Monday, December 24, 2018

Poori jeganathan Mandir special

*”பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ஆச்சர்யமூட்டும் ரகசியங்கள்.”*

*அறிவியல் கூட இங்கு நடக்கும் விசித்திரமான சம்பவங்களுக்கு பதில் கூற தடுமாறுகிறது.*

கோவிலில் இருக்கும் மடப்பள்ளி உலகிலேயே பெரிய மடப்பள்ளியாக விளங்குகிறது. இந்த கோவிலில் சமைக்கும் பிரசாதம் எப்போதும் ஒரே அளவில் தான்  இருக்கும் . 

ஆனால், பக்தர்களின்   வருகை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை; அது போல மீதமும் ஆவதில்லை . *இந்த அதிசயம் யாருக்கும் விளங்கவில்லை*.

இந்த கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் உங்களை நோக்கி பார்ப்பது போலவே காட்சி அளிக்கும். *அப்படி ஏன் தெரிகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது*.

அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும். *உயரம் 214 அடி*.  அபரிமிதமான  மழை என்றாலும், குளிர் என்றாலும், வெயில் என்றாலும், மூன்று பேர் கொண்ட குழு எவ்வித கஷ்டமும் இன்றி உச்சிக்குச் சென்று தினமும் கொடி ஏற்றுவர். 

இது சாதரணக்கொடி அல்ல, ஏன் என்றால் இந்த கொடியானது காற்று எந்த பக்கம் வீசுகிறதோ, அதற்கு எதிர் திசையில் பறக்கும். *அது ஏன் என்று இன்று வரை மிகப்பெரிய விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை*.

இந்த ஜகன்நாதர் கோபுரத்தின் நிழல் எந்த நேரத்திலும் தரையில் படுவதில்லை. 

இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மேல் விமானங்களோ, பறவைகளோ பறப்பதில்லை. 

சாதாரணமாக பறவைகள் கோவில் கோபுரங்களில் கூடு கட்டி வாழும், பல பறவைகள் கோவில் கோபுரத்தில் அமரும் , ஆனால் இந்த கோவிலில் எதிர்மறையாக ஒரு பறவையை கூட பார்க்க முடியாது. *அப்படி ஏன் பறவைகள் கோவில் பகுதியில் பறப்பதில்லை என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்*.

கடற்கரையை ஒட்டி ஜெகந்நாதர் இருந்தாலும், கோவிலின் முதல் படியை தாண்டினால் கொஞ்சமும் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை.

மடப்பள்ளியில் இன்று வரை விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளை கொண்டு தான் சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே தீ மூட்டுகிறார்கள். 

*இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும் மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும் வேகும். இது எப்படி சாத்தியம் என்றால் பதில் அந்த ஜகன்னதருக்கு தான் தெரியும்*.
as received through whats app

No comments:

Post a Comment