Tuesday, August 23, 2016

சகல தோஷங்களையும் தீர்த்து சுகவாழ்வு தரும் திருமங்கலக்குடி சூரியனார்

சகல தோஷங்களையும் தீர்த்து சுகவாழ்வு தரும் திருமங்கலக்குடி சூரியனார் Jun 04, 2016
   சூரியனார் கோவில் இந்தியாவில் இரண்டு இடத்தில்தான் உள்ளது வடக்கே கோனார்க் தெற்கே இந்த சூரியனார் கோவில், கோனாறுக்கில் உருவ வழிபாடு கிடையாது ஆனால் இந்த சூரியனார் கோவில் உருவ வழிப்பாடு உண்டு தஞ்சாவுர் மாவட்டம் கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடியில் நவகிரக தலங்களில் சறியதலம் முதல் தலமாக விளங்குகிறது இத்தலத்தில் சூரியனார் 2 மனைவிகளுடன் திருமனகோலத்தில் காட்சி தருவதுடன் உக்கிரகம் இல்லாமல் சான்த்தமாக பக்தார்கள் தோஷங்கள் நீக்கி சுகவாழ்வு தருபவராக இத்தலத்தில் சூரியன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார் இவரை வணங்கினால் தேஷம் தீரும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை.
   சனி, கேது, சூரியன், வியாழன் போன்ற கிரகங்கள் ஊழ்வினையால் தீய பலனை நமக்கு தருகையில் அவர்களின் அருளைப் பெற்று, அவர்கள் தரும் துயரங்களை சற்று தணிப்பதற்கும் கிரகங்களினால் வரும் தீய பலன்களை தாங்கும் உடலும் உள்ளமும் பெறவும் பெரியேர்கள் உருவாக்கிய பற்பல சேஷத்திரங்களுள் தலையானது என முனிவர்களால் பேசப்படுவதுதான் இந்த சூரியனார் கோயில்.

    எப்போதுமே சிவபெருமான் பார்வதி, கணபதி மற்றும் முருகப்பெருமானை கும்பிட்டு விட்டுத்தான் நவகிரக தேவர்களை தொழவேண்டும். நாம் செய்த பாவங்களோ நமது தாய்-தந்தை மற்றும் முன்னோர் செய்த பாவங்களும் கூட நம்மைத் தொடும். பித்ருதோஷம் என்பது நளமகாரஜவைப் பற்றிய சனி தோஷத்தைவிட கொடுமையானது. யாரையேனும் கொல்வதால் வரக்கூடிய பிரம்மஹத்தி தோஷம் என்பதனை விடக் கொடியது. ராவணேஸ்வரனைக் கொன்ற ராமனும் சூரபத்மன் என்ற கொடியவனை அழித்த முருகனுமே பிரம்மஹத்தி தோஷத்திற்கு பயந்து பல பரிகாரங்கள் செய்தனர் என்கின்றனர். முனிவர்களும், சித்தர்களும் அப்படிப்பட்ட தோஷத்தைவிடகொடுமையானது பித்ருதோஷம். அதை அறவே அழிக்க வல்லவர் ஆதித்ய பெருமான்.
 பற்பல தலங்களில் சூரிய பகவான் கோயில் கொண்டிருந்தாலும், திருமங்கலக்குடிஎன்ற நாகபூமியில் சூரியன், நவநாயகர்கள் படை சூழ கம்பீரமாக வீற்றிருக்கிறார். பக்தர்களை காப்பதற்காக சப்தம் என்ற ஏழு வர்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகளைக் கொண்டு ஒற்றை சக்கரத்தை உடைய, அச்சு இல்லாத தேரில், தாமரை மலரை கையில் தாங்கி, பக்தர்கள் குறைகளை குருபகவான் எடுத்துரைக்க, மேற்கு நோக்கி, திருமகள் அம்சமுடைய உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் காட்சி தர, ஏனைய கிரஹாதி தேவர்கள், மூலவரான சூரியனைச் சுற்றி வருகின்றனர். சனிப்பெயர்ச்சியால் எற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை சிவன்-பார்வதிமுருகருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து பின் சூரியனாரை மனமுருக பிரார்த்தித்தால் எப்படிப்பட்ட சனி தோஷமும் விலகும்.
  சுக்ரீவன், அனுமனுடன் இந்த தலத்திற்கு வந்து சாந்தி செய்து, ராமனின் உதவியுடன் வாலியை வீழ்த்தி, தனது மனைவியோடு நாட்டையும் மீட்டான் என்கின்றனர். ரத, சப்தமி, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி நாட்களிலும் இரகு கேது ப்ரீதி போன்றவற்றிற்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று ஆதறிக்க வேண்டிய தலமே இந்த சூரியனார் கோயில்.
    கச்சப மகரிஷி, தனது தவத்தின்போது நாரயாணரை நினைத்துஓம்என்றார். அப்போது அவர் முன் தோன்றியவர்கள் சூரியன், யமதர்மராஜன், வைவஸ்வத மனு ஆகிய மூவருமே அதாவது ஓம் என்ற ஒலியில் தோன்றியவர் சூரியன்.இந்த சூரியனுக்கு, யமுனை நதியே மகளாகிறாள். யமுனை நதியோடு பின்னிப் பிணைந்து கிருஷ்ணவாதாரம். இந்த சூரியனாரின் கோயிலில் உள்ள சூர்ய புஷ்பகரினணி என்ற தீர்த்தத்தில் நீராடினால், யமுனை நதியில் நூற்றி எட்டு முறை நீராடியதற்கு சமம் என்கின்ற கலி தீர்த்த விநாயகர் பக்தர்கள் குறைகளைக் கேட்டு சூரியனாரிடம் சொல்வார். இது ஒவ்வொரு ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவதால் இந்த நாட்களில் சூரியனார் கோயிலுக்குச் செல்வதும் ஆவணி மாதத்தில் வரும் கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராட நட்சத்திர நாட்களில் சூரியனாரை வழிபடுதலும் நல்ல பலன் தரும் என்கிறார்.
   இந்த தலத்திற்குபஞ்சமங்கள சேஷத்திரம்என்ற நாரதர் கூறுவதாக நாடி சாஸ்திரம் பேசுகிறது. ஆதித்ய ஹருதய ஸ்தோத்திரம். அனுமன் சாலீசா போன்ற ஸ்லோகங்களை இந்த பஞ்சமங்கள சேஷத்திரத்தில் அமர்ந்து 12 முறை பாராயணம் செய்தால், களத்திர தோஷம் நீங்கும். விவாகம், புத்திர, கல்வி, உத்யோகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களும் முற்றிலுமாக களையப்படும்.
  காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி தாயாரையும் பிரார்த்தித்த பின், சூரிய காயத்ரியை நூற்றி எட்டு முறை உச்சரித்தப்படி தாமரை மலர்களை சமர்ப்பித்து பெரும் நல்விளைவுகளில் சூரிய உதய நேரத்தில் பாராயணம் செய்தால் அஷ்டம் சனி, ஏழரைச் சனி, கண்டகச் சனி போன்ற 12விதமான சனி தோஷங்கள் நிவாரணம் ஆவதுடன் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.

No comments:

Post a Comment