Sunday, June 16, 2013

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் 16 வகை மூலிகை ஹோமம்



சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கீழப்பாவூர் பிரசன்னவெங்கடாஜலபதி கோயிலில்நரசிம்ம பெருமாள் 16 வகை மூலிகைகளால் ஹோமம் நடக்கிறதுகீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோயிலில் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். 1100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்த கோயில்.

மாதந்தோறும் சுவாதி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. மாலை 3.30 மணிக்கு நரசிம்மருக்கு 16 வகையான திரவியங்களுடன் மூலிகைகளால் மூல மந்திர ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு இளநீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகமும், கும்ப அபிஷேகமும், விஷேச அலங்காரமும் நடக்கிறது.

நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும்வித்தில் நரசிம்மதீர்த்தக்குளம் கோயிலின் முன் உள்ளது. லட்சுமி தினமும் இக்குளத்தில் நீராடி நரசிம்மரை பூஜிப்பதாக ஐதீகம்.

மூலவர் : ஸ்ரீஅலர்மேல்மங்கா- பத்மாவதி சமேத ஸ்ரீப்ரசன்ன வேங்கடாசலபதி; ஸ்ரீநரசிம்மர்
எங்கே இருக்கிறது?: திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் வரும் ஊர் பாவூர்சத்திரம். நெல்லையில் இருந்து பாவூர்சத்திரத்துக்கு சுமார் 37 கி.மீ.; தென்காசியில் இருந்து பாவூர்சத்திரத்துக்கு சுமார் 16 கி.மீ.! பாவூர்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில், சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழப்பாவூர். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது ஆலயம்.
எப்படிப் போவது?: நெல்லை- தென்காசி சாலையில் பேருந்துகள் அதிகம் உண்டு. இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பாவூர்சத்திரம் நிறுத்தத்தில் நின்று செல்லும். இங்கிருந்து வேறு பேருந்து மூலம் கீழப்பாவூர் செல்ல வேண்டும். 1பாவூர்சத்திரத்தில் இருந்து ஆட்டோ மூலமும் ஆலயத்தை வந்தடையலாம். தென்காசியில் இருந்து சுரண்டைக்கு செல்லும் பேருந்துகள் இந்த வழியே செல்கின்றன.

ஆலய நடை திறப்பு :காலை 7:30 - 10:30- மாலை 5:00 - 7:30

தொடர்புக்கு: 
ஆர். ஆனந்தன், ஆலய அர்ச்சகர்,
39, தமிழ் தெரு, கீழப்பாவூர்,
ஆலங்குளம் தாலுகா,
நெல்லை மாவட்டம். பின்கோடு: 627 806
மொபைல்: 94423 30643

No comments:

Post a Comment