Sunday, September 6, 2015

தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் கருவேல மரங்களை வேரோடு அகற்ற தனி திட்டம் வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கு தனித்திட்டம் வகுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை வைகை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடக்கோரி மதுரை கிருஷ் ணாபுரம் காலனியை சேர்ந்த சி.ஆனந்தராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த ஜன. 9-ல் விசாரணைக்கு வந்தபோது, வைகை நதியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை 4 வாரத்தில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கருவேல மரங்கள் அகற்றப்படாததால் தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி ஆனந்தராஜ் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல், தாமிரபரணி ஆற்றில் சீமை கருவேல மரங் களை அகற்றக்கோரி வைகுண் டத்தை சேர்ந்த எஸ்.கண்ணன் விஸ்வநாத் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தாமிரபரணி ஆறு கருவேல மரங்கள், குப்பை மற்றும் அனைத்துவிதமான கழிவு களால் அதன் அழகை இழந்து வருகிறது. தாமிரபரணி ஆறு வழி யாகவே அனைத்து அதிகாரிகளும் தினமும் செல்கின்றனர். இருப்பி னும் தாமிரபரணி ஆற்றை மாசு படுத்துவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவ தில்லை. கருவேல மரம் நீரை மாசுபடுத்தி வருகிறது. இந்த மரங்களால் நீரின் போக்கு மாறி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின் றன. எனவே, தாமிரபரணி ஆற்றில் உள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.
அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, நீர் நிலைகளில் கருவேல மரங்களை அகற்ற படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின் வைகை ஆற்றில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு: கருவேல மரங் களை அகற்றுவது தொடர்பாக பொதுப்பணித் துறை செயலர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கருவேல மரங்களை அகற்றுவதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேரோடு அகற்றுவது தொடர்பாக தலைமைச் செயலர், வனத்துறை முதன்மை செயலர், பொதுப்பணித் துறை செயலர் ஆகியோர் தனித்திட்டம் ஒன்றை உருவாக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக செப். 14-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். http://tamil.thehindu.com/tamilnadu/81/article7525152.ece
also check counter article in http://elakumana.blogspot.in/2014/07/blog-post.html

No comments:

Post a Comment