Friday, October 11, 2013

அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

ஓசைகொடுத்த நாயகி, 
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா- 609 110, சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம்.+91- 4364-274 175.காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.கோயிலின் எதிரில் திருக்குளம் ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசன. வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.  மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.பேசும் சக்தி வந்தவுடன் தங்கத்தாலான தாளத்தை வாங்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள்.திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீதாளபுரீஸ்வரர்  பஞ்சரத்தினம் 

பீம ரூபி மஹா ருத்ரா வஜ்ர ஹனுமான் மாருதி
வனாரி அஞ்சனி சுதா ராம தூதா பிரபஞ்சனா
மஹாபலி ப்ராணதாதா சகலா ஊடவீ பலே
செளக்ய காரி சோக கர்தா தூர்த்த வைஷ்ணவ காயகா
தீன நாதா ஹரி ரூபா சுந்தரா ஜக தந்ரா
பாதாள தேவதா ஹந்யா பவ்ய சிந்தூர லேபனா

No comments:

Post a Comment