milk
• Apply this paste on your dark neck and slightly scrub the area
• After ten minutes wash the area with cold water

9. Yoghurt
Yoghurt helps to cleanse the skin and the acid present in it lightens the skin. It also helps to moisturize the skin.
• Apply a yoghurt to the affected area and leave for 10-15 minutes
• You can apply a mixture of yoghurt and lime juice to get faster result.

10. Turmeric
Turmeric has antiseptic properties and is used for treating various skin problems. You can use turmeric in different ways to get rid of the dark neck problem.
• Mix turmeric powder and milk and apply it on the affected areas for at least 15 minutes.
• You can replace milk with yoghurt or honey according to your convenience.

 Some Of The Best Home Remedies To Get Rid Of Dark Neck

11. Orange Peel
Orange peel helps to cleanse the skin and to bleach the skin. This will reduce the dark skin considerably. This is one of the best remedies for dark neck.
• Mix the dried orange peel powder with milk
• Apply it on the neck for 20 minutes and wash it with cool water.

12. Chickpea Flour
Chickpea flour is an excellent scrubber which removes the dead skin and exposes the fresh skin.
• Take one teaspoon of chickpea flour and add a pinch of turmeric to it
• Make a paste of this with water and apply it on the neck
• Allow it to dry for 30 minutes and wash it off with cold water

13. Baking Soda
Baking soda cleanses the skin and reduces the dark shade.
• Make a paste of baking soda and warm water
• Apply it on the neck and allow it to dry
• Wash it off after some time

14. Vitamin E Oil
Vitamin E oil nourishes the skin and moisturizes the skin.
• Apply vitamin E oil to your dark neck and massage the area lightly, before going to bed at night
• Next day morning wash the area

15. Sandalwood Powder
Sandalwood helps to soothe the skin and helps to regain the glow.
• Make a paste of sandal wood and rose water
• Apply it on the affected area and allow it to dry
• Wash it off with cool water

16. Sunscreen
Using sunscreen creams or lotions helps to prevent and reduce the dark neck problem.
• Use sunscreens with SPF at least 30 to protect your neck while going outside.

17. Mint Leaves
Mint leaves have antiseptic properties and also cleanses the skin.
• You can apply the paste of mint leaves to the neck
• You can also make a paste of neem leaves and turmeric and apply it, to get rid of dark neck.
• Remember to leave the paste for at least 15 minutes

18. Cocoa Butter
Cocoa butter helps to moisturize the skin and reduce the dark appearance of the neck. Milk cleanses the skin and also lightens the skin.
• Mix cocoa butter, milk and honey and apply it on the affected areas of the neck
• Use this remedy at least twice a day for seven days to feel the difference

19. Oatmeal
Oatmeal can be used in different ways to remove the dark neck. Oatmeal acts as a scrub and helps in the exfoliation of the skin.
• Mix oatmeal powder with milk and apply on the dark skin
• Apply oatmeal mixed with honey on the affected area
• Mix some curd or yoghurt with oatmeal powder and apply it
• Keep the mixture applied on the neck for 20-30 minutes and wash it off

20. Fruit Masks
Fruit masks provide nourishment to the skin and help to cleanse the skin and reduce the dark pigmentation.
• Mash fruits like banana, orange, avocado separately or make a mix of all these fruits
• Apply the fruit mask to the neck area and leave it for half an hour.
• Add a few drops of lemon juice to the mask mixture to make it more effective.

Are you a person with dark neck? Are you trying to avoid embarrassment caused by a dark neck by wearing high collared clothing? Are you looking for low expensive methods to treat the problem of dark skin on your neck? Then you can try some of the home remedies given above to get rid of the problems effectively. You can try out the remedies and find out which one will be effective for you. Once you find the effective remedy stick with it to get the best results. It requires some time to get rid of dark neck. Hence the regular use of the appropriate home remedy is necessary to see the difference.

கொழுப்பைக் குறைக்கும் பயறு

ஊட்டம் தரும் வேகாத உணவுகள்!

‘துரித உணவு' (பாஸ்ட் புட்) நிலைபெற்றுவிட்ட இக்காலத்தில், வேகாத உணவைப் பற்றிப் பலரும் சிந்திப்பது உடலுக்குத் தரும் நன்மைகளைக் கருதித்தான்.
உணவுப் பொருட்களை வேக வைத்து உண்பதால், அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அழிந்துவிடும் என்று தெரிந்திருந்தாலும், உண்ட உணவு நன்றாகச் செரிப்பதற்காகச் சமைத்து உண்பது வழக்கமாகிவிட்டது. எனினும், கீழ்க்காணும் உணவு வகைகளை வேக வைக்காமல் தயாரித்து உண்பதால் ஊட்டச்சத்துகளை முழுமையாகப் பெறலாம்.
வாழைத்தண்டு கூட்டு
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டோடு, ஒரு கப் தயிர் சேர்த்து, தேங்காய் துருவல், நிலக்கடலை, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, பச்சையாகவே சாப்பிடலாம். நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எடை குறையும். பொட்டா சியம் இருப்பதால் வயிற்று வலியையும் குறைக் கும். அசிடிட்டி, அல்சருக்கும் இது மருந்து.
கேரட் - பயறு கூட்டு
முழு பச்சைப் பயறை நீரில் முந்தைய நாள் இரவு ஊறவைத்து , முளைகட்டியதும் அதனுடன் கேரட் துருவலைச் சேர்த்து, சிறிது உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து உண்ணலாம். புரதச்சத்து மிகுந்தது என்பதால் உடலுக்கு நல்ல ஆற்றலைத் தரும், முதுமையடைவதைக் குறைக்கும். கொழுப்புச்சத்து குறைவு என்பதால் இதயத்துக்கு நல்லது. நார்ச்சத்து இருப்பதால், செரிமானமும் எளிதாகும். கண்களுக்கு மட்டுமில்லாமல், தோலுக்கும் இது நல்லது.
புடலங்காய் கூட்டு
இளசான புடலங்காயைப் பொடியாக நறுக்கி, அதனுடன் நிலக்கடலை, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சிறிதளவு கலந்து உண்ண, மிகவும் ருசியாக இருக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது காய்ச்சலைக் குறைக்கும். இதயத்துக்கும் நல்லது. மஞ்சள் காமாலையைக் குறைக்கவும் உதவும்.
பூசணி ஜூஸ்
சாம்பல் பூசணிக்காயைத் துருவி , மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அந்தச் சாற்றுடன் சிறிது மிளகுத் தூள், சிறிது உப்பு சேர்த்து அருந்தலாம். குளிரூட்டும் தன்மையுள்ள இச்சாற்றினால் சளி பிடிக்கக் கூடும். அதைத் தவிர்க்க, சிறிது தேன் கலந்து அருந்தவேண்டும். இது உடலை இளைக்க வைக்கும் தன்மைகொண்டது.
- கிரிஜா நந்தகோபால், திருச்சி.

கொழுப்பைக் குறைக்கும் பயறு


உடலுக்குச் சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனியிடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம்.
சோளம்: உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
கோதுமை: நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.
வரகு: உடல் எடையை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளைத் தடுக்கும்.
கொண்டைக்கடலை: பக்கவாதநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.
சோயாபீன்ஸ் : அனைத்து வைட்டமின் பி வகைகளும் உள்ளன. இவை இதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிக புரோட்டின், நார்ச்சத்து உள்ளதால் சோர்வடைந்த இதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. இயற்கையான ஆண்டி ஆகிசிடென்ட் நிறைந்தது. அதிக மினரல்கள் உள்ளன. உறுதியான எலும்புகள் உருவாகும். மெனோபாஸ் பிரச்சினைகளைத் தடுக்கும். உடம்பில் கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த குழாய்களுக்குள் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
பச்சைபயறு: முளைகட்டிய பயிறு உடல் எடையை குறைக்கும். நோயாளிகளுக்கும் உகந்தது.
உளுந்து: ஆண்மையைப் பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கைச் சீராக்கும்
தட்டைப்பயறு: உடலில் புதிய செல்களை உருவாக்கத் தேவையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலில் அதிகக் கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு உடல் குண்டாகாமால் இருக்க உதவுகிறது.
கொள்ளு: கொழுப்பைக் கரைப்பதில் முதலிடம், உடலில் இருக்கும் தேவையற்ற தண்ணீரை எடுத்துவிடும். இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவிடும். வளரும் குழந்தைகள், உடற்பயிற்சி செய்வோருக்கு மிகவும் உகந்தது.
மூலநோய்க்கும், ரூமாட்டிசம் பிரச்சினைகளுக்கும், காய்ச்சலைக் கட்டுபடுத்த, இருமல் மற்றும் சளியை விரட்ட என கொள்ளு குணமாக்கும் பட்டியல் நீள்கிறது. வயிற்றுப்புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம்.
- சரஸ்வதி பஞ்சு, திருச்சி - 21.
ஆஸ்துமாவைத் தடுக்க-கேரட், பப்பாளி
சிறுநீரகக் கல் உருவாகாமல் இருக்க-வாழைத்தண்டு, மாதுளை
ரத்த அழுத்தம் சீராக இருக்க-எலுமிச்சை, திராட்சை, கேரட்
ரத்த அழுத்தக் குறைவு ஏற்படாமல் தடுக்-பச்சைமிளகாய், பூண்டு
ரத்தத்தை சுத்திகரிக்க-தக்காளி
சளித்தொல்லையில் இருந்து விடுபட-நெல்லிக்காய்
வயிற்றுப்புண் உருவாகாமல் இருக்க-கேரட், மணத்தக்காளிக் கீரை, தேங்காய்ப்பால்
ரத்தசோகையைக் குறைக்க-பேரீச்சம் பழம், கிஸ்மிஸ், கீரை, மாதுளை
பித்தக்கல்லைத் தடுக்க-பீட்ரூட், வெள்ளரிக்காய்
காய்ச்சல் உண்டாவதைத் தடுக்க-திராட்சை, மாதுளை
வாயுத்தொல்லையில் இருந்து விடுபட-தேங்காய்ப்பால், கேரட்
இதய நோய் இல்லாமல் போக-அன்னாசிப்பழம், தேன்
மஞ்சள் காமாலை வந்தால்-கீழாநெல்லி
கல்லீரல் நோய்க்கு-காரட், பீட்ரூட், அன்னாசி, வெள்ளரி.
- ஐ.எஸ்.ரமணி பூந்தமல்லி, சென்னை