Friday, May 20, 2016

தும்பைப் பூ ரசம்


தேவை...
தும்பைப் பூ ஒரு கைப்பிடியளவு
எலுமிச்சம்பழம் - 2
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள், உப்பு - சிறிதளவு
தாளிக்க
நெய் ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிதளவு
வறுத்துப் பொடிக்க
மிளகு, சீரகம், கடலைப் பருப்பு தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிதளவு
எப்படிச் செய்வது?
எலுமிச்சைச் சாற்றில் மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி, நசுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேருங்கள். வாணலியில் நெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் தும்பைப் பூவைச் சேருங்கள். பிறகு வறுத்துப் பொடித்த பொடியைச் சேர்த்துக் கிளறி, கரைத்துவைத்துள்ள கரைசலை ஊற்றுங்கள். நுரைத்து கொதி வரும்போது மல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள். இந்த ரசம் உடல் வலிமையைப் பெருக்கும். சீதக் கழிச்சல், மூலக் கடுப்புக்கு நிவாரணம் தரும்.

No comments:

Post a Comment