Friday, July 10, 2015

கர்ப்ப கால உறவு பற்றி சில ஆலோசனை


கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா ,வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. கர்ப்ப காலத்தின் போது பெரும்பாலான தம்பதியர் மருத்துவரிடம் தயங்கி தயங்கி கேட்கும் கேள்விகளில் ஒன்று உண்டு. அது உறவு கொள்வது நல்லதா என்பதுதான். பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கர்ப்பகால உறவு நல்லது

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம். 

இதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

உறுதித்தன்மை குறைவு

ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு எதுவும் கூடாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

எச்சரிக்கையான உடலுறவு அவசியம்

முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முன்பு உறவு கொண்ட மாதிரி முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. 

பெண்களின் வசதிகளுக்கேற்ப மிகவும் வசதியான நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது ஏனெனில், அந்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்

பாதுகாப்பு அவசியம்

சில பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள அச்சப்படுவார்கள். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உறவில் ஈடுபடலாம். உறவிற்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். 

கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். 

மருத்துவரின் ஆலோசனை

8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.

எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும் http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=1058&Cat=501

30 வயதுக்கு மேல் குழந்தை பெறுவோர் கவனத்துக்கு...

குறைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுப்பதே எல்லா பெற்றோரின் விருப்பமும். ஆனாலும், பிறப்பதற்கு முன்பே குழந்தைக்கு ஏதேனும் குறைகள் இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள எளிமையான வழிகள் இருந்தாலும் அவற்றை அலட்சியப்படுத்துகிறவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாரபட்சமே இருப்பதில்லை. ‘30 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கும், முதல் முறை கருத்தரிப்பவர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு மிக மிக அவசியம்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதம்.

‘‘30 வயதுக்கு மேல் குழந்தை பெறுகிற பெண்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது. தாமதமான குழந்தைப் பேறு தருகிற சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால், குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது அதைவிட சிக்கல். முதல் முறை கர்ப்பம் தரிக்கிறவர்களும், 30 வயதுக்கு மேல் கர்ப்பமாகிறவர்களும் கர்ப்பத்தின் 3வது மாதத்தில் என்.டி. ஸ்கேன் (Nuchal Translucency scan) செய்வதன் மூலம் கருவிலுள்ள குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட பிறவிக் கோளாறுகள்  உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கலாம். 

குணப்படுத்தவே முடியாத பிரச்னைகள் என்றால் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்தக் கருவைக் கலைத்து விடுவார்கள் மருத்துவர்கள். மாதங்கள் கடந்துவிட்டால், கருவைக் கலைப்பதும் சிரமம். குறையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதும் பிரச்னை. இந்த என்.டி. ஸ்கேனை யார் வேண்டுமா னாலும் செய்துவிட முடியாது. அதில் திறமை உள்ள சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து மீண்டும் 5வது மாதம் ‘டார்கெட்’ என்கிற இன்னொரு சோதனையையும் கர்ப்பிணிகள் மேற்கொள்ள வேண்டும். 

5வது மாதத்துக்குள் குழந்தையின் எல்லா உறுப்புகளும் உருவாகி முடிந்திருக்கும். குறிப்பாக சிறுநீர் பை. இந்த டார்கெட் சோதனையின் மூலம் அதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்குகின்றனவா என்பதையும் அறிந்து கொள்ளலாம். சில குழந்தைகளுக்குக் கால்கள் நேராக இல்லாமல் வளைந்திருக்கலாம். ஒரு கையே இல்லாமலிருக்கலாம். இதயத்தில் ஓட்டை இருக்கலாம். குடலில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம். இந்தப் பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், சிலவற்றுக்கு குழந்தை பிறந்த உடனேயே அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழு. 

உதாரணத்துக்கு பாத வளைவுப் பிரச்னையான சிஜிணிக்ஷிக்கு குழந்தை பிறந்ததும் ஆபரேஷன் செய்தோ, மாவுக்கட்டு போட்டோ சரி செய்யப்படும். இந்தப் பிரச்னைக்காக கருவைக் கலைக்க வேண்டியிருக்காது. இதயத்தில் சின்ன துளை இருந்தால், அதையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள் ஆபரேஷன் மூலம் அடைக்க முடியும். முதுகுத்தண்டு வளைந்தோ, சரியாக உருவாகாமலோ இருப்பது, மெனிங்கோசீல் எனப்படுகிற முதுகுத்தண்டு பிரச்னை, கிட்னி இல்லாத நிலை, நுரையீரல் சரியாக உருவாகாதது, வயிறு ஊதி இருத்தல், மூளையில் நீர் கோர்த்திருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால் அந்தக் குழந்தையைப் பிழைக்க வைப்பது சிரமம். அந்த நிலையில் கருவைக் கலைப்பதுதான் தீர்வு...’’


http://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/20-ways-make-your-unborn-baby-healthy-003282.html

http://tamil.boldsky.com/health/wellness/2015/it-is-possible-women-pee-like-men-008120.html#slide43730
http://tamil.boldsky.com/health/wellness/2015/seven-scientific-reasons-why-sleeping-naked-is-really-good-007799.html#slide41296


No comments:

Post a Comment